8TH மக்களின் புரட்சி

Table of Contents

8TH மக்களின் புரட்சி

8TH மக்களின் புரட்சி

  • 1757 ஆம் ஆண்டு பிளாசிப் போருக்கு பிறகு, இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் பல பகுதிகளில் அதிகரிக்கத் துவங்கியது.
  • ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களிடம் இருந்து வருடாந்திர கப்பம் வசூலிக்கும் உரிமை பெற்றிருந்தாக கருதப்படுகிறது.
  • ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு யாரிடம் இருந்து ஏற்பட்டது? = பூலித்தேவர்.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பை தெரிவித்த பாளையக்காரர்கள் = வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பாளையங்களின் தோற்றம்

  • தமிழகத்தில் நாயக்கர்களை நியமித்தவர்கள் = விஜயநகர அரசர்கள்.
  • 1529 இல் மதுரை நாயக்கராக இருந்தவர் = விஸ்வநாதர்.
  • மதுரை நாயக்க மன்னர் விஸ்வநாதரின் அமைச்சர் = அரியநாதர்.
  • “பாளையக்கார முறையை” உருவாக்கியவர் = மதுரை நாயக்க மன்னர் விஸ்வநாதர்.
  • “பாளையக்கார முறை” ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1529. (குறிப்பு = பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு = 1801).
  • பாளையக்கார முறை மூலம் நாட்டில் எத்தனை பாளையங்கள் உருவாக்கப்பட்டன = 72.
  • பாளையக்காரர்கள் தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில்,
    • ஒரு பங்கு = மதுரை நாயக்கர்களுக்கு கொடுத்தல்.
    • ஒரு பங்கு = இராணுவ செலவு
    • ஒரு பங்கு = பாளையக்காரர்களின் செலவிற்கு பயன்படுத்துவர்.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

பாளையக்காரர்களின் புரட்சி

  • பாளையக்காரர்கள் இடையே எத்தனை பாளையங்கள் இருந்தன = இரண்டு பாளையங்கள் (முகாம்கள்).
  • அவை,
    • கிழக்கு பாளையம்
    • மேற்கு பாளையம்
  • கிழக்கு பாளையத்தில் இருந்தவர்கள் = நாயக்கர்கள்.
  • மேற்கு பாளையத்தில் இருந்தவர்கள் = மறவர்கள்.
  • கிழக்கு பாளையத்தில் இருந்தவர்கள் யாரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர் = வீரபாண்டிய கட்டபொம்மன்.
  • மேற்கு பாளையத்தில் இருந்தவர்கள் யாரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர் = பூலித்தேவர்.
  • 8TH மக்களின் புரட்சி

கர்நாடக உடன்படிக்கை 1792

  • பாளையக்காரர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்கள் எந்த உடன்படிக்கையின் படி பெற்றனர் = கர்நாடக உடன்படிக்கை 1792.
  • பாளையக்காரர்கள் மீது ஆங்கிலேயர்கள் அதிகாரம் செலுத்த வழிவகை செய்த உடன்படிக்கை = கர்நாடக உடன்படிக்கை 1792.
  • பாளையக்காரர்களின் புரட்சி ஏற்பட காரணமாக அமைந்த உடன்படிக்கை = கர்நாடக உடன்படிக்கை 1792.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

பூலித்தேவன்

  • தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு யாரிடம் இருந்து ஏற்பட்டது? = பூலித்தேவர்.
  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் = பூலித்தேவன்.
  • பூலித்தேவன் எந்த பாளையத்தை சேர்ந்தவர்? = நெற்கட்டும் செவல்.
  • பூலித்தேவன், எங்கு நடைபெற்ற போரில் ஆற்காடு நவாப் முகமது அலி மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப் படைகளை தோற்கடித்தார் = திருநெல்வேலி.
  • 8TH மக்களின் புரட்சி

இந்தியாவில் ஆங்கிலேயரை போரிட்டு தோற்கடித்த முதல் இந்திய மன்னன்

  • இந்தியாவில் ஆங்கிலேயரை போரிட்டு தோற்கடித்த முதல் இந்திய மன்னன் = பூலித்தேவன்.
  • இந்த வெற்றியை தொடர்ந்து, பூலித்தேவர் ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிராக “பாளையக்காரர்கள் கூட்டமைப்பை” உருவாக்க முயன்றார்.

அந்தநல்லூர் போர் 1761

  • 1759 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலை தாக்கின.
  • ஆற்காடு படைக்கு தலைமை தாங்கியவர் = யூசுப்கான்.
  • 1761 ஆம் ஆண்டு “அந்தநல்லூர்” என்னுமிடத்தில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
  • ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலை கைப்பற்றிய ஆண்டு = 1761.

