12 TAMIL அகநானூறு
12 TAMIL அகநானூறு
- மக்கள் வாழும் சூழலுக்குத் தக்கவாறு அமையக்கூடிய தன்மை உடையது தொழில்
- ஆண்களும் பெண்களும் வணிகம் செய்த செய்தியை சங்கப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.
அருஞ்சொற்பொருள்
- வேட்டம் = மீன் பிடித்தல்
- கழி = உப்பங்கழி
- செறு = வயல்
- கொள்ளை = விலை
- என்றூழ் = சூரியனின் வெப்பம்
- விடர் = மலை வெடிப்பு
- கதழ் = விரைவு
- உமணர் = உப்பு வணிகர்
- எல்வளை = ஒளிரும் வளையல்
- தெளிர்ப்ப = ஒலிப்ப
- விழிஅறி = குரல் கேட்ட
- ஞமலி = நாய்
- வெரீஇய = அஞ்சிய
- மதர்கயல் = அழகிய மீன்
- புனவன் = கானவன்
- அள்ளல் = சேறு
- பகடு = எருது
பாடலில் வந்த உள்ளுறை
- எருதைத் தலைவனுக்கும்
- தந்தையைப் பாங்கனுக்கும்
- உப்ப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக அமைக்கப்பட்டுள்ளது
இலக்கணக்குறிப்பு
- பெருங்கடல் = பண்புத்தொகை
- உழாஅது = செய்யுளிசை அளபெடை
- வெரீஇய = சொல்லிசை அளபெடை
பிரித்து எழுதுக
- பெருங்கடல் = பெருமை + கடல்
அளம்
- பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது.
- உப்பு விளையும் களத்திற்கு “அளம்” என்று பெயர்
- பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உப்பிற்கு பண்டமாற்றாக பெற்றவர்கள் = உமணர்கள்
உப்பங்கழி
- கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதி = “உப்பங்கழி”
- கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடம் = உப்பளம்
அகநானூறு நூல் குறிப்பு
- பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு ஆகும்.
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூல் 3 பிரிவுகளை உடையது. அவை
- களிற்றுயானை நிரை = 120 பாடல்கள
- மணிமிடை பவளம் = 180 பாடல்கள்
- நித்திலக்கோவை = 100 பாடல்கள்
- அகப்பாடல்களை மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் = அம்மூவனார்
- இவர் நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
- இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.
-
அகநானூறு பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்