7TH TAMIL சொலவடைகள்
7TH TAMIL சொலவடைகள்
- சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை.
- இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும்.
- பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை நாட்டுப்புற மக்களும் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர்.
- இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பாகும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சொலவடைகள்
- புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
- அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
- வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை
- எறும்பு ஊரக் கல்லும் தேயும்
- உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்
- அடை மழை விட்டாலும் செடி மழை விடாது
- நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம்
- குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்
- சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
- நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
- ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
- ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்.
- காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
- இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்.
- நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்
- அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க.
- பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
- அதிர அடிச்சா உதிர விளையும்.
- குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலா
- அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
- கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி
- அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல
- தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லை
- அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது
- அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழி.
-
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி
- படை வேழம்
- விடுதலைத் திருநாள்
- பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- அறிவுசால் ஔவையார்
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
- ஒன்றே குலம்
- மெய்ஞ்ஞான ஒளி
- அயோத்திதாசர் சிந்தனைகள்
- மனித யந்திரம்
- யாப்பு இலக்கணம்
- திருக்குறள்
- உயர்க்குணங்கள்
- இளைய தோழனுக்கு
- சட்டமேதை அம்பேத்கர்
- பால் மனம்
- அணி இலக்கணம்
7TH TAMIL
-
- எங்கள் தமிழ்
- ஒன்றல்ல இரண்டல்ல
- பேச்சுமொழியும் எழுத்துமொழியும்