11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்
11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்

  • இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய தமிழ் நூல் சீறாப்புராணம்.
  • சீறாப்புராணம்
  • சீறத் என்னும் அரபுச் சொல் தமிழ் மரபிற்கேற்பச் சீறா என்று வழங்கப்பட்டது.
  • சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள்.
  • சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள்.
  • சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = மூன்று.
  • சீறாப்புராணம்
  • இந்நூல் விலாதத்துக் காண்டம் (பிறப்பியற் காண்டம்), நுபுவ் வத்துக் காண்டம் (செம்பொருட் காண்டம்), ஹிஜ்ரத்துக் காண்டம் (செலவியற் காண்டம்) என்ற மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • இந்நூலில் 5027 விருதப்பாக்கள் உள்ளன.
  • பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும் திருமணமும் விலாதத்துக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  • வானவர் ஜிப்றாயில் மூலம் திருமுறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் நுபுவ்வத்துக் காண்டத்தில் பேசப்படுகின்றன.
  • மக்கத்தை விட்டுப் பெருமானார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் ஹிஜ்றத்துக் காண்டத்தில் வரையப்பட்டுள்ளன.
  • சீறாப்புராணம்
  • சீறாப்புரானத்தில் நபிகளின் வல்லவு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.
  • பனூ அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அது “சின்ன சீறா” என வழங்கப்படுகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு

  • உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
  • செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
  • நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
  • பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
  • உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற என்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.

விடமீட்ட படலம்

  • நபிகளின் நண்பர் = அபூபக்கர்
  • இருவரும் தங்கி இருந்த இடம், தௌர் மலைக்குகை.
  • குகையில் இருந்த ஒரு போனதின் வழியாக வந்த பாம்பு அபூபக்கரின் உள்ளங்காலை தீண்டியது.
  • அபூபக்கர் மயக்கம் அடையும் நிலையில் நபிகள் உறக்கம் களைந்து எழுந்து நடந்ததை அறிந்து கொண்டார்.
  • நபிகள் தனது எச்சில் தடவி அபூபக்கரை மீட்டார்.

சொற்பொருள்

  • கான் = காடு
  • நகம் = மலை
  • சிரம் = தலை
  • முழை = குகை
  • வளை = புற்று; பாம்பு தங்கியுள்ள இடம்
  • புரைப்பல் = துளையையுடைய பல்
  • புண்நா = புண்போல் பிளந்த நாக்கு
  • செஞ்சூட்டு = பாம்பின் படம்
  • பாந்தள் = பாம்பு
  • பிடவை = (மார்பைப் போர்த்தியிருந்த) துணி
  • வெருவி = அஞ்சி
  • உளைந்து = மனம் வருந்தி
  • பேதுறா = மனம் கலங்கி (பேதுறல் = மயங்குதல்)
  • பொறி = புள்ளிகள்
  • உரகம், பணி = பாம்பு
  • பருவரல் = துன்பம்
  • நித்திரை = தூக்கம்
  • கடி = மணம்
  • காந்தி = பேரொளி
  • நறை = தேன்
  • பொதுளும் = நிரம்பும்
  • பரல் = கல்
  • இடனற = இடம் இல்லாதவாறு
  • கெந்தம் = பற்கள்
  • வேகம் = சினம்
  • உள்ளந்தாள் = உள்ளங்கால்
  • வாய்விண்டுள = வாயைப்பிளந்து
  • கவ்வியது = பற்றியது
  • அதிர்ப்பொடு = சினத்தோடு
  • மீக்கொண்டு = மிகக்கொண்டு
  • பன்னரும் = சொல்லவியலாத
  • வேகம் = நஞ்சின் வேகம்
  • சென்னி = தலை.
  • மரைமலர் = தாமரைமலர்
  • விதியவன் = இறைவன்
  • புகலும் = சொல்லும்;
  • கோடிகம் = ஆடை
  • கால் = காற்று
  • கான்று = உமிழ்ந்து.
  • பன்னகம் = பாம்பு
  • வரை = மலை
  • தரை = பூமியில்.
  • புடை = வளை, பொந்து
  • நீதமில்லாதவன் = நீதி இல்லாதவன
  • தடிதல் = கொல்லுதல்
  • முரணி = மாறுபட்டு, பகைமைகொண்டு
  • புரையற = குற்றமற
  • மரை = தாமரை (ஈண்டு முகம்)
  • இதழ் = உதடு
  • இகழ்த்துளி = எச்சில்
  • அணுவற் = அணுவளவும் இல்லாமல்
  • கடிந்து = நீக்கி
  • வெவ்விடம் = கொடிய நஞ்சு
  • புதியன் = இறைவன்.

இலக்கணகுறிப்பு

  • செழுந்துயில் = பண்புத்தொகை
  • இகலவர் = குறிப்பு வினையாலணையும் பெயர்
  • திகழ்சிரம் = வினைத்தொகை.
  • துயிலாநின்ற = நிகழ்காலப் பெயரெச்சம்
  • மலைமுழை = ஏழாம் வேற்றுமைத் தொகை
  • குறுவளை, கொடுங்கண், வெவ்வாய், சிறுபொறி = பண்புத்தொகைகள்
  • வெருவி, உளைந்து, கிழித்து, கற்றி, அடைத்து = வினையெச்சங்கள்
  • போர்த்த பிடவை = பெயரெச்சம்
  • பேதுறா = செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
  • இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
  • அறிகிலார் = எதிர்மறை வினையாலணையும் பெயர்
  • மதிமுகம் = உவமத்தொகை
  • கடிநறை = உரிச்சொற்றொடர்
  • மலர்த்தாள் = உவமைத் தொகை
  • அன்றே = அசைநிலை
  • மென்மலர் = பண்புத்தொகை
  • வல்லுடல் = பண்புத்தொகை.
  • சீறிச்சீறி = அடுக்குத்தொடர்
  • படுவிடம் = வினைத்தொகை;
  • பரந்து, தாக்கி = வினையெச்சங்கள்
  • தளராது, பரந்திடாமல் = எதிர்மறை வினையெச்சங்கள்.
  • மரைமலர் = முதற்குறை
  • என்ன = உவமவுருபு
  • மதி = முகத்துக்குஆகி வந்தது உவம ஆகுபெயர்
  • துளைப்பல் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • அருமறை = பண்புத் தொகை
  • நின்றோன் = வினையாலணையும் பெயர்
  • நெடும்புடை = பண்புத் தொகை
  • நினைத்தவர், தடுப்பவர் = வினையாலணையும் பெயர்கள்
  • செம்மலர் = பண்புத் தொகை
  • செழும்புகழ் = பண்புத்தொகை
  • மலர்த்தாள் = உவமைத் தொகை
  • மரை = தாமரை, முதற்குறை
  • வெவ்விடம் = பண்புத் தொகை.
  • செங்கதிர் = பண்புத் தொகை
  • மின்னு செங்கதிர் = வினைத் தொகை

 

  • 11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்
  • 11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்
  • 11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்
  • 11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்

Leave a Reply