12 ஆம் வகுப்பு அருகன்
12 ஆம் வகுப்பு அருகன்
- அருகதேவனை பற்றி கூறியுள்ள இந்நூல் நீலகேசியாகும்.
- சீவக சிந்தாமணிக்கு நிகராக கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் விவரம் தெரியவில்லை.
- இந்நூல் “நீலகேசித் தெருட்டு” என்றும் அழைக்கப்படும்.
- அருகசமயப் பெண்துறவியாகிய நீலகேசி என்பாள் அருகன் திருக்கோயிலையடைந்து அருகதேவனின் ஆயிரத்தெட்டுத் திருப்பெயர்களால் பாடிப்பரவினான்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சொற்பொருள்
- சாமரை = சாமரம் ஆகிய வெண்கவரி
- புடைபுடை = இருமருங்கினும்
- இயக்கர் = கந்தருவர்
- இரட்ட = அசைக்க
- சிங்கவாசனம் = அரியணை
- ஆசனம் = இருக்கை
- திருந்தவை = நல்லிணக்கமுடைய சான்றோர் கூட்டம்
- ஒளிமண்டிலம் = ஆலோகம், பிரபாமூர்த்தி, கனப்பிரபை என்னும் திருவொளி மண்டிலங்கள் மூன்று.
- நிழற்ற = ஒளிர
- முக்குடை = சந்திராதித்தம், சகலாபாசனம், நித்தவிநோதம் என்னும் மூன்று குடைகள்; (இம்மூன்று ஒளிமண்டிலங்களும், மூன்று குடைகளும் அருக தேவனுக்கு உரியன என்பர்)
- சந்திராதித்தம் = முத்துக்குடை
- சகலாபாசனம் = பொற்குடை
- நித்தவிநோதம் = மணிக்குடை
- அங்கம் = அங்காகமம்
- பூவம் = பூர்வாகமம் (பூர்வாகமம் அங்காகமம், பிரகீர்ணவாகமம் என்னும் இம் மூன்றும் அருக தேவனின் ஆகமங்களாம் என்றறிக)
இலக்கணக்குறிப்பு
- புடை புடை = அடுக்குத்தொடர்
- பொங்கு தாமரை = வினைத்தொகை
- இரட்ட, நிழற்ற, கவிப்ப, தெருள = செயவென் வாய்பாட்டு வினைஎச்சங்கள்
- முக்குடை = பண்புத்தொகை