12 ஆம் வகுப்பு காடு

12 ஆம் வகுப்பு காடு

12 ஆம் வகுப்பு காடு
12 ஆம் வகுப்பு காடு

12 ஆம் வகுப்பு காடு

  • ‘பாரதிதாசன் பரம்பரை’ என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர் கவிஞரேறு வாணிதாசன்.
  • புதுவையையடுத்த வில்லியனூரில் 22-7-1915 இல் அரங்க திருக்காமு – துளசியம்மாள் இணையர்க்கு மகவாகப் பிறந்தார்.
  • இவர்க்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும்.
  • இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்.
  • அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட ‘புதுத்தமிழ்க் கவிமலர்கள்’ என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
  • இவர் பிரெஞ்சுமொழியிலும் புலமை பெற்றவர்.
  • ‘தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
  • பிரெஞ்சுக் குடியரசுத்தலைவர் இவருக்கு ‘செவாலியர்’ என்ற விருதினை வழங்கி உள்ளார்.
  • மேலும் ‘கவிஞரேறு, பாவலர் மணி’ முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம்.
  • எனவே இவரைத் ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்’ என்று பாராட்டுகின்றனர்.
  • கவிஞரேறு வாணிதாசன் 7-8-1974 இல் இயற்கை எய்தினார்.

காடு

  • இப்பாடல் எழிலோவியம் என்ற நூலின்கண் விளங்குகின்றது.

அருஞ்சொற்பொருள்

  • ஒற்றைப்பாட்டை = ஒற்றைப்யடிப்பாதை
  • வெய்யோன் = கதிரவன்
  • புரையோடி = உள்ளுக்குள் அரிக்கப்பட்டு
  • முதல் = வேர் (இங்கே அடிமரம்)
  • செல் = ஒருவகைக் கரையான்
  • சோங்கி = வாட்டமுற்று.

இலக்கணக்குறிப்பு

  • முட்புதர் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • உயர்மரம் = வினைத்தொகை
  • வெய்யோன் திங்கள்= உம்மைத் தொகை
  • முதிர்மரம் = வினைத்தொகை
  • கள்ளிப்புதர் = ஆறாம் வேற்றுமைத் தொகை.

Leave a Reply