நெற்கட்டும் செவல்

  • நெற்கட்டும் செவலை மீண்டு பூலித்தேவன் கைப்பற்றிய ஆண்டு = 1764.
  • 1767இல் பூலித்தேவனை தோற்கடித ஆங்கிலேய தளபதி = கேப்டன் கேம்பல்.
  • எந்த ஆண்டு ஆங்கிலேய தளபதி கேப்டன் கேம்பல், பூலித்தேவனை தோற்கடித்தார் = 1767.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

வீரபாண்டிய கட்டபொம்மன்

  • பாண்டியர்களின் கீழ் “வீரபாண்டியபுரம்” பகுதியை ஆட்சி செய்தவர் = ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
  • வீரபாண்டியபுரத்தின் தலைநகரம் = பாஞ்சாலங்குறிச்சி.
  • பின்னர் நாயக்கர்களின் ஆட்சியில் பாளையக்காரராக மாறினர்.
  • ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் மகன் = வீரபாண்டிய கட்டபொம்மன்.
  • வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி = சக்கம்மாள்.
  • வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்கள் = ஊமைத்துரை, செவத்தையா.
  • 8TH மக்களின் புரட்சி

முகலாயர்களின் பிரதிநிதி

  • விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு தென்னிந்தியாவில் தங்கள் மேலாண்மையை நிறுவியவர்கள் = முகலாயர்கள்.
  • முகலாயர்களின் பிரதிநிதியாக செயல்பட்டவர் = கர்நாடக நவாப்.
  • பாஞ்சாலங்குறிச்சி நவாப்பின் கீழ் கப்பம் கட்டும் பாளையமாக இருந்தது.
  • ஆனால் “கர்நாடக உடன்படிக்கை 1792” படி, பாஞ்சாலங்குறிச்சியில் வரி வசூலிக்கும் உரிமை ஆங்கிலேயருக்கு சென்றது.

இராமநாதபுர கலெக்டர்

  • நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதிய இராமநாதபுரம் கலெக்டர் = காலின் ஜாக்சன்.
  • சென்னை அரசாங்கம் இராமநாதபுரம் கலெக்டருக்கு கடிதம் அனுப்பி, கட்டபொம்மனுடன் கலந்துரையாடல் செய்ய கூறியது.
  • வீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சர் = சிவசுப்ரமணியம்.
  • கட்டபொம்மன், அமைச்சர் சிவசுப்ரமணியம் ஆகியோர் ராமநாதபுரம் கலெக்டர் காலின் ஜாக்சனை சந்தித்தது = 1798 இல்.
  • ராமநாதபுரம் கலெக்டரை சந்திக்கும் பொழுது, ஆங்கிலேய அரசுக்கு செலுத்தாமல் இருந்த நிலுவை = 1080 பகோடா.
  • கலெக்டருடன் சந்திப்பின் பொழுது கட்டபொம்மனும், சிவசுப்ரமணிமும் எத்தனை மணிநேரம் நிற்க வைக்கப்பட்டனர் = மூன்று மணி நேரம்.
  • கட்டபொம்மனையும், சிவசுப்ரமணியத்தையும் கைது செய்ய முயன்ற பொழுது, கோட்டைக்குள் புகுந்து கட்டபொம்மன் தப்பிக்க உதவி செய்தவர் = ஊமைத்துரை.
  • சிவசுப்ரமணியம் மட்டும் கைது செய்யப்பட்டார்.
  • 8TH மக்களின் புரட்சி

சென்னை கவுன்சில்

  • சென்னை கவுன்சிலின் கவர்னர் = எட்வர்ட் கிளைவ்.
  • கட்டபொம்மன், இராமநாதபுரம் கலெக்டரின் நடவடிக்கை குறித்து யாருக்கு கடிதம் எழுதினார் = சென்னை கவுன்சில் கவர்னர் எட்வர்ட் கிளைவ்.
  • கட்டபொம்மனை சரணடைய ஆணையிட்டவர் = சென்னை கவுன்சில் கவர்னர் எட்வர்ட் கிளைவ்.
  • கட்டபொம்மன் சென்னை கவுன்சில் கவர்னர் எட்வர்ட் கிளைவ் கூறிய விசாரணை ஆணையதின் முன் ஆஜராகி தன்னை நிரபராதி என்பதை நிருபித்தார்.
  • கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணியம் விடுதலை செய்யப்பட்டார்.
  • தவறான நடவடிக்கைக்காக இராமநாதபுரம் கலெக்டர் காலின் ஜாக்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய கலெக்டராக எஸ்.ஆர்.லூஷிங்டன் நியமனம் செய்யப்பட்டார்.

தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பு

  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக “தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பை” உருவாக்கியவர் = மருது பாண்டியர்.
  • மருது பாண்டியர் எந்த இடத்தை ஆட்சி செய்யும் பாளையக்காரர் ஆவார் = சிவகங்கை.

திருச்சிராப்பள்ளி பிரகடனம்

  • “தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பு” சார்பில் வெளியிடப்பட்ட பிரகடனம் = திருச்சிராப்பள்ளி பிரகடனம்.
  • தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பின் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தவர் = கட்டபொம்மன்.
  • தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் இணைய மறுத்த பாளையக்காரர் = சிவகிரி பாளையம்.
  • சிவகிரி பாளையக்காரர், ஆங்கிலேயரின் ஆதரவாளர் ஆவார்.
  • கட்டபொம்மன் எந்த பாளையத்தின் மீது போர் தொடுக்க முயன்றார் = சிவகிரி பாளையம்.
  • சிவகிரி பாளையம் மீது கட்டபொம்மன் போர் தொடுக்கும் முயற்சியை அறிந்த உடன், ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது போரை துவக்கினர்.
  • 8TH மக்களின் புரட்சி

பாஞ்சாலங்குறிச்சி வீழ்தல்

  • கட்டபொம்மன் மீது போரை துவக்கிய ஆங்கிலேய தளபதி = மேஜர் பானர்மேன்.
  • எப்பொழுது ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சி மீது போரை துவக்கியது = 5 செப்டம்பர் 1799.
  • எங்கு நடைபெற்ற சண்டையில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டார் = கோலார்பட்டி.
  • போரில் இருந்து கட்டபொம்மன் எங்கு தப்பிச் சென்றார் = புதுக்கோட்டை.
  • போரில் இருந்து தப்பித்த கட்டபொம்மன் எந்த காடுகளில் மறைந்திருந்தார் = களப்பூர் காடுகள்.
  • களப்பூர் காடுகளில் மறைந்திருந்த கட்டபொம்மனை கைது செய்தவர் = புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான்.
  • கட்டபொம்மனை கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் = புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான்.

நாகலாபுரம்

  • பாஞ்சாலங்குறிச்சி வீரர்களுக்கு விசாரனைக்கு பிறகு தூக்கு தண்டனை வழங்கினார் = மேஜர் பானர்மேன்.
  • கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணியம் எங்கு தூக்கிலிடப்பட்டார் = நாகலாபுரம்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்

  • பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் என்று விசாரிக்கப்பட்டார் = 16 அக்டோபர் 1799.
  • கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் = 16 அக்டோபர் 1799.
  • கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் = கயத்தாறு.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

வேலுநாச்சியார்

  • சிவகங்கை ராணி = வேலுநாச்சியார்.
  • சிவகங்கையின் ராஜா = முத்துவடுகநாத பெரிய உடையதேவர்.
  • வேலுநாச்சியார், தனது எத்தனையாவது வயதில் ராஜா முத்து வடுகநாதரை மணந்தார் = 16 வயதில்.

காளையார்கோயில் போர் 1772

  • காளையார்கோயில் போர் நடைபெற்ற ஆண்டு = 1772.
  • ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேய கூட்டுப் படைகள் சிவகங்கையின் மீது போர் தொடுத்த ஆண்டு = 1772.
  • முத்துவடுகநாத பெரிய உடையதேவர் எந்த போரில் கொல்லப்பட்டார் = காளையார்கோயில் போர் 1772.

கோபால நாயக்கர்

  • சிவகங்கையில் இருந்து தப்பித்த வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்தவர் = கோபால நாயக்கர்.
  • வேலுநாச்சியாரின் மகள் = வெள்ளச்சி நாச்சியார்.
  • வேலுநாச்சியார், தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் தப்பித்து திண்டுக்கல் அருகே உள்ள விருபாச்சி என்னுமிடத்தில் உள்ள கோபால நாயக்கர் என்பவரின் பாதுகாப்பில் அடைக்கலம் ஆனார்.
  • 8TH மக்களின் புரட்சி

படைத்தளபதி குயிலி

  • வேலுநாச்சியாரின் படைத்தளபதி = குயிலி.
  • ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் நுழைந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் = குயிலி.

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி

  • ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி = வேலுநாச்சியார்.
  • வேலுநாச்சியார் சிவகங்கையை யார் உதவியுடன் கைப்பற்றினார் = மருது சகோதரர்கள்.
  • வேலுநாச்சியார் சிவகங்கை ராணியாக மீண்டும் முடிசூட்டிக்கொள்ள உதவியவர்கள் = மருது சகோதரர்கள்.

தென்னிந்தியாவின் ஜான்சிராணி

  • “தென்னிந்தியாவின் ஜான்சிராணி” என்று அழைக்கப்படுபவர் = வேலுநாச்சியார்.
  • “வீரமங்கை” என்று தமிழர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் = வேலுநாச்சியார்.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

மருது சகோதரர்கள்

  • மருது சகோதரர்களின் பெற்றோர் = மூக்கையா பழனியப்பன், பொன்னாத்தாள்.
  • “வெள்ளை மருது” என அழைக்கப்பட்டவர் = பெரிய மருது.
  • “மருது பாண்டியன்” என அழைக்கப்பட்டவர் = சின்ன மருது.
  • சின்ன மருது யாரிடம் பணிபுரிந்தார் = சிவகங்கை அரசர் முத்துவடுகநாத பெரிய உடையதேவர்.

காளையார்கோயில் போர் 1772

  • ஆற்காடு நவாப் படைகள் சிவகங்கையை கைப்பற்றிய ஆண்டு = 1772.
  • சிவகங்கை அரசர் முத்துவடுகநாத பெரிய உடையதேவர் கொல்லப்பட்ட போர் = காளையார்கோயில் போர் 1772.
  • 8TH மக்களின் புரட்சி

சிவகங்கை சிங்கம் என்று அழைக்கப்படுபவர்

  • சில மாதங்களில் மருது சகோதரர்கள் மீண்டும் சிவகங்கையை கைப்பற்றினார்.
  • பெரிய மருது அரசராக பொறுப்பேற்றார்.
  • “சிவங்கை சிங்கம்” என்று அழைக்கப்படுபவர் = சின்ன மருது.
  • ஆங்கிலேயருக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை எடுத்ததால் சின்ன மருது “சிவகங்கை சிங்கம்” என்று அழைக்கப்படுகிறார்.

மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்கள் இடையே மோதல்

  • மருது சகோதரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இடையே மோதல் ஏற்பட காரணமாக அமைந்தவை,
    1. கட்டபொம்மனின் இறப்புக்கு பின்னர் அவரின் சகோதரர் ஊமைத்துரைக்கு சிவகங்கையில் அடைக்கலம் கொடுத்தது.
    2. சிவகங்கை வியாபாரிகள் ஆங்கிலேயரின் தலையீட்டை எதிர்த்தது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

  • கட்டபொம்மனின் சகோதரர்கள் = ஊமைத்துரை, செவத்தையா.
  • பிப்ரவரி 1801இல் ஊமைத்துரையும், செவத்தையாவும் எந்த சிறையில் இருந்து தப்பித்தனர் = பாளையங்கோட்டை சிறை.
  • பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்த ஊமைத்துரையும், செவத்தையாவும் எங்கு சென்றனர் = கமுதி.
  • கமுதியில் இருந்த ஊமைத்துரையையும், செவத்தையாவையும் சிறுவயலுக்கு அழைத்து சென்றவர் = சின்ன மருது.
  • “சிறுவயல்” யாருடைய தலைநகரம் = சின்ன மருது.
  • கட்டபொம்மனின் சகோதரர்கள் “பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை” மீண்டும் புனரமைத்தனர்.
  • 8TH மக்களின் புரட்சி

காலின் மெக்காலே

  • கட்டபொம்மனின் சகோதரர்கள் புனரமைத்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேய படைத்தளபதி = காலின் மெக்காலே.

பாளையக்காரர் போர்

  • மருது சகோதரர்களுக்கு எதிராக படையெடுத்து சென்ற ஆங்கிலேய தளபதி = கர்னல் அக்னியூ, கர்னல் இன்ஸ்.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக யாருடைய கூட்டுப்படைகள் இணைந்து போரிட்டன = சிவகங்கையின் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், மலபாரின் கேரளவர்மன், மைசூரின் கிருஷ்ணப்பநாயக்கர் மற்றும் துண்டாஜி.

திருச்சிராப்பள்ளி பிரகடனம் 1801

  • மருது சகோதரர்கள் வெளியிட்ட பிரகடனம் = திருச்சிராப்பள்ளி பிரகடனம்.
  • திருச்சிராப்பள்ளி பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு = 1801.
  • திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்பது = சுதந்திரப் பிரகடனம்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் பிரகடனம்

  • இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் பிரகடனம் = திருச்சிராப்பள்ளி பிரகடனம் (1801).
  • இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்க முதல் முறையாக அழைப்பு விடுத்தவர்கள் = மருது சகோதரர்கள்.

