12 TAMIL இதில் வெற்றிபெற
12 TAMIL இதில் வெற்றிபெற
- “இதில் வெற்றிபெற” என்னும் இக்கவிதையில் இடம்பெற்றுள்ள பா வகை = எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உரைநடை எழுதும் முறையும் கவிதை எழுதும் முறையும் வேறு வேறு.
- உரைநடை = மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது
- கவிதை = சொற்களுடன் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைப்பது.
- சிறந்த படைப்புகள் உருவாக பெரும் துணையாக இருப்பது = கல்வி
- அடியின் கீழே அடியிருந்தால் வருவது = தொடை
- இரண்டு சீரின் இடைவெளியில் வருவது = தளை
- பல தளைகள் சேர்வது = அடி
- வெள்ளைப்பாட்டின் இறுதிச்சீர் தருவது = காசு
- கவிதை எழுத அறிந்துக் கொள்ள வேண்டியது = அசை, சீர், தலை, அடி, தொடை
சுரதா ஆசிரியர் குறிப்பு
- கவிஞர் சுரதாவின் “துறைமுகம்” என்னும் கவிதைத் தொகுப்பில் இருந்து “இதில் வெற்றிபெற” என்னும் இக்கவிதை எடுக்கப்பட்டுள்ளது
- சிறப்பு பெயர் = உவமைக் கவிஞர்
- இயற்பெயர் = இராசகோபாலன்
- பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் “சுப்புரத்தினதாசன்” என்று மாற்றி, அதன் சுருக்கமான “சு-ர-தா” என்னும் பெயரில் மரபுக் கவிதைகளை எழுதினார்
- காவியம் = முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட “காவியம்” என்ற இதழை நடத்தினார்
- “இலக்கியம், வின்மீனம் ஊர்வலம்” = என்ற தலைப்புகளில் இலக்கிய ஏடுகளை நடத்தினார்
- நூல்கள் = தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்
- விருதுகள் = தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இராசராசன் விருது
உவமைக் கவிஞர் சுரதாவை பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் |