6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
- புவி தோன்றியது = 460 கோடி ஆண்டுகளுக்கு முன்.
- மனிதன் நடக்கத் துவங்கியது = 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.
- மனிதர்கள் பூமி முழுவதும் பரவத் துவங்கியது = 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்.
- மனிதன் வேளாண்மை செய்யத் துவங்கியது = 8000 ஆண்டுகளுக்கு முன்னர்.
- மனித நாகரீகம் தோன்றியது = 5000 ஆண்டுகளுக்கு முன்.
- 6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
6.3x
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
- மனிதர்களின் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையைத் “தொல்லியல், மானுடவியல்” ஆகியவற்றின் உதவியுடன் நாம் அறிவியல் நோக்கில் பயில முடியும்.
குகையில் வாழ்தல்
- சுமார் 18000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் குகையில் வாழ்ந்து வந்தனர்.
- கல்லிலும், எலும்பிலும் செய்தக் கருவிகளை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.
தொல்லியல் என்றால் என்ன
- வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.
- தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அகழ்வாராய்ச்சிப் பொருள்கள் உதவுகின்றன.
- 6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
மானுடவியல் என்றால் என்ன
- மானுடவியல் (anthropology) மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது மானுடவியல் ஆகும்.
- மானுடவியல் என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
- Anthropos என்பதன் பொருள் = மனிதன்.
- Logos என்பதன் பொருள் = எண்ணங்கள் அல்லது காரணம்.
- மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்ந்து மனிதனின் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் பற்றிய முழு விளக்கத்தையும் அடைவதற்கு முயல்கின்றனர்.
உலகில் பழமையான மனிதக் காலடி தடங்கள்
- உலகில் பழமையான மனிதக் காலடி தடங்கள் கிடைத்துள்ள இடம் = கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள “தான்சானியா”.
- இந்தக் காலடி தடங்கள் கல் படுகைகளில் பொதிந்திருந்தது.
- பழங்கால காலடி தடத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் = கதிரியக்க கார்பன் பகுப்பாய்வு.
- உலகில் பழமையான காலடி தடம் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது = 3.5 மில்லியன் ஆண்டுகள்.
பரிணாமம் என்றால் என்ன
- மணித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே பரிணாமம் ஆகும்.
- 6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
மனித பரிணாம வளர்ச்சி நிலைகள்
- மனித பரிணாம வளர்ச்சி நிலைகள் = ஆறு. அவை,
- ஆஸ்ட்ரலோபிதிகஸ்
- ஹோமோ ஹேபிலஸ்
- ஹோமோ எரக்டஸ்
- நியாண்டர்தால்
- ஹோமோ சேப்பியன்ஸ்
- குரோமேக்னான்ஸ்
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
- தொடக்கநிலை மனிதன் = ஆஸ்ட்ரலோபிதிகஸ்
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் காலம் = 4ல் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
- தொடக்கநிலை மனிதன் “ஆஸ்ட்ரலோபிதிகஸ்”, கிழக்கு ஆப்ரிக்காவில் தோன்றினான்.
- மனித மற்றும் குரங்கு பண்புகளுடன் காணப்பட்டவன் = ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதன்.
- எந்த பரிணாம வளர்ச்சி நிலையில் மனிதன் நடக்க கற்றுக் கொண்டான் = ஆஸ்ட்ரலோபிதிகஸ்.
- இரு கால்களால் நடந்த மனிதன் = ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதன்.
ஹோமோ ஹேபிலஸ்
- தொடக்கக்கால மனிதன் = ஹோமோ ஹேபிலஸ்
- ஹோமோ ஹேபிலஸ் காலம் = 2.3ல் இருந்து 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
- இறுகப்பற்றுவதற்கு வசதியாக பெரிய கால் விரல்களை பெற்றிருந்த மனிதன் = ஹோமோ ஹேபிலஸ் மனிதன்.
- “தாடை நீட்சி” குறைந்து கானபப்ட்ட மனிதன் = ஹோமோ ஹேபிலஸ்.
- எந்த பரிணாம வளர்ச்சியில் கருவிகளை மனிதன் உருவாக்கினான் = ஹோமோ ஹேபிலஸ்.
- 6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
ஹோமோ எரக்டஸ்
- ஜாவா மனிதர்கள் = ஹோமோ எரக்டஸ் மனிதர்கள்.
- ஹோமோ எரக்டஸ் காலம் = சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்.
- நேராக நிமிர்ந்த மனிதன் = ஹோமோ எரக்டஸ் மனிதன்.
- நெருப்பின் பயனை அறிந்துக் கொண்ட மனிதன் = ஹோமோ எரக்டஸ் மனிதன்.
- தற்கால மனிதர்களை விட சிறிய மூளை கொண்ட மனிதர்கள் = ஹோமோ எரக்டஸ் மனிதர்கள்.
நியாண்டர்தால் மனிதர்கள்
- நியாண்டர்தால் மனிதர்கள் காலம் = 130000 முதல் 40000 ஆண்டுகளுக்கு முன்.
- ஆப்ரிக்க மனிதர்களிடம் இருந்து வேறுபட்ட மனிதர்கள் = நியாண்டர்தால் மனிதர்கள்.
- இவர்கள் முழுமையான மனிதர்கள் அல்ல.
- வேட்டையாடும் திறனின் பின்தங்கி இருந்த மனிதன் = நியாண்டர்தால் மனிதன்.
- கரடுமுரடான கருவிகளை பயன்படுத்திய மனிதன் = நியாண்டர்தால் மனிதன்.
- இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் துவங்கியது = நியாண்டர்தால் மனிதர்கள் காலத்தில்.
- இறந்தவர்களை புதைத்தற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = ஜெர்மனி.
- 6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள்
- சுயமாக சிந்திக்கும் மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ் மனிதன்.
- ஹோமோ சேப்பியன்ஸ் காலம் = 300000 ஆண்டுகளுக்கு முன்
- உணவு சேகரிக்கும் வழக்கம் தோன்றியது = ஹோமோ சேப்பியன்ஸ் காலத்தில்.
- கரடுமுரடான கருவிகளை பயன்படுத்திய மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ் மனிதன்.
- கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்த மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ்.
- கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறிய மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள்.
குரோமேக்னான்ஸ் மனிதர்கள்
- நவீன மனிதர்கள் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
- குரோமேக்னான்ஸ் மனிதர்கள் காலம் = கிழக்கு ஆப்ரிக்காவில் 50000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன்.
- மனித வாழ்வின் தொடக்கம் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
- கற்கருவிகளையும், எலும்பாலான கருவிகளையும் பயன்படுத்தியவன் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
- ஈட்டி பயன்படுத்திய மனிதன் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
- நெம்புகோல் கருவிகளை பயன்படுத்திய மனிதன் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
- குகையில் வாழ கற்றுக்கொண்ட மனிதர்கள் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
- குரோமேக்னான்ஸ் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = பிரான்சில் உள்ள லாஸ்காஸ் என்னுமிடம்.
- 6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் = கிழக்கு ஆப்பிரிக்கா
- ஹோமோ ஹேபிலிஸ் = தென் ஆப்பிரிக்கா
- ஹோமோ எரக்டஸ் = ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
- நியாண்டர்தால் = யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா)
- குரோமேக்னான்ஸ் = பிரான்ஸ்
- பீகிங் மனிதன் = சீனா
- ஹோமோ சேப்பியன்ஸ் = ஆப்ரிக்கா
- ஹைடல்பர்க் மனிதன் = லண்டன்
ஹோமோ சேப்பியன்ஸின் பரிணாம வளர்ச்சி
- குழுக்களாக வாழ்ந்தனர்.
- உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேட்டையாடத் துவங்கினர்.
- உணவைத் தேடி அலைந்துக் கொண்டே இருந்தனர்.
- மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டனர்.
- தானியங்களை சேகரித்தனர்.
- குளிரில் இருந்து பாதுக்காத்துக் கொள்ள விலங்குகளின் தோலினை பயன்படுத்தினர்.
சிக்கி முக்கிக் கல்
- ஆயுதங்களை செய்ய “சிக்கி முக்கி” கல்லைப் பயன்படுத்தினர் ஆதி மனிதர்கள்.
- நெருப்பினை உருவாக்கவும் சிக்கி முக்கிக் கல்லைப் பயன்படுத்தினர் ஆதி மனிதர்கள்.
- தீப்பெட்டியினை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றளவும் உள்ளது.
சக்கரம் கண்டுபிடித்தல்
- மனித வரலாற்றில் முதல் தர கண்டுபிடிப்பாக கருதபப்டுவது = சக்கரம் உருவாக்கல்.
தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்கள்
- கீழ்வலை = விழுப்புரம் மாவட்டம்
- உசிலம்பட்டி = மதுரை மாவட்டம்
- குமிதிபதி = கோவை மாவட்டம்
- மாவடைப்பு = கோவை மாவட்டம்
- பொறிவரை = கரிக்கையூர், நீலகிரி மாவட்டம்.
- 6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
பழங்கால பாறை ஓவியங்கள்
- இந்தியாவில் உள்ள 750 குகைகளில் சுமார் 500 குகைகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
- ஆண்களும் பெண்களும் வேட்டையாடுவது போன்ற ஓவியங்களும் இதில் உள்ளன.
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு
- மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு = நாய்.
புத்தக வினாக்கள்
- பரிணாமத்தின் வழிமுறை = படிப்படியானது.
- தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது ? = ஆப்ரிக்கா
- சரியான இணைய கண்டுபிடித்தல்:
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் = இரு கால்களால் நடப்பது.
- தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை ____________ உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்? = மானுடவியலாளர்கள்
- பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் ____________ வாழ்க்கை வாழ்ந்தார்கள்? = அலைந்து திரியும் நாடோடி
- பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் __________ மற்றும் ________ ஆகும்? = வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்.
- _______________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது? = கலப்பை.
- பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ____________ என்னுமிடத்தில் காணப்படுகின்றன? = கரிக்கையூர்
- நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
-
- தவறு.
- மானுடவியல் என்பது மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றியது ஆகும்.
-
- ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
-
- சரியான விடை.
-
- மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
-
- சரியான விடை.
-
- மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
-
- தவறு.
- மனிதனால் பழக்கப்படுதபப்ட்ட முதல் விலங்கு = நாய்.
-
- பிரிட்டிஷ் இந்தியாவில் கமிட்டிகள் மற்றும் கமிஷன்கள்
- இந்தியாவின் முக்கிய கமிசன்கள்
- புத்தர் – மகாவீரர் ஒப்பீடு
- அசோகரின் 14 பாறை கல்வெட்டுகள்
- அக்பரின் நவரத்தினங்கள்