11TH TAMIL புரட்சிக்கவி

11TH TAMIL புரட்சிக்கவி

11TH TAMIL புரட்சிக்கவி
11TH TAMIL புரட்சிக்கவி

11TH TAMIL புரட்சிக்கவி

  • அரசனின் மகள் = அமுதவல்லி
  • அமுதவல்லிக்கு கவிதை கலையை கற்று தருபவன் = உதாரன்
  • அமுதவல்லியும் உதாரனும் காதல் கொள்கின்றனர்.
  • அவர்கள் இருவருக்கும் அரசன் மரண தண்டனையை வழங்குகிறான்.

அருஞ்சொற்பொருள்

  • ஓதுக – சொல்க
  • முழக்கம் – ஓங்கி உரைத்தல்
  • கனிகள் – உலோகங்கள்
  • மணி – மாணிக்கம்
  • படிகம்-பளபளப்பானகல்
  • படி – உலகம்
  • மீட்சி – விடுதலை
  • நவை – குற்றம்

இலக்கணக்குறிப்பு

  • ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
  • அலைகடல் – வினைத்தொகை
  • தமிழ்க்கவிஞர் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • பேரன்பு, நெடுங்குன்று – பண்புத்தொகைகள்
  • ஒழிதல் – தொழிற்பெயர்
  • உழுதுழுது – அடுக்குத்தொடர்

பிரித்து எழுதுக

  • நீரோடை = நீர் + ஓடை
  • சிற்றூர் = சிறுமை + ஊர்
  • கற்பிளந்து = கல் + பிளந்து
  • மணிக்குலம் = மணி + குலம்
  • அமுதென்று = அமுது + என்று

புரட்சிக்கவி

  • வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி, தமிழில் பாரதிதாசனால் 1937இல் எழுதப்பட்டது புரட்சிக்கவி.
  • பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாகக் கனக சுப்புரத்தினம் என்னும் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர்.
  • குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர்.
  • ‘குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.
  • இவருடைய ‘பிசிராந்தையார் நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.
  • தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.

மொழிபெயர்ப்பு என்றால் என்ன

  • ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு ஆகும்.

மொழிபெயர்ப்பின் வகைகள்

  • மொழிபெயர்ப்பின் வகைகள் = தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர் மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • தமிழில் இருந்து பிற மொழிக்கு மொழிபெயர்ப்பு
    • ஏ.கே. இராமானுஜம் = Love Poems from a Classical Tamil Anthology
    • ம.லெ.தங்கப்பா = Hues and Harmonies From an Ancient Land
  • பிற மொழியில் இருந்து தமிழுக்கு
    • “உலகக் கவிதைகள்” – தொகுப்பு:- பிரம்மராஜன்

 

 

மரபு கவிதைகள்

Leave a Reply