11 ஆம் வகுப்பு புறநானூறு
11 ஆம் வகுப்பு புறநானூறு
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு
- இதனை புறப்பாட்டு, புறம் எனவும் வழங்குவர்.
- இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
- புறநானூற்றின் பாவகை = அகவற்பா.
- இந்நூலில் உள்ள பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியில் வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பட்டவையாகும்.
- புறநானூற்றில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
6.3x
புறத்திணைகள் 12
- புறநானூற்றுப் பாடல்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என வழங்கப்பெறும் புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் கொண்டு அமைந்தவையாகும்.
- புறநானூற்றில் கூறப்பட்டுள்ள மொத்த துறைகள் = பனிரெண்டு.
புறநானூறு நூல் சிறப்புகள்
- முடியுடை மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப் புலவர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளும், அக்காலத்துள்ளாருடைய நடை முதலியனவும் இந்நூலால் நன்கு புலப்படும்.
- இந்நூலின் சில பாடல்களை அறிஞர் ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
பரணர் ஆசரியர் குறிப்பு
- வரலாற்றுக் குறிப்புகளைக் பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர் = பரணர்.
- கபிலர் போல மிக்க புகழுடன் வாழ்ந்தவர்.
- கபிலபரணர் என்னும் தொடரால் இது விளங்கும்.
- இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர்.
- பதிற்றுப்பத்தில் பரணர் பாடிய பத்து = ஐந்தாம் பத்து.
வள்ளல் பேகன்
- வையாவிக்கோபெரும்பேகன் குறுநில மன்னன் ஆவான்.
- பேகன் கடையெழு வள்ளல்குளுள் ஒருவன்.
- காண மஞ்னஞக்குக் கலிங்கம் நல்கியவன்.
- பேகனின் நாடு = மலைநாடு.
- பேகனின் ஊர் = நல்லூர்.
- பேகனது குடி = ஆவியர் குடி.
பாடாண் திணை என்றால் என்ன
- ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவது பாடாண் திணையாகும்.
பாடாண் திணையின் நோக்கம் என்ன
- பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுக்கலாற்றைக் கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.
இயன்மொழி துறை என்றால் என்ன
- ஒரு வேந்தன் எதிர்ச் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும்.
- ஒருவனின் இயல்பைப் புகழ்ந்து கூறி வாழ்த்துவது இத்துரையின் உயிர்ப்பாகும்.
கொடைமடம் என்றால் என்ன
- கொடைமடம் = வரையறை இன்றிக் கொடுத்தலாகிய இயல்பு
- கொடைமடம் என்பது இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடு இன்றி வரையாது கொடுத்தல்.
படைமடம் என்றால் என்ன
- படைமடம் = போர் நெறிக்கு மாறுபட்டுப் போர் புரிதலாகிய இயல்பு.
- படைமடம் என்பது வீரர் அல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தோர் இளையோர் மேலும் செல்லுதல்.
சொற்பொருள்
- அறுகுளம் = நீர் வற்றிய குளம்.
- உகுத்தும் = பெய்தும்
- உறுமிடத்து உதவாது = குளம், வயல் ஆகிய பொருத்தமான இடத்துப் பெய்யாது
- உவர்நிலம் = களர்நிலம்
- ஊட்டியும் = சாலப் பெய்தும்
- வரையாமரபு = எல்லையிடாத முறைமை
- கடாஅயானை = மதக்களிறு
- கழற்கால் = வீரக்கழல் அணிந்த கால்கள்
- படான் = (போர்) செய்யான்
- மாரி = மழை
இலக்கணக்குறிப்பு
- அறுகுளம், அகல்வயல் = வினைத்தொகை
- வரையா மரபு = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- கடாஅ = இசைநிறை அளபெடை
- கழற்கால் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
- வேலைகளல்ல வேள்விகளே!
- சிவபெருமான்
- திருமால்
- புத்தர் பிரான்
-
- அருகன்
- 11 ஆம் வகுப்பு புறநானூறு
- 11 ஆம் வகுப்பு புறநானூறு
- 11 ஆம் வகுப்பு புறநானூறு
-