11TH TAMIL நாடகக்கலை
11TH TAMIL நாடகக்கலை
- நாடகத்தின் அடிப்படை அலகு = உரையாடல்.
- நாடகம் என்னும் இலக்கிய வடிவத்தை உருவாக்குவது = உரையாடல்.
- உரையாடல் + காட்சி + அங்கம் = ஆகிய மூன்றும் இணைந்தது நாடகம்
அங்கம் என்றால் என்ன
- நாடகத்தின் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவு = அங்கம் எனப்படும்.
- நாடகத்தின் கதையை “ஐந்து அங்கங்களாக” பிரிப்பர்.
- ஓர் அங்கம் மட்டும் உள்ள நாடகம் “ஓரங்க நாடகம்” என்பர்.
- ஒரே அங்கத்திற்குள் தொடக்கம், வளர்நிலை, முடிவு என்று அமைக்கும் நாடகங்கள் = ஓரங்கநாடகங்கள்
- நாடகத்தில் ஈரங்கம என்ற அமைப்பு இல்லை.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நாடகத்தின் புறகட்டமைப்புகள்
- நாடகத்தின் புறகட்டமைப்புகள் எனப்படுபவை = உரையாடல், காட்சி, அங்கம்
நாடகத்தின் அகக்கட்டமைப்புகள்
- நாடகத்தின் அகக்கட்டமைப்புகள் மொத்தம் = 6.
- நாடகத்தின் அகக்கட்டமைப்புகள் = தொடக்கம், மோதல், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு.
- நாடகத்தின் முதற்காட்சி தான் = தொடக்கம்
- நாடகத்தின் வளர்ச்சி நிலைக்கு அடிப்படையாக அமைவது = முரண்பாடு அல்லது மோதல்.
- நாடகத்தின் உயிர்நிளையாக அமைவது = கதைக்கரு
ஆர்வத்தொக்கல் என்றால் என்ன
- நாடகத்தில் ஆர்வத்தொக்கல் என்பது, ஆங்கிலத்தில் “suspense” என்று குறிப்பர்.
- நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளர்களிடம் ஆர்வத்தைத் தூண்டும் ஓர் உத்தியாக ஆர்வத்தொக்கலை கூறுவர்.
- ஆர்வத்தொக்கல் என்பது, உச்சம் நோக்கி ஒரு நாடகத்தின் கதையை நகர்த்திச் செல்வதற்கான ஓர் உத்தி ஆகும்.
நாடகத்தில் உச்சம் என்றால் என்ன
- உச்சம் என்பது, நாடகத்தின் இறுதிக் காட்சியமைப்பாகும்.
- ஆர்வத்தொக்கலை முடிவுக்கு கொண்டு வரும் இடம் = உச்சம்
நாடகக்கலை பற்றி சிலப்பதிக்கரம்
- தமிழின் முதல் காப்பியம் = சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரத்தில் நாடகக்கலை பற்றி கூறும் காதை = அரங்கேற்றுக்காதை
- சிலப்பக்காரத்தின் அரங்கேற்றுக்காதையில் அரங்குகள் அமைய வேண்டிய முறை, அரங்கின் உயரம், திரைச்சீலைகளின் வகைகள், தூண்களின் நிழலைக்காட்டாது விளக்குகளை அமைக்கும் முறை ஆகியவை விளக்கப்பட்டுள்ளது.
நாடக திரைச்சீலைகள் எத்தனை வகைப்படும்
- நாடக திரைச்சீலைகளின் வகைகளை கூறும் நூல் = சிலப்பதிகாரம்
- நாடக திரைச்சீலைகள் மூன்று வகைப்படும்.
- ஒருமுக எழினி
- பொருமுக எழினி
- கரந்துவரல் எழினி
ஒருமுக எழினி |
ஒரே பக்கத்தில் திரை இழுக்கப்படுவது |
பொருமுக எழினி |
இருபக்கமும் திரையை திறக்கின்ற வகையில் அமைப்பது |
கரந்துவரல் எழினி |
மேலிருந்து கீழே இறங்கும் வகையில் திரையை அமைத்தல் |
ஒருமுக எழினி என்றால் என்ன
- நாட மேடையில் ஒரே பக்கத்தில் திரை இழுக்கப்படுகின்ற வகையில் அமைக்கப்படும் திரைச்சீலை ஒருமுக எழினி எனப்படும்.
பொருமுக எழினி என்றால் என்ன
- நாடக மேடையில் இருபக்கமும் திரையை இழுக்கின்ற வகையில் அமைக்கப்படும் திரைச்சீலை பொருமுக எழினி எனப்படும்.
கரந்துவரல் எழினி என்றால் என்ன
- நாடக மேடையில் மேலிருந்து கீழே இறங்குகின்ற வகையில் அமைக்கபடும் திரைச்சீலை கரந்துவரல் எழினி எனப்படும்.
நாடக அரங்குகளின் வகைகள்
- நாடக அரங்குகளை, அரங்கத்தில் பார்வையாளர்களை அமரவைக்கின்ற நிலையையும், காட்சிகள் நடத்தும் இடத்தையும் கருத்தில் கொண்டு எட்டு வகைகளாக பிரிப்பர்.
- நாடக அரங்குகள் எட்டு வகைப்படும். அவை,
- படச் சட்ட அரங்கம்
- வட்ட வடிவ அரங்கம்
- அரை வட்ட வடிவ அரங்கம்
- சதுர அரங்கம்
- செவ்வக அரங்கம்
- முக்கோண அரங்கம்
- அண்மை அரங்கம்
- திறந்தவெளி அரங்கம்