தென்னிந்திய கிளர்ச்சி (1800 – 1801)

  • திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் நகல் எங்கெங்கு ஓட்டப்பட்டது =
    1. ஆற்காடு நவாபின் திருச்சி அரண்மனை சுவரில்.
    2. ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோவில் சுவரில்.
  • ஆங்கிலப் படைக்கு எதிராக 20000 வீரர்களை திரட்டியவர் = சின்ன மருது.
  • ஆங்கிலப் படைகளுக்கு உதவ எங்கிருந்து படைகள் வரவழைக்கப்பட்டன = வங்காளம், இலங்கை, மலாயா (மலேசியா).
  • ஆங்கிலப் படைகளுக்கு ஆதரவளித்த இந்தியர்கள் = புதுக்கோட்டை, எட்டயபுரம் மற்றும் தஞ்சாவூர் மன்னர்கள்.
  • 8TH மக்களின் புரட்சி

ஆங்கிலேயர்கள் சிவகங்கையை இணைத்தல்

  • சிறந்த ராணுவ வலிமை பெற்ற ஆங்கிலேயப் படை போரில் வெற்றிபெற்றது.
  • சிவகங்கையை ஆங்கிலேயர்கள் இணைத்துக் கொண்டனர்.

மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்

  • மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர் = இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டையில்.
  • மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட தினம் = 24 அக்டோபர் 1801.

ஊமைத்துரை எங்கு தூக்கிலிடப்பட்டார்

  • ஊமைத்துரை எங்கு தூக்கிலிடப்பட்டார் = பாஞ்சாலங்குறிச்சி.
  • செவத்தையா எங்கு தூக்கிலிடப்பட்டார் = பாஞ்சாலங்குறிச்சி.
  • கட்டபொம்மனின் சகோதரர்கள் ஊமைத்துரையும், செவத்தையாவும் தூக்கிலிடப்பட்ட தினம் = 16 நவம்பர் 1801.
  • எத்தனை கிளர்ச்சியாளர்கள் மலாயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர் = 73 கிளர்ச்சியாளர்கள்.
  • வேல்ஸ் இளவரசர் தீவு என்று அழைக்கப்படுவது = மலாயாவின் (மலேசியா) பினாங்கு.

இரண்டாவது பாளையக்காரர் போர்

  • இரண்டாவது பாளையக்காரர் போர் என்று ஆங்கிலேய ஆவணங்களில் கூறப்படுவது = 1800 – 1801ஆம் ஆண்டு கிளர்ச்சி (மருது சகோதரர்கள் தலைமையில் நடைபெற்றது).
  • முதலாவது பாளையக்காரர் போர் = 1752 முதல் 1767 வரை பூலித்தேவர், கட்டபொம்மன் தலைமையில் நடைபெற்ற போராகும்.

கர்நாடக உடன்படிக்கை 1801

  • எந்த உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டின் மீது நேரடி கட்டுப்பாட்டைப் பெற்றனர் = கர்நாடக உடன்படிக்கை 1801.
  • கர்நாடக உடன்படிக்கை கையெழுத்தான தினம் = 31 ஜூலை 1801.
  • எந்த உடன்படிக்கை மூலம் தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை நீக்கப்பட்டது = கர்நாடக உடன்படிக்கை 1801.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

தீரன் சின்னமலை

  • தீரன் சின்னமலை பிறந்த இடம் = ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மேலப்பாளையம்.
  • தீரன் சின்னமலையின் இயற்பெயர் = தீர்த்தகிரி.
  • கொங்கு நாட்டு பாளையக்காரர் என்று அழைக்கப்படுபவர் = தீரன் சின்னமலை.
  • தீரன் சின்னமலை எந்த நாட்டு இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சியை பெற்றிருந்தார் = பிரெஞ்சு.
  • திப்புசுல்தானுக்கு ஆதரவாக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் = தீரன் சின்னமலை.
  • ஆங்கிலேயரை எதிர்த்து போராட எந்த இடத்தில் கோட்டையை கட்டினார் = ஓடாநிலை.
  • 1800இல் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு எங்கு தோற்றார் = கோயம்புத்தூரில்.
  • “கொரில்லா போர்முறையை” பயன்படுத்திய தமிழர் = தீரன் சின்னமலை.
  • கொரில்லா போர் முறையை பயன்படுத்தி எங்கு நடைபெற்ற போர்களில் ஆங்கிலேயர்களை தோற்கடித்தார் தீரன் சின்னமலை = காவேரி, ஓடாநிலை, அரச்சலூர்.
  • தீரன் சின்னமலையை காட்டிக்கொடுத்தவன் = தீரன் சின்னமலையின் சமையல்காரன் நல்லப்பன்.
  • தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட ஆண்டு = 1805.
  • தீரன் சின்னமலை எங்கு தூக்கிலிடப்பட்டார் = சங்ககிரி கோட்டை.

வேலூர் கலகம் 1806

  • நான்காம் மைசூர் போருக்கு பிறகு திப்பு சுல்தானின் குடும்பத்தினர் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர் = வேலூர் கோட்டை.
  • “தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாக” இருந் இடம் = வேலூர் கோட்டை.
  • வேலூர் புரட்சியின் பொழுது சென்னை மாகாண ஆளுநர் = வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
  • வேலூர் புரட்சியின் பொழுது சென்னை மாகாண படைத்தளபதி = சர் ஜான் கிரடாக்.
  • இந்திய வீரர்களிடம் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி சொல்லி கட்டாயப்படுத்தியவர் = சர் ஜான் கிரடாக்.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

வேலூர் கலகத்திற்கான காரணங்கள்

  • தாடி, மீசையை மழித்து கொள்ள கூறப்பட்டது.
  • சமய அடையாளங்களை நெற்றியில் அணிதல், காதுகளில் வளையம் அணிதல் தடை செய்யப்பட்டன.
  • இந்திய சிப்பாய்கள் தாழ்வாக நடதபப்ட்டனர்.

வேலூர் சிப்பாய் கலகத்திற்கான உடனடி காரணம்

  • ஜூன் 1806இல் ராணுவ தளபதி “அக்னியூ” அறிமுகம் செய்த “அக்னியூ தலைப்பாகையே” கலகத்திற்கான உடனடி காரணமாக அமைந்தது.
  • இத்தலைப்பாகையில் சிலுவை சின்னத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனை இந்து, முஸ்லிம் வீரர்கள் எதிர்த்தனர்.
  • 8TH மக்களின் புரட்சி

வேலூர் சிப்பாய் கலகத்தின் போக்கு

  • திப்பு சுல்தானின் மூத்த மகன் = பதே ஹைதர்.
  • வேலூர் கோட்டையில் எந்த படைப்பிரிவை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை துவக்கினர் = முதலாவது, 23வது படைப்பிரிவு வீரர்கள்.
  • சிப்பாய் புரட்சி துவங்கிய தினம் = 10 ஜூலை 1806.
  • சிப்பாய் கலகத்தில் பலியான முதல் ஆங்கிலேயர் = கர்னல் பான்கோர்ட்.
  • சிப்பாய் புரட்சியில் ஈடுபட்ட வீரர்கள், யாரை புதிய ஆட்சியாளராக அறிவித்தனர் = திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர்.

சிப்பாய் கலகம் அடக்கப்படுதல்

  • வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்த தளபதி = மேஜர் கூட்ஸ்.
  • இராணிப்பேட்டியில் இருந்த படைத்தளபதி = கர்னல் கில்லெஸ்பி.
  • வேலூர் சிப்பாய் கலகத்தை அடக்கியவர் = கர்னல் கில்லெஸ்பி.
  • வேலூர் கலகத்தில் கொல்லப்பட்ட ஆங்கிலேயர்கள் = 113 பேர்.
  • வேலூர் கழகத்தில் எத்தனை சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் = 350 சிப்பாய்கள்.

வேலூர் சிப்பாய் கலகத்தால் ஏற்பட்ட விளைவுகள்

  • திப்புவின் குடும்பம் வேலூரில் இருந்து கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.
  • புதிய சீருடை முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
  • சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் கலகம் தோல்வியில் முடிந்ததற்கான காரணங்கள்

  • இந்திய வீரர்களை வழிநடத்த சரியான தலைமை இல்லை.
  • கலகம் சரியாக திட்டமிடப்படவில்லை.
  • ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை.
  • 8TH மக்களின் புரட்சி

முதன் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி

  • 1806 வேலூர் கலகம், 1857இல் நடைபெற்ற “முதன் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி” (prelude to the first War of Indian Independence in 1857) என்று கூறியவர் = வி.டி. சாவர்க்கர்.

