DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
ரஜினிகாந்துக்கு தாதாஷாகிப் பால்கே விருது
தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்திற்கு, 51-வது தாதா ஷாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது (51ST DADASAHEB PHALKE AWARD)
இந்திய சினிமா உலகிற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது
ஜோசப் ஏ. குஷ்மன் விருது
ஜோசப் ஏ. குஷ்மன் விருது, இந்த ஆண்டு டாக்டர் ராஜீவ் நிகம் (முன்னாள் தலைமை விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர்-தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனம், கோவா, இந்தியா) அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது ( RAJIV NIGAM (FORMER CHIEF SCIENTIST, CSIR-NATIONAL INSTITUTE OF OCEANOGRAPHY, GOA, INDIA), SELECTED AS 2022 RECIPIENT OF J.A. CUSHMAN AWARD FOR EXCELLENCE IN FORAMINIFERAL RESEARCH)
குஷ்மேன் அறக்கட்டளையின் மிக உயர்ந்த கவுரவமான இந்த விருது, ஃபோராமினிஃபெரா ஆராய்ச்சித் துறையில் டாக்டர். நிகாமின் வாழ்நாள் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை உருவாக்ககும் GAIL
அரசுக்கு சொந்தமான கெயில் (இந்தியா) லிமிடெட் அடுத்த 12-14 மாதங்களில் இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை உருவாக்கவுள்ளது (STATE-OWNED GAIL (INDIA) LTD WILL BUILD INDIA’S LARGEST GREEN HYDROGEN PLANT IN THE NEXT 12-14 MONTHS)
அது இயற்கை எரிவாயு வணிகத்தை கார்பன் இல்லாத எரிபொருளுடன் சேர்க்கிறது
ரஸ்கின் பாண்டின் புதிய புத்தகம்
புகழ் பெற்ற எழுத்தாளரான ரஸ்கின் பான்ட், தந்து புதிய தொகுப்பு நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூலிற்கு WRITING FOR MY LIFE எனப் பெயரிடப்பட்டுள்ளது
இவரின் முதல் தெகுப்பு நூலான THE BEST OF RUSKIN BOND, வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த தொகுப்பு நூல வெளியிடப்பட்டுள்ளது
இந்திய தேர்தல் ஆணையத்தின் கருடா செயலி
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் “கருடா” என்ற புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (ELECTION COMMISSION OF INDIA LAUNCHES GARUDA APP)
இதன் மூலம் தேர்தல் பணிகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், சரியான நேரத்திலும் முடிக்க இயலும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
இராணுவ தளபதிகள் மாநாடு புது தில்லியில் துவங்கியது
2021 ஆம் ஆண்டின் 2வது ராணுவ தளபதிகள் மாநாடு இன்று அக்டோபர் 25 முதல் அக்டோபர் 28, 2021 வரை புது தில்லியில் நடைபெற உள்ளது (FOUR-DAY ARMY COMMANDERS’ CONFERENCE BEGINS ON OCTOBER 25 IN NEW DELHI)
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்தின் உயர்மட்ட தளபதிகளுடன் உரையாடி உரையாட உள்ளார்
இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் ஒரு உச்ச அளவிலான இரு வருட நிகழ்வாகும்.
நாசாவின் DART விண்வெளி திட்டம்
தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA – NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION) இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனையை (DART – DOUBLE ASTEROID REDIRECTION TEST) தொடங்க தயாராகி வருகிறது.
ஒரு சிறுகோளுடன் பூமியின் மோதலைத் தடுப்பதற்கான தொழில்நுட்பங்களின் ஒரு கிரக பாதுகாப்பு உந்துதல் சோதனை ஆகும்.
அசோக் லேலாண்டின் “மும்கின்” திட்டம்
அசோக் லேலாண்ட் நிறுவனம் சார்பில் ஜம்மு காஸ்மீர் இளைஞர்களுக்கு 500 சிறிய ரக தோஸ்த் வாகனம் வழங்கப்பட்டது (ASHOK LEYLAND HANDS OVER 500 VEHICLES TO ‘PROJECT MUMKIN’ FOR JK YOUTH)
இளைஞர்கள் இடையே தொழில் ஆர்வத்தை அதிகரிக்க ஏதுவாக் அசோக் லேலாண்ட் நிறுவனம் சார்பில் இந்த வாகனங்கள் இலவசமாக வழங்கப்பட்டது
சர்வதேச கலைஞர்கள் தினம்
கலைஞர்களையும் அவர்களின் அனைத்து பங்களிப்புகளையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்பானிஷ் கலைஞரான பாப்லோ பிக்காசோவைக் நினைவு கூறும் வகையில் அவரது பிறந்தநாள் அக்டோபர் 25 இல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது
சர்வதேச குள்ளத்தன்மை விழிப்புணர்வு தினம்
சர்வதேச குள்ளத்தன்மை விழிப்புணர்வு தினம் (International Dwarfism Awareness Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது
இந்த நாள் குள்ளவாதத்தை ஏற்படுத்தும் எலும்பு வளர்ச்சி கோளாறான அகோண்ட்ரோபிளாசியாவுக்கான விழிப்புணர்வை பரப்புகிறது. இது ஒவ்வொரு 15,000 இல் ஒருவருக்கும் ஏற்படுகிறது.
72-வது இன்டர் சர்விசஸ் கால்பந்து சாம்பியன்சிப்
72-வது இன்டர் சர்விசஸ் கால்பந்து சாம்பியன்சிப் போட்டிகள், கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது (THE 72ND INTER-SERVICES FOOTBALL CHAMPIONSHIP WAS HELD AT MAHARAJA STADIUM, KOCH)
ஆர்மி ரெட் மற்றும் ஏர் ஃபோர்ஸ் இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. சாம்பியன் பட்டத்தை இந்திய விமானப்படை வென்றது.
தமிழகத்தில் “இ-முன்னேற்றம்”, “தகவல் தொழில்நுட்ப நண்பன்” இணையதளங்கள்
தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” ஆகிய இணையதளங்களை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்
புதிய தமிழ் விசைப்பலகை குறியீடுகளும் அப்பொழுது வெளியிடப்பட்டன
உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம்
உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் (GLOBAL MEDIA AND INFORMATION LITERACY WEEK), அக்டோபர் 24 முதல் 31 ஆம் தேதிவரை கொண்டாடப்பட உள்ளது
உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் 2021 தென்னாப்பிரிக்காவால் நடத்தப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மொராக்கோவில் உள்ள ஃபெஸ் நகரில் உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் முதலில் நடத்தப்பட்டது