11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு
11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு
- ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
- ஐங்குறுநூறு அடி எல்லை = 3 முதல் 6
- ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் என மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.
- மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசைமுறையில் அமைக்கப்பட்டு, ஒவ்வொருதிணையும் 100 பாடல்களைக் கொண்டுள்ளது.
- ஒவ்வொருதிணையிலுமுள்ள 100 பாடல்களும் பத்துப்பத்துப்பாடல்கள் கொண்ட பத்துப்பகுதிகளாகத் தனித்தனித் தலைப்புகளின் கீழ்ப் பகுக்கப்பட்டுள்ளன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஐங்குறுநூறு பாடியோர்
- மருதத்திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
- நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
- குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
- பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
- முல்லைதிணை பாடல்கள் பாடியவர் = பேயன்
- இதனை பழம்பாடல் பாடல் ஒன்று விளக்குகிறது.
மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு |
ஐங்குறுநூறு தொகுத்தவர்
- ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
ஐங்குறுநூறு தொகுப்பித்தவர்
- ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் = சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து பாடியவர்
- கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.
கபிலர் ஆசிரியர் குறிப்பு
- இவர், “புலனழுக் கற்ற அந்தணாளன்” எனப் புகழப்பட்டவர்.
- வள்ளல் பாரியின் அவைகளப் புலவர்.
- வள்ளல் பாரி மீது அளவற்ற அன்பு கொண்டவர்.
கபிலர் பாடியவை
- குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணைப்பாடல்கள் நூறு, பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்து, கலித்தொகையில் குறிஞ்சிக் கலியிலுள்ள 29 பாக்கள் முதலியன கபிலர் இயற்றியனவாகும்.
- குறிஞ்சிப்பாட்டு நூலின் ஆசிரியர் = கபிலர்.
- பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து பாடியவர் = கபிலர்.
சொற்பொருள்
- எரிமருள்வேங்கை = நெருப்பையொத்த வேங்கைமரம்
- தோகை = மயில்
- வதுவை = திருமணம்
- அயர = நிகழ்த்த
- பின்னிருங்கூந்தல் = பின்னப்பட்ட பெரிய (கரிய) கூந்தல்
இலக்கணக்குறிப்பு
- இருந்ததோகை = பெயரெச்சம்
- மருள் = உவமவுருபு
- இழையணி = வினைத்தொகை
- நாட = அண்மைவிளி
- நுந்தை = நும்தந்தை என்பதன் மரூஉ மொழி
- வாழியர் = வியங்கோள் வினைமுற்று
- நன்மனை = பண்புத்தொகை
- ஆல் = அசைநிலை