12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம்
12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம்
- இறைவனின் பதமலர்களை வழுத்துவார் எல்லா நலங்களும் அருளப் பெறுவார் என்று வாழ்த்தும் இப்பாடல் சீறாப்புராணத்தினின்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளது
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு
- சீறாப்புராணத்தைத் தமிழ் மரபுக் கேற்பப் பெருங்காப்பியமாகச் செய்தளித்தவர் உமறுப்புலவர் ஆவார்.
- இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாகலாபுரம் என்னும் ஊரினர்.
- இவர் தந்தையார் செய்குமுகமது அலியார் என்னும் சேகு முதலியார் ஆவர்.
- எட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராக விளங்கிய கடிகை முத்துப் புலவரின் மாணவராகவும் அவர்மறைவிற்குப்பின் எட்டயபுர அவைப்புலவராகவும் விளங்கியவர்.
- இவர் காலம் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு.
- சீறாப்புராணம் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கிணங்கி எழுதப் பெற்றது.
- நூல் முற்று முன்பே சீதக்காதி மறைந்தமையால் வள்ளல் அபுல் காசிம் என்பார் புரந்தளிக்கச் சீறாப்புராணம் நிறைவு செய்யப்பட்டது.
- எனினும் அண்ணலார் வரலாறு முழுவதும் சீறாவில் நிறைவு செய்யப்படவில்லை என்பதும் பனுஅகுமது மரைக்காயர் என்பார் எழுதி முடித்தார் என்பதும் ‘அது சின்னச் சீறா’ என்று வழங்கப்படுகிறது என்பதும் குறிக்கத்தக்கன.
- உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.
திருக்கடைக்காப்பு என்றால் என்ன
- பாடலின் இறுதியில் மங்கலங்கூறி நிறைவு செய்வதனை “திருக்கடைக்காப்பு” என்பர்.
- திருக்கடைக்காப்பு என்பதனை “பலச்ருதி” என்றும் கூறுவர்.
சொற்பொருள்
- பொறி = ஒளிப்பிழம்பு
- வடிவார் = வடிவினையுடையார்
- நவியார் = நபிகள் நாயகம்
இலக்கணக்குறிப்பு
- மெய்ப்பொருள் = இருபெயரொட்டு பண்புத்தொகை
- சுவர்க்கபதி = இருபெயரொட்டு பண்புத்தொகை