11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை
11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை
- பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் மூத்தவர் இவர்.
- ஊர் = மதுரை மாவட்டம் பெரியகுளம்
- பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
- பிறந்ததேதி = 07-10-1920
- இயற்பெயர் = துரைராசு
- பாரதிதாசனோடு நெருங்கிப் பழகி அவரின் முற்போக்கு எண்ணங்களை ஏற்று பாடியவர்.
- தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
- காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
- தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
முடியரசன் சிறப்புகள்
- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
- நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம்
- இவரின் கவிதைகளை சாகித்திய அகாதமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
- பூங்கொடி என்னும் காவியம் 1966 ஆம் ஆண்டு தமிழக அரசின் பரிசை பெற்றது.
- பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
சொற்பொருள்
- ஈர்க்கின்ற = கவர்கின்ற
- புலம் = அறிவு
- புல்லடிமை = இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்
இலக்கணக்குறிப்பு
- பூக்கின்ற, ஈர்க்கின்ற = பெயரெச்சம்
- செங்கதிர் = பண்புத்தொகை
- புல்லடிமை = பண்புத்தொகை
- காகிதப்பூ = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை