8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Table of Contents

8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

  • ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இருந்தது.
  • வேளாண்மையே மக்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஆங்கில ஆட்சியின் கீழ் நிலவருவாய் திட்டங்கள்

  • இந்தியாவில் ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்திய நிலவருவாய் திட்டங்கள் = மூன்று. அவை,
    • நிலையான நில வருவாய் திட்டம்
    • இரயத்துவாரி திட்டம்
    • மகல்வாரி திட்டம்
  • நிலையான நில வருவாய் திட்டத்தை அறிமுகம் செய்தவர் = காரன்வாலிஸ் பிரபு.
  • இரயத்வாரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் = தாமஸ் மன்றோ, கேப்டன் ரீட்.
  • மகல்வாரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் = வில்லியம் பெண்டிங் பிரபு.
ஆங்கில ஆட்சியின் கீழ் நிலவருவாய் திட்டங்கள்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

நிலையான நிலவரி திட்டம்

  • வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் ஓராண்டு நில வருவாய் திட்டத்தை அறிமுகம் செய்தவர் = ராபர்ட் கிளைவ்.
  • வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் ராபர்ட் கிளைவ் எந்த ஆண்டு ஓராண்டு நில வருவாய் திட்டங்களை அறிமுகம் செய்தார் = 1765.
  • ஓராண்டு நில வருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றியவர் = ஹேஸ்டிங்ஸ் பிரபு.
  • ஐந்தாண்டு நில வருவாய் திட்டத்தை மீண்டு ஓராண்டு திட்டமாக மாற்றியவர் = ஹேஸ்டிங்ஸ் பிரபு.
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

நிலையான நில வருவாய் திட்டத்தை அறிமுகம் செய்தவர்

  • ஓராண்டு நில வருவாய் திட்டத்தை பத்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றியவர் = காரன்வாலிஸ் பிரபு.
  • காரன்வாலிஸ் பிரபு அறிமுகம் செய்த நில வருவாய் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கானது = பத்து ஆண்டுகள்.
  • காரன்வாலிஸ் பிரபு அறிமுகம் செய்த பத்தாண்டு நில வருவாய் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = நிலையான நில வருவாய் திட்டம்.
  • நிலையான நில வருவாய் திட்டத்தை அறிமுகம் செய்தவர் = காரன்வாலிஸ் பிரபு.
  • எந்த ஆண்டு காரன்வாலிஸ் பிரபு நிலையான நில வருவாய் திட்டத்தை அறிமுகம் செய்தார் = 1793.
  • நிலையான நில வருவாய் திட்டம் அறிமுகம் செய்யப்பட இடங்கள் = வங்காளம், பீகார், ஒரிசா, உத்திரப் பிரதேசத்தில் வாரணாசி பகுதி, வடக்கு கர்நாடகம்.
  • ஆங்கில இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவிகிதம் நிலையான நிலவரி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது = 19%.
நிலையான நிலவரி திட்டம்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

நிலையான நிலவரித் திட்டத்தின் வேறு பெயர்கள்

  • ஜமீன்தாரி திட்டம்
  • ஜாகீர்தாரி திட்டம்
  • மல்குஜாரி திட்டம்
  • பிஸ்வோதாரி திட்டம்
  • ஜமீன்தாரி திட்டம் என்று அழைக்கப்படும் திட்டம் = நிலையான நிலவரித் திட்டம்.

நிலையான நிலவரி திட்டத்தின் சிறப்பு கூறுகள்

  • முறையாக வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் “நில உடைமையாளர்களாக” அங்கீகரிக்கப்பட்டனர்.
  • வரி வசூல் செய்யும் அரசின் முகவர்கள் = ஜமீன்தார்கள்.
  • விவசாயிகளிடம் இருந்து 10/11 பங்கு வரியினை ஜமீன்தார்கள் வசூலித்து ஆங்கில அரசுக்கு செலுத்தினர்.
  • ஜமீன்தார்கள், விவசாயிகளுக்கு பட்டா (எழுதபப்ட்ட ஒப்பந்தம்) வழங்கினர்.
  • நீதித்துறை அதிகாரங்கள் ஜமீன்தார்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது.

நிலையான நிலவரி திட்டத்தின் நிறைகள்

  • தரிசு நிலங்கள், காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன.
  • நீதி வழங்கும் பொறுப்பில் இருந்து ஜமீன்தார்கள் விடுவிக்கப்பட்டனர்.
  • ஆங்கில அரசுக்கு நிலையான வருவாய் கிடைத்தது.

நிலையான நிலவரி திட்டத்தின் குறைகள்

  • ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
  • விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
  • பல இடங்களில் விவசாயிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

இரயத்வாரி முறை திட்டம்

8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  • இரயத்வாரி முறை திட்டம் அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1820.
  • இரயத்வாரி முறை திட்டத்தை அறிமுகம் செய்தவர்கள் = தாமஸ் மன்றோ, கேப்ட்டன் ரீட்.
  • இரயத்வாரி முறை திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இடங்கள் = மதராஸ், பம்பாய், அசாம், கூர்க்.
  • நிலத்தின் உரிமை விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • ஆங்கில அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வரி வசூல் செய்த திட்டம் = இரயத்வாரி திட்டம்.
  • இத்திட்டத்தில் நிலவரியை மூன்றில் ஒரு பங்காக குறைத்தவர் = தாமஸ் மன்றோ.
  • “மண் மற்றும் பயிரின் தன்மை” அடிப்படையில் வரி நிர்ணயம் செய்யபப்ட்ட திட்டம் = இரயத்வாரி திட்டம்.
  • இரயத்வாரி முறையின் கீழ் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை மாற்றி அமைக்கப்பட்டது = 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
  • விவசாயிகளின் நிலைமை பாதுகாப்பாக இருந்த நிலவருவாய் திட்டம் = இரயத்வாரி முறை.
இரயத்வாரி முறை திட்டம்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

இரயத்வாரி முறையின் சிறப்பு அம்சங்கள்

  • வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்டது.
  • நில அளவு, விளைச்சல் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.
  • 45% – 50% வரி வசூலிக்கப்பட்டது.

இரயத்வாரி முறையால் ஏற்பட்ட விளைவுகள்

  • ஆங்கில அரசு ஜமீன்தார்களுக்கு பிறகு விவசாயிகளை நேரடியாக சுரண்டியது.
  • பல இடங்களில் நிலவருவாய் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

மகல்வாரி முறை

  • யாருடைய சிந்தனையில் உதித்த திட்டம் மகல்வாரி முறை = ஹோல்ட் மெகன்சி.
  • “ஜமீன்தாரி முறையின் மாற்றி அமைக்கபப்ட்ட வடிவம்” எனப்படும் திட்டம் = மகல்வாரி முறை.
  • மகல்வாரி முறை அறிமுகம் செய்யப்பட்ட இடங்கள் = கங்கை சமவெளி (ஆக்ரா, அயோத்தி), வடமேற்கு மாகாணங்கள், பஞ்சாப், மத்திய இந்தியாவின் சில பகுதிகள்.
  • கங்கை சமவெளி, பஞ்சாப் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1822.
  • மகல்வாரி முறை அறிமுகம் செய்யபப்ட்ட ஆண்டு = 1833.
  • மகல்வாரி முறை திட்டத்தை அறிமுகம் செய்தவர் = வில்லியம் பெண்டிங் பிரபு.
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  • மகல்வாரி முறை திட்டத்தில் அடிப்படை மாற்றங்களை செய்தவர் = வில்லியம் பெண்டிங் பிரபு.
  • யாருடைய வழிகாட்டுதலின் படி வில்லியம் பெண்டிங் பிரபு, மகல்வாரி முறைடில் சில அடிப்படை மாற்றங்களை செய்தார் = இராபர்ட் மெர்தின்ஸ்.
  • மகல் என்பதன் பொருள் = கிராமம்.
  • மகல்வாரி முறையில் எதன் அடிப்படையில் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது = மகல் அல்லது கிராம விளைச்சல்.
  • மகல் பகுதியின் அணைத்து உரிமையாளர்களும் நிலவருவாய் செலுத்துவதற்கு கூட்டுப் பொறுப்புடையவர்கள் ஆவர்.
  • தொடக்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு வரியாக இருந்ததை 50% ஆக வரியை குறைத்தவர் = வில்லியம் பெண்டிங் பிரபு.
மகல்வாரி முறை
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

