7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்

Table of Contents

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்

  • தமிழ் எழுத்துக்களை எத்தனை வகையாக பிரிப்பர் = இரண்டு. அவை,
    • முதல் எழுத்து
    • சார்பெழுத்து

முதலெழுத்துகள் என்றால் என்ன

  • தமிழில் முதலெழுத்துகள் எனப்படுவது உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும், மெய் எழுத்துக்கள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துக்கள் ஆகும்.
  • முதலெழுத்துகள் மொத்தம் முப்பது ஆகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்

  • சார்பெழுத்துக்கள் மொத்தம் பத்து ஆகும். அவை,
    • உயிர்மெய்
    • ஆய்தம்
    • உயிரளபெடை
    • ஒற்றளபெடை
    • குற்றியலிகரம்
    • குற்றியலுகரம்
    • ஐகாரக்குறுக்கம்
    • ஔகாரக்குறுக்கம்
    • மகரக்குறுக்கம்
    • ஆய்தக்குறுக்கம்

குற்றியலுகரம் என்றால் என்ன

  • குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்
  • தனக்குரிய ஓசையில் இருந்து குறைந்து ஒலிக்கும் உகரம் “குற்றியலுகரம்” எனப்படும்.
  • “கு, சு, டு, து, பு, று” ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும் பொழுது, ஒரு மாத்திரை அளவிற்கு பதிலாக அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
  • எ.கா:
    • காசு, ஏஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

முற்றியலுகரம் என்றால் என்ன

  • தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
  • வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.
  • இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
  • எ.கா.
    • புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
  • குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைப் கொண்டு ஆறு வகையாக பிரிக்கப்படும். அவை,
    • நெடில்தொடர்க் குற்றியலுகரம்
    • ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
    • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
    • வன்தொடர்க் குற்றியலுகரம்
    • மென்தொடர்க் குற்றியலுகரம்
    • இடைத்தொடர்க் குற்றியலுகரம்

நெடில்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன

  • தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
  • இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
  • ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம் = நெடில்தொடர்க் குற்றியலுகரம்.
  • எ.கா:
    • பாகு, மாசு, பாடு, காது, ஆறு

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன

  • ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
  • எ.கா:
    • எஃகு, அஃது

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன

  • தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
  • எ.கா:
    • அரசு (ர = ர் + அ)
    • ஒன்பது (ப = ப் + அ)
    • வரலாறு (லா = ல் + ஆ)

வன்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன

  • வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
  • எ.கா:
    • பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

மென்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன

  • மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
  • எ.கா:
    • பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன

  • இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
  • எ.கா
    • எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

எழுத்துக்களை குறிப்பிட சாரியை பயன்படுத்தல்

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
  • தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்துச் சாரியைகளைப் பயன்படுத்துகிறோம்.
    • குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’
      • (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
    • நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’
      • (எ.கா.) ஐகான், ஔகான்
    • குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’
      • (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்
    • ஆய்த எழுத்தைக் குறிக்க ‘கேனம்’
      • (எ.கா.) அஃகேனம்

குற்றியலுகரத்தில் வராத சொற்கள்

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
  • ‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
  • மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

குற்றியலிகரம் என்றால் என்ன

  • குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.
  • ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி அரை மாத்திரை அளவில் ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம்’ எனப்படும்.

குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும்

  • குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டுமே வரும்.

குற்றியலிகரம் வரும் இடங்கள்

  • குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
    • கொக்கு + யாது = கொக்கியாது
    • தோப்பு + யாது = தோப்பியாது
    • நாடு + யாது = நாடியாது
  • ‘மியா’ என்பது ஓர் அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது). இதில் ‘மி’ யில் (I = ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும். இது சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

குற்றியலிகரம் குறிப்புகள்

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
  • “மியா” என்னும் அசைச்சொல் வரும் இடங்களில் குற்றியலிகரம் வரும்,
  • குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.
  • தற்போது உரைநடை வழக்கில் இல்லாத சார்பெழுத்து = குற்றியலிகரம்.
  • இலக்கியங்களில் மட்டுமே உள்ள சார்பெழுத்து = குற்றியலிகரம்.

 

7TH TAMIL

 

Leave a Reply