10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

Table of Contents

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

  • தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய மொழி ஆகும்.
  • காலத்தால் மூத்த மொழி ஆகும்.
  • தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி

  • “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் போற்றுபவர் = பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

செம்மொழியின் இலக்கணம்

  • “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
  • செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் = பரிதிமாற்கலைஞர்.

16 செவ்வியல் தன்மைகள்

  • “தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.
  • 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று கூறியவர் = பாவாணர்.
  • செவ்வியல் தன்மைகள் மொத்தம் = 16.

முஸ்தபாவின் செம்மொழி தகுதிப்பாடுகள்

  • தொன்மை, பிறமொழித் தாக்கமின்மை, தாய்மை, தனித்தன்மை, இலக்கிய வளமும் இலக்கியச் சிறப்பும், பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக் கோட்பாடு எனப் 11 தகுதிகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ளார்.
  • முஸ்தபா கூறும் செம்மொழி தகுதிப்பாடுகள் மொத்தம் = பதினொன்று.
10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி
10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

தொன்மை

  • முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம்.
  • அவன் பேசிய மொழி தமிழ் மொழியே என்பர்.
  • உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருதி “என்றுமுள தென்தமிழ்” என்பார் கம்பர்.
  • “என்றுமுள தென்தமிழ்” என்று கூறியவர் = கம்பர்.

பிறமொழித் தாக்கமின்மை

  • மொழிக் கலப்பினை ஏற்படுத்துவது = காலச்சூழல்.
  • பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது.
  • அனால், தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.
  • அதிகளவு வேர்ச்சொற்களை கொண்டுள்ள ஒரே மொழி = தமிழ்.

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

தாய்மை

  • தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது.
  • தமிழ் மொழி பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது என்று கூறியவர் = கால்டுவெல்.
  • 1090 மொழிகளுக்கு வேர்ச்சொல்லையும், 109 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ்.

தனித்தன்மை

  • இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் கொண்டது தமிழ்.
  • தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
  • திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.
10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி
10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு

  • உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
  • சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் = 26350.
  • “அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின் வேறு எம்மொழியிலும் இல்லை” என்று கூறியவர் = உலக இலக்கியங்களை ஆய்ந்த “கமில்சுவலபில்” என்னும் செக் நாடு மொழியியல் அறிஞரின் முடிபு.
  • “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” பாராட்டி கூறியவர் = மாக்சுமுல்லர்.
  • தமிழ் மிகவும் பண்பட்ட மொழி என்று கூறியவர் = மாக்சுமுல்லர்.
  • சங்க இலக்கியங்கள் “மக்கள் இலக்கியங்கள்” எனப்படும்.
  • “தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்கச் விருப்பதை உண்டாக்குவது” என்று கூறியவர் = கெல்லட்.
  • நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.
  • தொல்காபிய்யம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று இலக்கணங்களை கூறுகிறது.
  • தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர்.
  • அகத்தியர் ஐந்து (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) இலக்கணங்களை கூறியுள்ளார்.

பொதுமைப் பண்பு

  • தமிழர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்கள்.
  • செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டவர்கள்.

நடுவுநிலைமை

  • சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை.
  • இயற்கையோடு இணைந்தவை.
  • மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை.

பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு

  • சங்கப் படைப்புகள், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை” முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்திகிறது.

உயர் சிந்தனை

  • “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று கூறிய நூல் = புறநானூறு.
  • “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.

கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு

  • தமிழ்ச்சான்றோர் மொழியை, “இயல், இசை, நாடகம்” எனப் பிரித்து வளமடையச் செய்தனர்.
  • எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.

மொழிக் கோட்பாடு

  • “இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” என்று கூறியவர் = முனைவர் எமினோ.
  • ஒருமொழிக்கு 35 ஒலிகள் இருந்தாலே போதும் என்பர்.
  • தமிழ் மொழியோ 500 ஒலிகளைக் கொண்டுள்ளது.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து

  • இவ்வருஞ்சிறப்புமிக்க தமிழைச் “செம்மொழி” என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004வரை தொடர்ந்தது.
  • நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு = அக்டோபர் 2004.

செம்மொழி காலக்கோடு

1901 மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.
1918 மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டித் தீர்மானம் நிறைவேற்றி, அதை இந்திய அரசுக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வற்புறுத்தியது.
1918 சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1919 கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.
1966 உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்டது.
2004 நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

செம்மொழி அந்தஸ்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

  • தமிழை “செம்மொழி” என்று முதன் முதலில் கூறியவர் = பரிதிமாற் கலைஞர்.
  • பரிதிமாற்கலைஞர் எந்த இதழில் “உயர்தனிச் செம்மொழி” என்ற கட்டுரையை எழுதினார் = மதுரை தமிழ்ச்சங்க இதழ் “செந்தமிழ்”
  • எந்த ஆண்டு முதன் முதலில் பரிதிமாற்கலைஞர் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று அறிவித்தார் = 1901.
  • 1918ல் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றிய அமைப்புகள் = மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சங்கம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு.
  • எந்த ஆண்டு கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றியது = 1919.
  • “உயர்தனிச் செம்மொழி” என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் = தேவநேயப்பாவாணர்.

மொழிப்பற்று குறித்து தந்தை பெரியார் கூற்று

  • “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப்பற்றே. மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது என்பது உறுதி. தேசம் என்பது மொழியை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை” என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப்பற்றே” என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • “மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது என்பது உறுதி” என்று கூறியவர் = தந்தை பெரியார்
  • “தேசம் என்பது மொழியை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை” என்று கூறியவர் = தந்தை பெரியார்.

 

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

1 thought on “10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *