24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

24 SEPTEMBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

       24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 24 செப்டம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியாவின் முதல் “மொபைல் இசைப் பேருந்து”

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா சனிக்கிழமையன்று, ஒரு தனித்துவமான முயற்சியாக, “மொபைல் இசைப் பேருந்து” சேவை வசதியை துவக்கி வைத்தார்
  • இந்த மொபைல் இசைப் பேருந்தில், ஒரு போக்குவரத்து இசை வகுப்பறை மற்றும் பதிவு செய்யும் ஸ்டுடியோ ஆகியை அமைக்கப்பட்டுள்ளது
  • இது இந்தியாவின் முதல் மொபைல் இசை வகுப்பறை மற்றும் ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஆகும். இப்போது குழந்தைகள் இனி இசை கற்க வெளியே செல்லத் தேவையில்லை. மாறாக, இசையே அவர்களைச் சென்றடையும்.

2022 க்குள் டிரான்ஸ் கொழுப்பு இல்லாத நாடாக மாற இந்தியா இலக்கு

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் “டிரான்ஸ் கொழுப்பு (மாறுபட்ட கொழுப்பு) இல்லாத நிலையை அடைய இலகு நிர்ணயம் செய்துள்ளது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)
  • இந்தியாவில், புதிதாக பரிசோதிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளில் 1.34 சதவிகிதம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பொருட்களின் அளவை விட அதிகமாக டிரான்ஸ் கொழுப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • டிரான்ஸ் கொழுப்பு மிக மோசமான கொழுப்பாக கருதப்படுகிறது. மற்ற உணவுக் கொழுப்புகளைப் போலல்லாமல், டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் நல்ல கொழுப்பைக் குறைக்கிறது.

மத்திய அரசின் விளையாட்டு பட்டியலில் சிலம்பம் சேர்ப்பு

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பம் இணைக்கப்பட்டுள்ளது
  • சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை, “புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டினை அங்கீகரித்து பட்டியலில் சேர்த்துள்ளது

மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாடெமி விருது

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • மொழிபெயர்ப்பு பிரிவிற்கான சாகித்திய அகாடெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
  • இரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது
  • அதே போல், இந்தி மொழியில் திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்ததற்காக டி.இ.எஸ்ராகவன் என்பவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது

தமிழகத்தில் முதல் முறையாக “சற்றே குறைப்போம் திட்டம்” திருவள்ளூரில் துவக்கம்

  • தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட படி “சற்றே குறைப்போம்”, “உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்” மற்றும் “உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாட்டுத் திட்டம்” ஆகிய 3 திட்டங்கள் தமிழகத்தில் முதல் முதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
  • எண்ணெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கூடுதலாக உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக “சற்றே குறைப்போம்” திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முதல் மெத்தை மறுசுழற்சி பிரச்சாரம்

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • தென்னிந்தியாவின் முதல் மெத்தை மறுசுழற்சி பிரச்சாரம், தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் துவக்கி வைக்கப்பட்டது
  • ஹைதராபாத்தில் உள்ள இந்திய ஸ்லீப் ப்ராடக்ட்ஸ் ஃபெடரேஷன் (ஐஎஸ்பிஎஃப்), இந்திய பாலியூரிதீன் அசோசியேஷன் (ஐபியூஏ) மற்றும் ரெசைகல் ஆகியவற்றின் முயற்சியாழ் இந்த பிரசாரம் நடைபெற்றது

தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டதை முதல் முறையாக வென்ற ரோகித் மோர்

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தனது முதல் போட்டிகளிலேயே வென்றுள்ளார் ரோகித் மோர்
  • தனது இறுதி ஆட்டத்தில், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற முகமது ஹுசாமுதீனை, தோற்கடித்து சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்
  • 2020 கேலோ இந்தியா சாம்பியனான பத்தொன்பது வயதான மோர், 71 கிலோ இறுதிப் போட்டியில் 69 கிலோ எடைப் சாம்பியனான ஹுசாமுதீனை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்.

20000 ரன்களை அடித்த முதல் கிரிக்கெட் வீராங்கனை

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில், முதல் முதலாக 20000 ரன்கள் அடித்த உலகின் முதல் வீராங்கனை என்ற சிறப்பை இந்திய பெண்கள் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்
  • மக்கேயில் உள்ள ஹரூப் பூங்காவில் பேட்டிங் செய்தபோது அவர் 20,000 சர்வதேச ஓட்டங்களை நிறைவு செய்தார்.
  • கடைசி 6 ஆட்டங்களிலும், தொடர்ச்சியாக 6 அரைச்சதம் அடித்துள்ளார்

முருகேசன் குழு

  • தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, நீதிபதி முருகேசன் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொழிற்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

கிரிக்கெட்டில் பெயர் மாற்றம்

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • கிரிக்கெட்டில் பாலின சம நிலையை ஏற்படுத்தும் வகையில் இனிமேல் அனைவரும் “பேட்டர்” என அழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட் தற்போது, பெண்கள் பெரிதளவு விளையாடும் வகையில் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் பாலின வேறுபாடு இல்லாத இருவருக்கும் பொதுவான சொற்களை பின்பற்ற ஏதுவாக, இனி வரும் காலங்களில் ஆண், பெண் வீராங்கனைகள், “பேட்டர்”, “பேட்டர்ஸ்” என அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக புத்தக தலைநகரம் 2023

24 SEPTEMEBER 2021 CURRENT AFFAIRS IN TAMIL

  • 2023 ஆம் ஆண்டிற்கான “உலக புத்தக தலைநகராக”, கானா நாட்டின் அக்ரா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே, உலக புத்தக தலைநகர ஆலோசனைக் குழுவின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, அக்ரா (கானா) ஐ 2023 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக புத்தக தலைநகராக அறிவித்தார்.
  • 2022 இல் குவாடலஜாராவுக்கு (மெக்ஸிகோ) பிறகு, அக்ரா நகரம் இளைஞர்கள் மீது வலுவான கவனம் செலுத்துவதற்கும் கானாவின் கலாச்சாரம் மற்றும் செல்வத்திற்கு பங்களிக்கும் திறனுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

  • TNPSCDAILY CURRENT AFFAIRS IN TAMIL 23,2021
  • TNPSCDAILY CURRENT AFFAIRS IN TAMIL 22,2021
  • TNPSCDAILY CURRENT AFFAIRS IN TAMIL 21,2021
  • TNPSCDAILY CURRENT AFFAIRS IN TAMIL 20,2021
  • TNPSCDAILY CURRENT AFFAIRS IN TAMIL 19,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 18,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 16,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 15,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 14,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 13,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 12,2021

Leave a Reply