DAILY CURRENT AFFAIRS 29 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
உலக சொரியாசிஸ் தினம்
உலக சொரியாசிஸ் தினம் (WORLD PSORIASIS DAY), அக்டோபர் 29 அன்று அனுசரிக்கப்பட்டது, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
2021 உலக சொரியாசிஸ் தினத்தின் கருப்பொருள் “செயல்பாட்டிற்காக ஒன்றுபடுதல் / UNITING FOR ACTION” என்பதாகும்.
சர்வதேச இணைய தினம்
சர்வதேச இணைய தினம் (INTERNATIONAL INTERNET DAY) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது
1969 ஆம் ஆண்டில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு மாற்றப்பட்ட முதல் மின்னணுச் செய்தியை இந்த நாள் குறிக்கிறது.
18-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு
18-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு (18TH ASEAN – INDIA SUMMIT), புருனே நாட்டில் நடைபெற்றது. இதில் மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் பிரதமர் கலந்துக் கொண்டார். இம்மாநாடு புருனே சுல்தான் தலைமையில் நடைபெற்றது
பிரதமர் மோடி கலந்துக் கொள்ளும் 9-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு இதுவாகும்.
கதி சக்தி எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் முதல் முழு மலிவு கட்டண ஏசி-3 அடுக்கு ரயில்
இந்திய ரயில்வே இந்தியாவின் முதல் முழு பொருளாதார ஏசி-3 அடுக்கு ரயிலை – கதி சக்தி எக்ஸ்பிரஸ் 29 அக்டோபர் 2021 முதல் இயக்கத் தொடங்கியது / INDIAN RAILWAYS STARTED RUNNING INDIA’S FIRST FULL ECONOMY AC-3 TIER TRAIN – GATI SHAKTI EXPRESS FROM 29 OCTOBER
எகானமி ஏசி-3 டயர் கோச்சின் அடிப்படைக் கட்டணம், சாதாரண ஏசி3 வகைப் பெட்டிகளை விட 8% குறைவாகும்.
இந்த ரயில் டெல்லி மற்றும் பாட்னா இடையே இயக்கப்படும்.
ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகள்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன / BOSNIA AND HERZEGOVINA: POOREST COUNTRY IN EUROPE
இந்நாடுகளில் வேலையின்மை விகிதம் மட்டும் 40% அளவிற்கு அதிகரித்துள்ளது
இது ஜிபூட்டி மற்றும் காங்கோவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மிக உயர்ந்த நிலையாகும்.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்தி காந்த் தாஸின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது / RBI GOVERNOR SHAKTIKANTA DAS’S TENURE EXTENDED FOR 3 MORE YEARS
தாஸ், ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக டிசம்பர் 11, 2018 அன்று மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.
பள்ளிக்கான உலகின் முதல் FIFA கால்பந்து பாடத்திட்டம்
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (KISS), புவனேஸ்வர், உலகின் முதல் பள்ளிக்கான FIFA கால்பந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது / ODISHA CHIEF MINISTER LAUNCHES WORLD’S 1ST FIFA FOR SCHOOL PROGRAMME
ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் இந்த திட்டத்தை 27 அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் ஐஎம்எஸ் சான்றளிக்கப்பட்ட ரயில்
சென்னை – மைசூர் – சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் தெற்கு ரயில்வேயின் முதல் ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்புகள் (ஐஎம்எஸ்) சான்றளிக்கப்பட்ட ரயிலாக மாறியுள்ளது / CHENNAI – MYSORE – CHENNAI SHATABDI EXPRESS HAS BECOME THE FIRST INTEGRATED MANAGEMENT SYSTEMS (IMS) CERTIFIED TRAIN OF SOUTHERN RAILWAY.
இது இந்திய இரயில்வேயின் முதல் சதாப்தி மற்றும் இந்திய இரயில்வேயில் இரண்டாவது அஞ்சல்/எக்ஸ்பிரஸ் ரயிலாகவும் மாறியுள்ளது.
உலக பக்கவாத தினம்
பக்கவாதத்தின் தீவிர தன்மை மற்றும் அதிக விகிதங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 அன்று உலக பக்கவாதம் தினம் (WORLD STROKE DAY) கொண்டாடப்படுகிறது.
உலக பக்கவாதம் அமைப்பால் (WSO) இந்த நாள் நிறுவப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான கரு ‘நிமிடங்கள் உயிர்களைக் காப்பாற்றும் / MINUTES CAN SAVE LIVES’ என்பதாகும்.
நாட்டிலேயே முதல் முறையாக தபால்களை விநியோகிக்க ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள ஜே.[i.நகர் தபால் நிலைய ஊழியர்களுக்கு, நாட்டிலேயே முதல் முறையாக தபால்களை விநியோகிக்க ஏதுவாக மின்சார வாகனம் வழங்கப்பட்டுள்ளது
இதற்காக தபால் நிலைய வளாகத்தில் சார்ஜிங் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
நீரா டான்டன் வெள்ளை மாளிகையின் பணியாளர் செயலாளராக நியமனம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டான்டன் வெள்ளை மாளிகையின் பணியாளர் செயலாளராக நியமனம் செய்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார் / INDIAN-AMERICAN POLICY EXPERT NEERA TANDEN NAMED WHITE HOUSE STAFF SECRETARY
இப்பதவியின் அமர்த்தப்படும் முதல் இந்திய-அமெரிக்கர் இவராவார். இவர் தற்போது அதிபரின் மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் “இல்லம் தேடி கல்வி திட்டம்”
தமிழகத்தில் முதல்வர் அவர்களால் பள்ளி மாணவர்களுக்காக “இல்லம் தேடி கல்வி திட்டம்” துவக்கி வைக்கப்பட்டது
குழந்தைகளின் கற்றல் இடைவெளியை குறைக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் “இல்லம் தேடி கல்வி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது
உலகின் முதல் தபால் தலை
உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழமையான “ஸ்டாம்ப்” தபால் தலை ஏலத்துக்கு வைக்கப்பட்டது
“பென்னி பிளாக்” எனப்படும் பிரிட்டன் அஞ்சல் வில்லை, 3 ஸ்டாம்ப் தொகுப்பி, 2 ஏற்கனவே அருங்காட்சியத்தில் உள்ளன.
சு.வெங்கடேசனின் “காவல் கோட்டம்” நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு
சாகித்திய அகாடமி விருது பெற்ற, மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் அவர்களின் “காவல் கோட்டம்” நாவல், சாகித்திய அகாதமியால் ஆங்கிலத்தில் “THE BASTION” என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது
பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழு மறுசீரமைப்பு
7 பேர் கொண்ட பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழு மாருசீரமைப்பு செய்யப்பட்டது
இக்குழுவின் தலைவராக பிபேக் தேப்ராய் தொடர்ந்து நீடிப்பார்
குழுவின் உறுபினர்கள் = ராகேஷ் மோகன், பூனம் குப்தா, ராம் மோகன்
புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் – சஜித் செனாய், நீல்கந்த் மிஸ்ரா மற்றும் நிலேஷ் ஷா ஆகியோர் ஆவர்
க்ரிஷி உடான் 2.0
கிரிஷி உடான் 2.0 திட்டத்தை மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
வேளாண் விலைப் பொருட்களின் மதிப்பை விமான போக்குவரத்து மூலம் மேம்படுத்தி வேளாண் மதிப்பு சங்கிலிக்கு பங்களிப்பதை கிரிஷி உடான் 2.0 நோக்கமாக கொண்டுள்ளது