6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Table of Contents

6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

  • புவி தோன்றியது = 460 கோடி ஆண்டுகளுக்கு முன்.
  • மனிதன் நடக்கத் துவங்கியது = 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.
  • மனிதர்கள் பூமி முழுவதும் பரவத் துவங்கியது = 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்.
  • மனிதன் வேளாண்மை செய்யத் துவங்கியது = 8000 ஆண்டுகளுக்கு முன்னர்.
  • மனித நாகரீகம் தோன்றியது = 5000 ஆண்டுகளுக்கு முன்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

6.3x

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

  • மனிதர்களின் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையைத் “தொல்லியல், மானுடவியல்” ஆகியவற்றின் உதவியுடன் நாம் அறிவியல் நோக்கில் பயில முடியும்.
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

குகையில் வாழ்தல்

  • சுமார் 18000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் குகையில் வாழ்ந்து வந்தனர்.
  • கல்லிலும், எலும்பிலும் செய்தக் கருவிகளை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

தொல்லியல் என்றால் என்ன

  • வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.
  • தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அகழ்வாராய்ச்சிப் பொருள்கள் உதவுகின்றன.

மானுடவியல் என்றால் என்ன

  • மானுடவியல் (anthropology) மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது மானுடவியல் ஆகும்.
  • மானுடவியல் என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
  • Anthropos என்பதன் பொருள் = மனிதன்.
  • Logos என்பதன் பொருள் = எண்ணங்கள் அல்லது காரணம்.
  • மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்ந்து மனிதனின் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் பற்றிய முழு விளக்கத்தையும் அடைவதற்கு முயல்கின்றனர்.

உலகில் பழமையான மனிதக் காலடி தடங்கள்

  • உலகில் பழமையான மனிதக் காலடி தடங்கள் கிடைத்துள்ள இடம் = கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள “தான்சானியா”.
  • இந்தக் காலடி தடங்கல் கல் படுகைகளில் பொதிந்திருந்தது.
  • பழங்கால காலடி தடத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் = கதிரியக்க கார்பன் பகுப்பாய்வு.
  • உலகில் பழமையான காலடி தடம் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது = 3.5 மில்லியன் ஆண்டுகள்.

பரிணாமம் என்றால் என்ன

  • மணித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே பரிணாமம் ஆகும்.

மனித பரிணாம வளர்ச்சி நிலைகள்

  • மனித பரிணாம வளர்ச்சி நிலைகள் = ஆறு. அவை,
    1. ஆஸ்ட்ரலோபிதிகஸ்
    2. ஹோமோ ஹேபிலஸ்
    3. ஹோமோ எரக்டஸ்
    4. நியாண்டர்தால்
    5. ஹோமோ சேப்பியன்ஸ்
    6. குரோமேக்னான்ஸ்

ஆஸ்ட்ரலோபிதிகஸ்

  • தொடக்கநிலை மனிதன் = ஆஸ்ட்ரலோபிதிகஸ்
  • ஆஸ்ட்ரலோபிதிகஸ் காலம் = 4ல் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
  • தொடக்கநிலை மனிதன் “ஆஸ்ட்ரலோபிதிகஸ்”, கிழக்கு ஆப்ரிக்காவில் தோன்றினான்.
  • மனித மற்றும் குரங்கு பண்புகளுடன் காணப்பட்டவன் = ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதன்.
  • எந்த பரிணாம வளர்ச்சி நிலையில் மனிதன் நடக்க கற்றுக் கொண்டான் = ஆஸ்ட்ரலோபிதிகஸ்.
  • இரு கால்களால் நடந்த மனிதன் = ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதன்.

ஹோமோ ஹேபிலஸ்

  • தொடக்கக்கால மனிதன் = ஹோமோ ஹேபிலஸ்
  • ஹோமோ ஹேபிலஸ் காலம் = 2.3ல் இருந்து 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
  • இறுகப்பற்றுவதற்கு வசதியாக பெரிய கால் விரல்களை பெற்றிருந்த மனிதன் = ஹோமோ ஹேபிலஸ் மனிதன்.
  • “தாடை நீட்சி” குறைந்து கானபப்ட்ட மனிதன் = ஹோமோ ஹேபிலஸ்.
  • எந்த பரிணாம வளர்ச்சியில் கருவிகளை மனிதன் உருவாக்கினான் = ஹோமோ ஹேபிலஸ்.

ஹோமோ எரக்டஸ்

  • ஜாவா மனிதர்கள் = ஹோமோ எரக்டஸ் மனிதர்கள்.
  • ஹோமோ எரக்டஸ் காலம் = சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்.
  • நேராக நிமிர்ந்த மனிதன் = ஹோமோ எரக்டஸ் மனிதன்.
  • நெருப்பின் பயனை அறிந்துக் கொண்ட மனிதன் = ஹோமோ எரக்டஸ் மனிதன்.
  • தற்கால மனிதர்களை விட சிறிய மூளை கொண்ட மனிதர்கள் = ஹோமோ எரக்டஸ் மனிதர்கள்.

நியாண்டர்தால் மனிதர்கள்

  • நியாண்டர்தால் மனிதர்கள் காலம் = 130000 முதல் 40000 ஆண்டுகளுக்கு முன்.
  • ஆப்ரிக்க மனிதர்களிடம் இருந்து வேறுபட்ட மனிதர்கள் = நியாண்டர்தால் மனிதர்கள்.
  • இவர்கள் முழுமையான மனிதர்கள் அல்ல.
  • வேட்டையாடும் திறனின் பின்தங்கி இருந்த மனிதன் = நியாண்டர்தால் மனிதன்.
  • கரடுமுரடான கருவிகளை பயன்படுத்திய மனிதன் = நியாண்டர்தால் மனிதன்.
  • இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் துவங்கியது = நியாண்டர்தால் மனிதர்கள் காலத்தில்.
  • இறந்தவர்களை புதைத்தற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = ஜெர்மனி.

ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள்

  • சுயமாக சிந்திக்கும் மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ் மனிதன்.
  • ஹோமோ சேப்பியன்ஸ் காலம் = 300000 ஆண்டுகளுக்கு முன்
  • உணவு சேகரிக்கும் வழக்கம் தோன்றியது = ஹோமோ சேப்பியன்ஸ் காலத்தில்.
  • கரடுமுரடான கருவிகளை பயன்படுத்திய மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ் மனிதன்.
  • கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்த மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ்.
  • கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறிய மனிதன் = ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள்.

குரோமேக்னான்ஸ் மனிதர்கள்

  • நவீன மனிதர்கள் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
  • குரோமேக்னான்ஸ் மனிதர்கள் காலம் = கிழக்கு ஆப்ரிக்காவில் 50000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன்.
  • மனித வாழ்வின் தொடக்கம் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
  • கற்கருவிகளையும், எலும்பாலான கருவிகளையும் பயன்படுத்தியவன் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
  • ஈட்டி பயன்படுத்திய மனிதன் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
  • நெம்புகோல் கருவிகளை பயன்படுத்திய மனிதன் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
  • குகையில் வாழ கற்றுக்கொண்ட மனிதர்கள் = குரோமேக்னான்ஸ் மனிதர்கள்.
  • குரோமேக்னான்ஸ் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = பிரான்சில் உள்ள லாஸ்காஸ் என்னுமிடம்.

மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்

  1. ஆஸ்ட்ரலோபிதிகஸ் = கிழக்கு ஆப்பிரிக்கா
  2. ஹோமோ ஹேபிலிஸ் = தென் ஆப்பிரிக்கா
  3. ஹோமோ எரக்டஸ் = ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
  4. நியாண்டர்தால் = யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா)
  5. குரோமேக்னான்ஸ் = பிரான்ஸ்
  6. பீகிங் மனிதன் = சீனா
  7. ஹோமோ சேப்பியன்ஸ் = ஆப்ரிக்கா
  8. ஹைடல்பர்க் மனிதன் = லண்டன்

ஹோமோ சேப்பியன்ஸின் பரிணாம வளர்ச்சி

  • குழுக்களாக வாழ்ந்தனர்.
  • உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேட்டையாடத் துவங்கினர்.
  • உணவைத் தேடி அலைந்துக் கொண்டே இருந்தனர்.
  • மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டனர்.
  • தானியங்களை சேகரித்தனர்.
  • குளிரில் இருந்து பாதுக்காத்துக் கொள்ள விலங்குகளின் தோலினை பயன்படுத்தினர்.
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

சிக்கி முக்கிக் கல்

  • ஆயுதங்களை செய்ய “சிக்கி முக்கி” கல்லைப் பயன்படுத்தினர் ஆதி மனிதர்கள்.
  • நெருப்பினை உருவாக்கவும் சிக்கி முக்கிக் கல்லைப் பயன்படுத்தினர் ஆதி மனிதர்கள்.
  • தீப்பெட்டியினை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றளவும் உள்ளது.

சக்கரம் கண்டுபிடித்தல்

  • மனித வரலாற்றில் முதல் தர கண்டுபிடிப்பாக கருதபப்டுவது = சக்கரம் உருவாக்கல்.
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்கள்

  • கீழ்வலை = விழுப்புரம் மாவட்டம்
  • உசிலம்பட்டி = மதுரை மாவட்டம்
  • குமிதிபதி = கோவை மாவட்டம்
  • மாவடைப்பு = கோவை மாவட்டம்
  • பொறிவரை = கரிக்கையூர், நீலகிரி மாவட்டம்.

பழங்கால பாறை ஓவியங்கள்

  • இந்தியாவில் உள்ள 750 குகைகளில் சுமார் 500 குகைகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
  • ஆண்களும் பெண்களும் வேட்டையாடுவது போன்ற ஓவியங்களும் இதில் உள்ளன.
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
6TH HISTORY மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு

  • மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு = நாய்.

புத்தக வினாக்கள்

  1. பரிணாமத்தின் வழிமுறை = படிப்படியானது.
  2. தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது ? = ஆப்ரிக்கா
  3. சரியான இணைய கண்டுபிடித்தல்:
    • ஆஸ்ட்ரலோபிதிகஸ் = இரு கால்களால் நடப்பது.
  4. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை ____________ உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்? = மானுடவியலாளர்கள்
  5. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் ____________ வாழ்க்கை வாழ்ந்தார்கள்? = அலைந்து திரியும் நாடோடி
  6. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் __________ மற்றும் ________ ஆகும்? = வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்.
  7. _______________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது? = கலப்பை.
  8. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ____________ என்னுமிடத்தில் காணப்படுகின்றன? = கரிக்கையூர்
  9. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
      • தவறு.
      • மானுடவியல் என்பது மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றியது ஆகும்.
  1. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
      • சரியான விடை.
  1. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
      • சரியான விடை.
  2. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
      • தவறு.
      • மனிதனால் பழக்கப்படுதபப்ட்ட முதல் விலங்கு = நாய்.

 

 

 

Leave a Reply