கிராமத் தலைவர் (Lambardar)

  • மகல்வாரி முறையில் கிராமம் முழுவதும் வரியை வசூலித்து அரசுக்கு செலுத்துபவர் = கிராமத் தலைவர் (Lambardar) ஆவார்.

மகல்வாரி முறையின் சிறப்புக் கூறுகள்

  • அரசுக்கும், கிராம மக்களுக்கும் இடையே தரகராக இருந்தவர் = கிராமத் தலைவர்.
  • “கிராமவாரியான மதிப்பீட்டாக” இருந்த திட்டம் = மகல்வாரி முறை.
  • நிலங்களுக்கு, கிராமங்களை சேர்ந்த சமுதாயத்தினரே உரிமையாளராக இருந்தனர்.

மகல்வாரி முறையின் தீமைகள்

  • கிராமத் தலைவர், தனது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் சலுகைகளை தவறாக பயன்படுத்தினார்.
  • விவசாயிகளுக்கு லாபகரமான திட்டம் இல்லை = மகல்வாரி முறை.
  • “ஜமீன்தாரி முறையின்” திருத்தப்பட்ட வடிவமே = மகல்வாரி முறை.
  • கிராமத்தின் உயர் வகுப்பினருக்கு லாபகரமாக இருந்தது.

விவசாயிகளின் மீது ஆங்கில நிலவருவாய் முறையின் தாக்கங்கள்

  • அணைத்து நிலவருவாய் முறைகளும் ஆங்கில அரசுக்கு அதிக வரி வருவாயை வழங்குவதாகவே இருந்தது.
  • நில விற்பனை அதிகரித்தாலும், விவசாயம் அழிவிற்கு சென்றது.
  • அதிக வரிவிதிப்பால் விவசாயிகள் பாதித்தனர்.
  • அதிக வரிச்சுமை, பஞ்சம், வறுமை, கடன்சுமை – ஆகியவற்றால் விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்.
  • ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்கள் – விவசாயிகளை சுரண்டினர்.
  • ஆங்கிலேய இறக்குமதி பொருட்களால், இந்திய குடிசைத் தொழில்கள் கடுமையாக பாதித்தன.
  • பழமையான பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டு புதிய சட்ட அமைப்பு, நீதிமன்ற நடைமுறைகள் வந்தன.
  • நிலத்தின் உண்மையான உரிமையாளராக விவசாயிகள் இருந்தாலும், பலன்கள் அனைத்தையும் ஆங்கிலேயர்கள், ஜமீன்தார்களும் மட்டுமே அனுபவித்தனர்.

விவசாயிகளின் புரட்சிகள்

  • சந்தால் கலகம் (1855-56)
  • இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி) (1859-60)
  • பாப்னா கலகம் (1873-76)
  • தக்காண கலகம் (1875)
  • பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் (1890-1900)
  • சம்பரான் சத்தியாக்கிரகம் (1917-18)
  • கேடா (கைரா) சத்தியாக்கிரகம் (1918)
  • மாப்ளா கிளர்ச்சி (1921)
  • பர்தோலி சத்தியாக்கிரகம் (1929-30)
விவசாயிகளின் புரட்சிகள்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

சந்தால் கலகம் (1855 – 56)

  • சந்தால் கலகம் நடைபெற்ற ஆண்டு = 1855 – 1856.
  • சந்தால் கலகம் நடைபெற்ற இடம் = பீகாரின் ராஜ்மகால் குன்றுப் பகுதி.
  • சந்தால் கலகத்திற்கான காரணம் = நிலக்கிழார்கள், வட்டிக்கு பணம் கொடுப்போர் சந்தால்களின் நிலங்களை அபகரித்தல் காரணமாக.

இந்தியாவில் முதல் விவசாயிகள் கிளர்ச்சி

  • இந்தியாவில் நடைபெற்ற முதல் விவசாயிகள் கிளர்ச்சி போராட்டம் = சந்தால் கலகம் ஆகும்.
  • நிலக்கிழார்கள், வட்டிக்கு பணம் கொடுப்போரின் அராஜகப் போக்கை எதிர்த்து ஆயுதமேந்திய போராட்டத்தை துவக்கினர் சந்தாலர்கள்.
சந்தால் கலகம்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

சந்தால் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியோர்

  • சந்தால் கலகத்திற்கு தலைமை தாங்கியோர் = சித்து, கங்கு (சந்தால் சகோதரர்கள்).
  • சந்தால் சகோதரர்கள் தலைமையில் பத்தாயிரம் வீரர்கள் ஒன்று கூடினர்.

சந்தால் கலகத்தின் முடிவு

  • சந்தால் புரட்சி பிப்ரவரி 1856 வரை நீடித்தது.
  • புரட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, புரட்சி அடக்கப்பட்டது.
  • புரட்சியின் காரணமாக சந்தால்கள் வகித்த பகுதிகளை “சந்தால் பர்கானா” என்று அறிவித்தது ஆங்கிலேய அரசு.
  • அதன்படி சந்தால்களின் நிலங்களும், அடையாளமும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டன.

இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி) 1859 – 1860

  • இண்டிகோ கலகம் நடைபெற்ற ஆண்டு = 1859 – 1860.
  • இண்டிகோ புரட்சி நடைபெற்ற இடம் = வங்காளம்.
  • “அவுரி புரட்சி” என அழைக்கப்படும் கிளர்ச்சி = இண்டிகோ கிளர்ச்சி.
  • இண்டிகோ கிளர்ச்சிக்கான காரணம் = ஐரோப்பிய இண்டிகோ (அவுரி) தோட்டக்காரர்கள், விவசாயிகளுக்கு தீமை தரக்கூடிய இன்டிகோவை வளர்ப்பதற்கு கட்டாயப்படுத்தினர்.
இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி)
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

இண்டிகோ கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்

  • இண்டிகோ கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்கள் = திகம்பர் பிஸ்வாஸ், பிஷ்ணு சரண் பிஸ்வாஸ்.
  • இண்டிகோ கலகம் 1859 செப்டம்பர் மாதம் துவங்கியது.
  • பிஸ்வால் சகோதரர்கள், வங்காளத்தின் “நாதியா” மாவட்டத்தில் நடத்திய போராட்டம் ஐரோப்பிய பண்ணையாளர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டது.
  • வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அவுரி ஆணையம் அமைக்கப்பட்டது.

அவுரி ஆணையம் 1860 (இண்டிகோ ஆணையம் 1860)

  • இண்டிகோ ஆணையம் (அல்லது) அவுரி ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு = 1860.
  • அவுரி ஆணையத்தின் பரிந்துரையின் படி, எந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டது = 1862 சட்டம் பாகம் ஆறு (Part VI of the Act of 1862).

இந்து தேசபக்தன் (Hindu Patriot)

  • வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை பலமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த செய்தித்தாள் = இந்து தேசபக்தன் (Hindu Patriot).

நீல் தர்பன்

  • “நீல் தர்பன்” என்னும் நாடகத்தை எழுதியவர் = தீனபந்து மித்ரா.
  • “நீல் தர்பன்” என்னும் நாடகம் எந்த மொழியில் எழுதப்பட்டது = வங்க மொழி.
  • தீனபந்து மித்ரா என்பவர் வங்காள அவுரி விவசாயிகளின் துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டுவர எழுதிய நாடகம் = நீல் தர்பன்.

பாப்னா கலகம் (1873 – 1876)

  • பாப்னா கலகம் நடைபெற்ற ஆண்டு = 1873 – 1876.
  • பாப்னா கலகம் நடைபெற்ற இடம் = வங்காளம் (பாப்னா மாவட்டம், யூசுப்சாகி பர்கானா).
  • பாப்னா கிளர்ச்சிக்கான காரணம் = விவசாயிகள் மீதான ஜமீன்தார்களின் அடக்குமுறை.

பாப்னா கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்

  • பாப்னா கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் = கேசப் சந்திரா ராய்.
  • கேசப் சந்திரா ராய் தலைமையிலான போராட்ட கூட்டம் பாப்னா முழுவதும் போராட்டத்தை பரப்பியது.
  • பாப்னா கலகத்தின் முதன்மை நோக்கம் = சட்டத்தை எதிர்த்தல்.
  • போராட்டம் சிறிய வன்முறைகளுடன் நடைபெற்றது.

விவசாய சங்கங்கள்

  • பாப்னா கலகத்தின் காரணமாக வங்காளத்தின் பல பகுதிகளில் “விவசாய சங்கங்கள்” உருவாகின.
  • போராட்டத்தின் வாயிலாக விவசாயிகள் அவர்களின் “சட்ட உரிமைகளை” மேம்படுத்தினர்.

தக்காண கலகம் (1875)

  • தக்காண கலகம் நடைபெற்ற ஆண்டு = 1875.
  • தக்காண கிளர்ச்சி நடைபெற்ற இடம் = மகாராஸ்டிராவின் பூனா மாவட்டம்.
  • தக்காண கலகத்திற்கான காரணம் = உள்ளூர் வட்டிக்காரர்களின் அடக்குமுறையை எதிர்த்தல்.

தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்

  • பூனாவின் ஒரு கிராமத்தில் துவங்கிய இப்புரட்சி, படிப்படியாக 33 கிராமங்களுக்கு பரவியது.
  • விவசாயிகள் “மார்வாரி சகுகாரர்களின்” சொத்துக்களை கொள்ளையடித்தனர்.
  • இறுதியில் இராணுவம் வரவழைக்கப்பட்டு கலகம் கட்டுப்படுத்தப்பட்டது.
  • தக்காண கிளர்ச்சியின் காரணமாக “தக்காண விவாசாயிகள் மீட்பு சட்டம்” கொண்டுவரப்பட்டது.

பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் (1890 – 1900)

  • பஞ்சாப் விவசாயிகள் இயக்கப் போராட்டம் நடைபெற்ற காலம் = 1890 – 1900.
  • பஞ்சாப் விவசாயிகள் இயக்க போராட்டத்திற்கான காரணம் = நிலத்தின் மீது வட்டிக்கடைக்காரர்கள் மேற்கொண்ட ஒடுக்குமுறைகள் விரைந்து தடுக்கும் பொருட்டு.
  • ஆங்கிலேய அரசு பஞ்சாபில் போராட்டம் நடைபெறுவதை விரும்பவில்லை. ஏனென்றால் இராணுவத்திற்கு பஞ்சாபில் இருந்து பெருமளவு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் 1900

  • பஞ்சாப் விவசாயிகளை பாதுகாப்பதற்காக ஆங்கிலேய அரசு கொண்டு வந்த சட்டம் = பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் 1900.
  • பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு = 1900.
  • பஞ்சாபில் இச்சட்டம் சிறப்பாக செயல்பட்டதால், இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

சம்பரான் சத்தியாக்கிரகம் (1917 – 1918)

  • சம்பரான் சத்தியாக்கிரகம் நடைபெற்ற ஆண்டு = 1917 – 1918.
  • சம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற இடம் = பீகார் மாநிலம் சம்பரான்.
  • சம்பரான் சத்தியாக்கிரகம் போராட்டம் துவங்க காரணம் = ஐரோப்பிய பண்ணையாளர்கள் அவுரி சாகுபடியை ஊக்குவித்து குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து பெறுதல்.
சம்பரான் சத்தியாக்கிரகம்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

சம்பரான் தீன்கதியா

  • “சம்பரான் தீன்கதியா” என்றால் என்ன = சம்பரான் தீன்கதியா என்னும் திட்டத்தின் கீழ் சம்ப்ரானில் உள்ள விவசாயிகளிடம் அவுரி சாகுபடியை செய்ய கட்டாயப்படுத்தி, அதனை குறைந்த விலையில் அவர்களிடம் இருந்து பெறுதல்.

மகாத்மா காந்தி

  • சம்பரான் விவசாயிகளின் பிரச்சனையை அறிந்துக் கொண்ட காந்தியடிகள் அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

சம்பாரண் விவசாய விசாரணைக் குழு (Champaran Agrarian Enquiry Committee)

  • ஆங்கில அரசின் சார்பில் சம்பரான் விவசாய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
  • அதில் காந்தியும் ஒரு உறுப்பினராக சேர்ந்துக் கொண்டார்.

சம்பரான் விவசாய சட்டம்

  • விசாரணைக் குழுவின் அடிப்படையில் “சம்பரான் விவசாய சட்டம் 1918” (Champaran Agrarian Act) நிறைவேற்றப்பட்டது.
  • சம்பரான் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு = மே 1918.

கேடா (கைரா) சத்தியாக்கிரகம் 1918

  • கேடா சத்தியாக்கிரகம் நடைபெற்ற ஆண்டு = 1918.
  • கேடா சத்தியாக்கிரகம் நடைபெற்ற இடம் = குஜராத்தின் கேடா மாவட்டம்.
  • கேடா சத்தியாக்கிரகம் போராட்டத்திற்கான காரணம் = கடுமையான பஞ்சத்திலும், வரியை செலுத்த கட்டாயப்படுத்தல்.

வரிகொடா இயக்கம்

  • கேடா சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் = காந்தியடிகள்.
  • கேடா சத்தியாக்கிரக போராட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் “வரிகொடா இயக்கத்தை” துவக்கினர்.
  • “வரிகொடா இயக்கத்திற்கு” தலைமை தாங்கியவர் = காந்தியடிகள்.

சத்தியாகிரகம்

  • சத்தியாக்கிரக முறையில் போராட விவசாயிகளை வேண்டினார் காந்தியடிகள்.
  • விவசாயிகள் அச்சமின்றி எல்லா எதிர்ப்புகளையும் சந்திக்க ஊக்கமளித்தார்.
  • இதனால் அரசாங்கம் ஒரு தீர்விற்கு வரவேண்டி இருந்தது.

சர்தார் வல்லபாய் பட்டேல்

  • கேடா சத்தியாக்கிரக போராட்டத்தில் ஒரு முக்கிய தலைவராக இருந்தவர் = சர்தார் வல்லபாய் பட்டேல்.

மாப்ளா கிளர்ச்சி 1921

  • மாப்ளா கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு = 1921.
  • மாப்ளா கிளர்ச்சி நடைபெற்ற இடம் = மலபார், கேரளா.
  • “மாப்ளா” என்றால் என்ன = கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள முஸ்லிம் விவசாயிகள்.
  • “ஜென்மிஸ்” என்றால் என்ன = கேரளாவின் மலபார் பகுதியில் இருந்த இந்து ஜமீன்தார்கள்.
  • மாப்ளா கிளர்ச்சிக்கான காரணம் = இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) மற்றும் ஆங்கில அரசு சேர்ந்து முஸ்லிம் (மாப்ளா) விவசாயிகளை அடக்குமுறை செய்து சுரண்டுதல்.
மாப்ளா கிளர்ச்சி
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

