11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன்

11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன்

11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன்
11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன்

11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன்

  • தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களுள் ஒன்று = கூத்துக்கலை.
  • தெருவில் நடத்தப்படும் கூத்து என்பதால், இது தெருக்கூத்து என அழைக்கப்படுகிறது.
  • பார்வையாளர்களுக்குக் கதை சொல்லல், நடித்தல், ஆடல், பாடல் எனப் பல கலைத்தன்மைகள் சேர்ந்த ஒன்றே கூத்துக்கலை.

களரிகட்டுதல் என்றால் என்ன

  • கூத்து தொடங்கும் முன் அரைமணி நேரத்திற்கு மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்தும் ஒரு சேர ஒலிக்கும்.
  • இவ்வொலி, ஊராரை அழைப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • இதனைக் களரிகட்டுதல் என்பர்.
  • தென்னாற்காடு மாவட்டத்தில் இதனைத் தாளக்கட்டு என்பர்.

கட்டியக்காரன்

  • தெருக்கூத்தில் களரி கட்டுக்குப் பிறகு, பார்வையாளர்கள் முன் தோன்றுகிற, குறிப்பிடத்தக்க முதல் கதைமாந்தனைக் கட்டியக்காரன் என அழைக்கிறோம்.
  • கட்டியக்காரன், கூத்துக்களில் தன்னை அறிமுகப்படுத்துவதுடன் அவையோரை ஆயத்தம் செய்தல், கதைமாந்தர்களை அறிமுகப்படுத்தல், கதையை விளக்குதல், கதைமாந்தர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துதல், கூத்தின் ஒழுங்கமைப்பையும் காட்சி நிகழ்வுகளையும் எடுத்துக்கூறல், முக்கியத்துவம் மிகுந்த கதைமாந்தர்களுடன் உரையாடுதல், விமர்சனம் செய்தல், பார்வையாளர்களுடன் ஊடாடுதல் போன்ற செயற்பாடுகளைச் செய்யும் கதைமாந்தன் ஆவான்.

கட்டியக்காரன் வேறு பெயர்கள்

  • கட்டியக்காரன் கோமாளி, காவற்காரன், பஃபூன், சபையலங்காரன், விதூஷகன் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறான்.
  • கட்டியம் என்றால், அரசன் முன் புகழ்மொழி கூறுதல் என்று பொருள்.
  • தெருக்கூத்துக் கதைமாந்தர்களின் அருமை பெருமைகளைச் சொல்லிப் பார்வையாளர்களுக்கு அவர்களை அறிமுகப் படுத்துவதாலும் கட்டியக்காரன் எனப் பெயர்பெற்றுள்ளான்.

ஸ்பெஷல் நாடகங்கள்

  • தமிழகத்தின் வடபகுதிகளில் நடைபெறுவது = தெருக்கூத்து
  • தமிழகத்தின் தென்பகுதிகளில் நடைபெறுவது = ஸ்பெஷல் நாடகங்கள்
  • தமிழகத்தில் ஸ்பெஷல் நாடகங்களை அறிமுகம் செய்தவர் = சங்கரதாசு சுவாமிகள்.

Leave a Reply