1857 பெரும் புரட்சி

  • 1857ஆம் ஆண்டு புரட்சியானது ஆங்கிலேய காலனி ஆட்சியினுடைய பண்பு மற்றும் கொள்கையின் விளைவாக உருவானது ஆகும்.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

1857 பெரும் புரட்சிக்கான காரணங்கள்

  • 1857 புரட்சிக்கான முக்கிய காரணம் = ஆங்கிலேயரின் பொருளாதார ரீதியான சுரண்டல் கொள்கை.
  • வாரிசு இழப்புக் கொள்கை, துணைப்படைத் திட்டம் போன்ற ஆங்கிலேயரின் நடவடிக்கைகள்.
  • அயோத்தியை முறையற்ற வகையில் இணைத்தல்.
  • கிறித்துவ சமய குழுவினரின் மதமாற்ற நடவடிக்கைகள்.
  • இந்தியர்களின் கலாசாரத்தில் ஆகிலேயர்கள், ஐரோப்பியர்களின் தலையீடு.
  • இந்திய சிப்பாய்களை தாழ்வாகவும், அவமரியாதையாகவும் நடத்தியது.
  • ராணுவ உயர் பதவிகள் அனைத்தும் ஆங்கிலேயர்களுக்கு கொடுக்கப்பட்டது.
  • இந்திய வீரர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது.

1857 பெரும் புரட்சிக்கான உடனடி காரணம்

  • 1857 பெரும் புரட்சிக்கான உடனடி காரணம் = இராணுவத்தில் அறிமுகம் செய்யபப்ட்ட “என்பீல்டு” ரக துப்பாக்கி.
  • பசு, பன்றியின் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த வற்புறுத்தப்பட்டதே 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு அடிப்படை மற்றும் உடனடி காரணமாகியது.

மங்கள் பாண்டே

  • மங்கள் பாண்டே எந்த படைப்பிரிவை சேர்ந்தவர் = பாரக்பூரில் உள்ள வங்காளப் படைப் பிரிவு.
  • மங்கள் பாண்டே ஆங்கில உயரதிகாரியை சுட்டுக் கொன்ற தினம் = 29 மார்ச் 1857.
  • இதனால் மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டார்.

இரண்டாம் பகதூர்ஷா

  • மீரட் பகுதியில் எந்த படை வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டனர் = மூன்றாம் குதிரைப்படையை சேர்ந்த சிப்பாய்கள்.
  • மீரட்டில் புரட்சி துவங்கிய தினம் = 10 மே 1857.
  • மீரட் குதிரைப்படை சிப்பாய்கள் டெல்லியை அடைந்த தினம் = 11 மே 1857.
  • டெல்லியில் புரட்சி துவங்கிய தினம் = 11 மே 1857.
  • மீரட் சிப்பாய்கள் யாரை “இந்தியாவின் பேரரசராக” அறிவித்தனர் = முகலாய் அரசர் இரண்டாம் பகதூர்ஷா.
  • 1857 பெரும் புரட்சியின் மையமாக விளங்கிய இடம் = டெல்லி.
  • 1857 பெரும் புரட்சியின் அடையாளமாக விளங்கியவர் = இரண்டாம் பகதூர் ஷா.
  • 8TH மக்களின் புரட்சி

1857 பெரும் புரட்சியின் பொழுது இந்தியாவின் கவர்னர் ஜெனரல்

  • 1857 பெரும் புரட்சியின் பொழுது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் = கானிங் பிரபு.
  • கானிங் பிரபு புரட்சியை அடக்க எங்கிருந்து படைகளை வரவைத்தார் = மதராஸ், பம்பாய், இலங்கை, சீனா (சொந்த முயற்சியில் சீனாவில் இருந்து கல்கத்தாவிற்கு வரவழைத்தார்).
  • விசுவாசமான செக்கிய படைகளை டெல்லிக்கு அனுப்பினார்.
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

டெல்லி கைப்பற்றல்

  • டெல்லி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட தினம் = 20 செப்டம்பர் 1857.
  • முகலாய அரசர் இரண்டாம் பகதூர்ஷா எங்கு அனுப்பப்பட்டார் = ரங்கூன்.
  • முகலாய அரசர் இரண்டாம் பகதூர்ஷா எப்பொழுது காலமானார் = 1862.

1857 பெரும் புரட்சி

கலகம் நடைபெற்ற இடங்கள்இந்திய தலைவர்கள்தலைவர்களின் முடிவுகலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகள்
டெல்லிஇரண்டாம் பகதூர்ஷாரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்ஜான் நிக்கல்சன்
லக்னோபேகம் ஹஸ்ரத் மகால்நேபாளத்திற்கு தப்பிச் சென்றார்ஹென்றி லாரன்ஸ்
கான்பூர்நானா சாகிப்நேபாளத்திற்கு தப்பிச் சென்றார்சர் காலின் கேம்பெல்
ஜான்சி, குவாலியர்ராணி லட்சுமிபாய், தாந்தியா தோபேபோரில் கொல்லப்பட்டார் லட்சுமிபாய், தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்ஜெனரல் ஹக்ரோஸ்
ப்ரெய்லிகான் பகதூர் கான்போரில் கொல்லப்பட்டார்சர் காலின் கேம்பெல்
பீகார்கணவர் சிங்போரில் கொல்லப்பட்டார்வில்லியம் டைலர்
1857 பெரும் புரட்சியின் பொழுது பங்கேற்ற தலைவர்களும், அவர்கள் தொடர்புடைய இடங்களும்.

ஜான்சிராணி லட்சுமிபாய்

  • மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்தியவர் = ஜான்சிராணி லட்சுமிபாய்.
  • ஜான்சி பகுதியை ஆக்கிரமித்த ஆங்கில தளபதி = சர் ஹக்ரோஸ்.
  • ஜான்சியில் இருந்து தப்பித்த லட்சுமிபாய் எங்கு சென்றார் = குவாலியர்.
  • குவாலியர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் = தாந்தியா தோபே.
  • ஜூன் 1858 இல் குவாலியரும் கைப்பற்றப்பட்டது.
  • போரில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டார்.
  • தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டார்.
  • ஆங்கில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, “1857 புரட்சியில் கலந்துக் கொண்டவர்களிலே மிகவும் துணிச்சலானவர் ராணி லட்சுமிபாய் ஆவார்”.
  • 8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி
8TH மக்களின் புரட்சி

1857 பெரும் புரட்சி தோல்விக்கான காரணங்கள்

  • புரட்சியாளர்களிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லை.
  • பொதுவான திட்டம் இல்லை.
  • நாட்டின் பல பகுதிகளில் புரட்சி வெடிக்கவில்லை.
  • நவீனக் கல்வி கற்ற இந்தியர்கள் புரட்சியில் பங்கேற்கவில்லை.
  • புரட்சியின் பொழுது ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்கள் = சீக்கியர்கள், ஆப்கானியர்கள், கூர்க்கா படையினர்.
  • ஆங்கிலேயரிடம் சிறந்த ஆயுதங்கள் இருந்தன.

1857 பெரும் புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்கள்

  • 1858ஆம் ஆண்டு வெளியிடபப்ட்ட “விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை” படி, இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆங்கில அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
  • இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி, வைஸ்ராய் என மாற்றப்பட்டது.
  • இயக்குனர் குழு, கட்டுப்பாடு வாரியம் ஆகியவை நீக்கப்பட்டது.
  • இந்திய விவகாரங்களை மேற்பார்வையிட செயலரின் தலைமையில் 15 பேர் கொண்ட கவுன்சில் அமைக்கப்பட்டது.
  • இந்திய ராணுவம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு, அதிகப்படியான ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.
  • 8TH மக்களின் புரட்சி

ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்

  • 1857 பெரும் புரட்சி எவை தோன்ற வழிவகுத்தது = நவீன இந்திய தேசிய இயக்கம் தோன்ற வழிவகுத்தது.
  • “முதல் இந்திய சுதந்திரப் போர்” என்னும் நூலின் ஆசிரியர் = வி.டி. சவார்க்கர்.
  • 1857 பெரும் புரட்சியை “ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்” என்று கூறியவர் = வி.டி.சவார்க்கர்.

புத்தக வினாக்கள்

  1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? = 1529.
  2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்? = பூலித்தேவர்.
  3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்? = இராமநாதபுரம்.
  4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்? = கயத்தாறு.
  5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்? = சிவகங்கை.
  6. ‘திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது? = மருது பாண்டியர்கள்.
  7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது? = ஓடாநிலை.
  8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்? = மத்திய இந்தியா.
  9. கிழக்குப்பகுதி பாளையங்கள் ___________________ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? = கட்டபொம்மன்.
  10. விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் _____________ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்? = அரியநாதர்.
  11. கட்டபொம்மனின் முன்னோர்கள் ______________ பகுதியைச் சார்ந்தவர்கள்? = ஆந்திரா.
  12. ___________ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்? = வேலுநாச்சியார்.
  13. _________________ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்? = சின்ன மருது.
  14. 1857 ஆம் ஆண்டு புரட்சியை ______________ என்பவர் ‘முதல் இந்திய சுதந்திரப் போர்’ என விவரிக்கிறார்? = வி.டி.சவார்கார்.
  15. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்? = சரி.
  16. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்? = தவறு.
  17. 1799 அக்டோபர் 16 ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்? = சரி.
  18. திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்? = சரி.

 

Leave a Reply