12 TAMIL தேவாரம்
12 TAMIL தேவாரம்
- திருவிழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூர். இவ்வூர் சென்னை மாநகரின் ஒரு பகுதியாகும்.
- இறைவனுக்கு கொண்டாடப்படும் பங்குனி உத்திர விழா அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது
அருஞ்சொற்பொருள்
- மலிவிழா = விலக்கல் நிறைந்த
- மடநல்லார் = இளமை பொருந்திய பெண்கள்
- கலிவிழா = எழுச்சி தரும் விழா
- பலிவிழா = திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
- ஒலிவிழா = ஆரவார விழா
பாடலின் பொருள்
- இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.
- மயிலை கபாலீச்சரம் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு பூசையிடும் பங்குனி உத்திர விழா ஆகும்.
இலக்கணக் குறிப்பு
- மாமயிலை = உரிச்சொற்றொடர்
பிரித்து எழுதுக
- பூம்பாவாய் = பூ + பாவாய்
மயிலாப்பூரின் சிறப்புகள்
- மடலார்ந்த தெங்கின் மயிலை
- இருள்கற்றும் சோதித் தொன்மயிலை
- கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
- கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
- கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
- மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
- ஊர்திதிரை வேலை உலாவும் உயர்மயிலை
மயிலை பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்
ஐப்பசி |
ஓண விழா |
கார்த்திகை |
விளக்குத் திருவிழா |
மார்கழி |
திருவாதிரை விழா |
தை |
தைப்பூச விழா |
மாசி |
கடலாட்டு விழா |
பங்குனி |
பங்குனி உத்திர விழா |
தேவாரம்
- இப்பாடல், 2 ஆம் திருமுறையில் உள்ள திருமயிலாப்பூர் பதிகத்தில் இடம் பெற்றுள்ளது.
- பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் “திருஞானசம்பந்தர்” பாடிய பாடல்களின் தொகுப்புகள்.
- இவர் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன.
- இப்பாடல்கள் “நம்பியாண்டார் நம்பி” என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.
- இப்பாடல்களுக்கு “தேவாரம்” என்று பெயர்
- சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.
-
பன்னிரு திருமுறைகள் பற்று மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
-
திருஞானசம்பந்தர் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்