மலபார் மாவட்ட மாநாடு

  • மலபார் மாவட்ட மாநாடு நடைபெற்ற ஆண்டு = ஏப்ரல் 1920.
  • இம்மாநாட்டில் நிலக்கிழார் – குத்தகைதாரர்கள் இடையே உறவினை ஒழுங்குபடுத்த சட்டம் இயற்ற கோரியது.

மாப்ளா கிளர்ச்சி

  • மாப்ளா கிளர்ச்சி எப்பொழுது துவங்கியது = ஆகஸ்ட் 1921.
  • மாப்ளா விவசாயிகள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், நிலக்கிழார்களின் வீடுகள் போன்றவற்றை தாக்கினர்.
  • மாப்ளா கிளர்ச்சி எப்பொழுது அடக்கப்பட்டது = டிசம்பர் 1921.
  • அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி மாப்ளா கிளர்ச்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை = 2337.
  • 45000 க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பர்தோலி சத்தியாக்கிரகம் 1929-30

  • பர்தோலி சத்தியாக்கிரகம் நடைபெற்ற ஆண்டு = 1929 – 1930.
  • பர்தோலி சத்தியாக்கிரகம் நடைபெற்ற இடம் = பர்தோலி, குஜராத்.
  • பர்தோலி சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் = சர்தார் வல்லபாய் பட்டேல்.
  • பர்தோலி சத்தியாக்கிரக போராட்டத்திற்கான காரணம் = 1928இல் அரசு நிலவருவாயை 30% அளவிற்கு உயர்த்தியது.
பர்தோலி சத்தியாக்கிரகம்
8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

வரிகொடா இயக்கம்

  • பர்தோலியில் “வரிகொடா இயக்கம்” துவங்கப்பட்ட தினம் = 12 பிப்ரவரி 1928.
  • வரி செலுத்த மறுத்த விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்க முயன்றனர்.
  • ஆனால் ஆங்கில அரசு அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி ஏலத்தில் விற்றது.

1937 காங்கிரஸ் அரசு

  • 1937இல் ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசு, கையகப்படுத்தி விர்கபப்ட்ட நிலங்களை மீண்டும் அந்தந்த விவசாயிகளிடம் ஒப்படைத்தது.

புத்தக வினாக்கள்

  1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது? = ஜமீன்தாரி முறை.
  2. எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது? = காரன்வாலிஸ் பிரபு.
  3. மகல்வாரி முறையில் ‘மகல்’ என்றால் என்ன? = கிராமம்.
  4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது? = பஞ்சாப்.
  5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? = வில்லியம் பெண்டிங் பிரபு.
  6. இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது? = வங்காளம்.
  7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது? = திகம்பர் பிஸ்வாஸ், பிஷ்ணு சரண் பிஸ்வாஸ்.
  8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது? = சர்தார் வல்லபாய் பட்டேல்.
  9. _______________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்? = மகல்வாரி முறை.
  10. மகல்வாரி முறை ___________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்? = ஹோல்ட் மெகன்சி.
  11. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______________ ல் நடைபெற்றது? = வங்காளத்தில்
  12. மாப்ளா கலகம் ____________ ல் நடைபெற்றது? = கேரளாவின் மலபார்
  13. ‘சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு ______________? = மே 1918.
  14. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்? = சரி.
  15. இரயத்துவாரி முறை, தாமஸ் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது? = சரி.
  16. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது? = தவறு.
  17. “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1918இல் நிறைவேற்றப்பட்டது? = தவறு.
  18. 8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  19. 8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  20. 8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  21. 8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  22. 8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  23. 8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  24. 8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
  25. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1817 – 1818)

Leave a Reply