11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து
11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து
வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக் கையி னாலுரை கால மிரிந்திடப் பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் – பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் |
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் ஆசிரியர் குறிப்பு
- பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் தஞ்சை மாவட்டம் பள்ளியகரத்தில் பிறந்தவர்.
- பிறந்த தேதி = 09-06-1898.
- பெற்றோர் = நீலமேகம் பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்.
- இவர் ஒரு பன்மொழிப் புலவர்.
- பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்ற அவர், தன் சொந்த முயற்சியாலும், பல்வேறு அறிஞர் பெருமக்கள் தொடர்பாலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து பெரும்புலவராக விளங்கினார்.
- மேலும் அவர் தாமே முயன்று ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளைக் கற்று அம்மொழிகளிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
- கரந்தைத் தமிழ் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராகத் விளங்கினார்.
- ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நுால்களைப் படைத்துள்ளார்
- தாமஸ்கிரே என்பார் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில் “இரங்கற்பா” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்தார்.
- தமிழறிஞர்களின் பெருமதிப்பிற்குரியவராய்த் திகழ்ந்த நீ. கந்தசாமிப்புலவர் அவர்கள் 18.06.1977 இல் மறைந்தார்.
சொற்பொருள்
- வையம் = உலகம்
- தொன்மக்கள் = பழங்காலத்து வாழ்ந்த மக்கள்
- உளத்தினை = தம் மனக்கருத்தை
- இரிந்திட = விலகிட
- பைய = மெல்ல
- தாள் = திருவடி
- ஐயை = தாய்
இலக்கணக்குறிப்பு
- தொன்மக்கள் = பண்புத்தொகை
- உள்ளம் = ஆகுபெயர்
- உரைகாலம் = வினைத்தொகை
- பழந்தமிழ் = பண்புத்தொகை
- ஐயைதாள் = ஆறாம் வேற்றுமைத் தொகை
- தாள் தலை = இரண்டாம் வேற்றுமைத்தொகை
- 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 11 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 11 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 9 ஆம் வகுப்பு தமிழ்
- 8 ஆம் வகுப்பு தமிழ்
- 7 ஆம் வகுப்பு தமிழ்
- 6 ஆம் வகுப்பு தமிழ்