DAILY CURRENT AFFAIRS 30 OCTOBER 2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS 30 OCTOBER 2021

                            DAILY CURRENT AFFAIRS 30 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

மாநில ஆற்றல் திறன் குறியீடு (SEEI) 2020

  • மாநில ஆற்றல் திறன் குறியீட்டில் (SEEI = STATE ENERGY EFFICIENCY INDEX 2020) கர்நாடக மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது
  • 2-வது இடத்தை ராஜஸ்தான் பிடித்தது. 3-வது இடத்தை ஹரியானா பிடித்துள்ளது
  • தமிழகம் 7-வது இடத்தை பிடித்துள்ளது

டைம்ஸ் உயர் கல்வியின் உலக நற்பெயர் தரவரிசை

DAILY CURRENT AFFAIRS 30 OCTOBER 2021

  • உலகப் புகழ் பெற்ற டைம்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டைம்ஸ் உயர் கல்வி உலக நற்பெயர் தரவரிசை (TIMES HIGHER EDUCATION (THE)’S WORLD REPUTATION RANKINGS 2021) பட்டியலில் இந்தியாவின் நான்கு உயர்கல்வி நிறுவனங்கள இடம் பெற்றுள்ளன
  • இந்தியாவின் இருந்து இடம் பிடித்த நான்கு நிறுவனங்கள் = இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc) பெங்களூரு, ஐடி பாம்பே, ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகும்
  • முதல் 3 இடங்கள் = அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) மற்றும் யுனைடெட் கிங்டமின் (யுகே) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

நாட்டின் மிகப்பெரிய நறுமணப் பூங்கா

DAILY CURRENT AFFAIRS 30 OCTOBER 2021

  • நாட்டின் மிகப்பெரிய நறுமணப் பூங்கா, உத்திரக்காண்டில் திறக்கப்பட்டுள்ளது (UTTARAKHAND GETS COUNTRY’S LARGEST AROMATIC GARDEN)
  • இது உத்திரக்காண்டின் நைனிடால் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தோட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள 140 வகையான நறுமண இனங்கள் உள்ளன.

2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பசுமை ஆற்றல் விருது

DAILY CURRENT AFFAIRS 30 OCTOBER 2021

  • 2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பசுமை ஆற்றல் விருது, டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது (TVS MOTOR COMPANY AWARDED INDIA GREEN ENERGY AWARD 2020)
  • டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு இந்திய பசுமை ஆற்றல் விருது 2020 இன் மூன்றாவது பதிப்பில் ‘சிறந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயனர்’ என்ற விருதை இந்திய பசுமை ஆற்றல் கூட்டமைப்பு (IFGE) வழங்கியுள்ளது.

வனவிலங்கு செயல் திட்டத்தை செயல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம்

DAILY CURRENT AFFAIRS 30 OCTOBER 2021

  • இந்தியாவில் வனவிலங்கு செயல் திட்டத்தை செயல்படுத்திய முதல் மாநிலம் என்ற சிறப்பை மகாராஸ்டிரா பெற்றுள்ளது (MAHARASHTRA BECAME 1ST STATE TO PASS ITS OWN WILDLIFE ACTION PLAN 2021-30)
  • வனவிலங்குகளுக்கான மாநில வாரியத்தின் (SBWL) 17வது கூட்டத்தின் போது, மகாராஷ்டிரா அரசு அதன் சொந்த வனவிலங்கு செயல் திட்டத்திற்கு (2021-2030) ஒப்புதல் அளித்தது, இது அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்

  • கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக அக்டோபர் 29, 2021 அன்று காலமானார். அவருக்கு வயது 46 ஆகும் (PUNEETH RAJKUMAR PASSES AWAY DUE TO CARDIAC ARREST AT 46)
  • இவர் இறந்த பின்பு இவரின் கண் தானம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

சிறந்த பயணிகள் சேவைக்கான மெட்ரோ ரயில் விருது

  • டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ‘சிறந்த பயணிகள் சேவைகள் மற்றும் திருப்தியுடன் கூடிய மெட்ரோ ரயில்’ விருதைப் பெற்றுள்ளது (DELHI METRO WINS ‘METRO RAIL WITH BEST PASSENGER SERVICES’ AWARD)
  • 14வது நகர்ப்புற நகர்வு இந்தியா (UMI) மாநாட்டில் 2021 இல் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களால் வழங்கப்பட்டது.

சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரத்திற்கான விருதை சூரத் வென்றுள்ளது

  • மத்திய அரசு 29 அக்டோபர் 2021 அன்று சூரத்தை சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரமாகவும் (SURAT = THE CITY WITH THE BEST PUBLIC TRANSPORT SYSTEM), கொச்சிக்கு மிகவும் நிலையான போக்குவரத்து அமைப்பிற்காகவும் விருது வழங்கியது (KOCHI = FOR THE MOST SUSTAINABLE TRANSPORT SYSTEM)
  • ஷாஜனாபாத் மறுவடிவமைப்பு கார்ப்பரேஷனின் மறுவடிவமைப்பு திட்டத்திற்காக டெல்லிக்கு சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பு (DELHI = WAS AWARDED THE BEST NON-MOTORISED TRANSPORT SYSTEM) வழங்கப்பட்டது.

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான பிளாக்ஸ்வான் விருது

  • தி கிரேட்டஸ்ட் பிராண்டுகள் மற்றும் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ரேணு குப்தா பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான பிளாக்ஸ்வான் விருதைப் பெற்றுள்ளார் (RENU GUPTA AWARDED THE BLACKSWAN AWARD FOR WOMEN EMPOWERMENT)
  • புதுமையின் அடிப்படையிலான வணிக யோசனைகளின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக அவர் கௌரவிக்கப்பட்டா

ஜூலை 18 – தமிழ்நாடு தினம்

  • 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது.
  • 1967 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணா அவர்களால் ஜூலை 18 ஆம் தேதி, மெட்ராஸ் பிரசிடென்சியின் பெயரை தமிழ்நாடு என மாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப் பட்டது.
  • 2019ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என்று முந்தைய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திர மயமாக்கப்பட்ட துப்புரவு முறை இயந்திரம்

  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-CMERI, துர்காபூர், உள்நாட்டு இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு முறையை உருவாக்கியுள்ளது (COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH (CSIR)-CMERI, DURGAPUR HAS DEVELOPED AN INDIGENOUS MECHANIZED SCAVENGING SYSTEM)
  • இது 5000 மக்கள் அடர்த்திக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது 300 மிமீ விட்டம் வரை மற்றும் 100 மீட்டர் நீளம் வரை கழிவுநீர் அமைப்பு மிகவும் பொருத்தமானது.

இந்தியாவின் முதல் மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி ஆய்வுக் கலம் – சமுத்ராயன்

  • “சமுத்ராயன்” என்னும் இந்தியாவின் முதலாவது மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி ஆய்வுக் கலத்தை மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார் (INDIA’S FIRST AND UNIQUE MANNED OCEAN MISSION SAMUDRAYAN LAUNCHED)
  • “மத்சியா 6000” என்னும் ஆழ்கடல் நீர்மூழ்கி கலம், 2024-ஆம் ஆண்டில் ஒத்திகைக்கு தயாராக இருக்கும் எனவும் அவர் அறிவித்தார்
  • 1000 முதல் 5500 மீட்டர் ஆழத்தில் உள்ள உயிரற்ற வளங்களை ஆழமான கடல் ஆய்வுக்கு இது உதவும்.

இந்தியாவின் முதல் நீண்ட தூர 1 டன் வெடிகுண்டு சோதனை

  • இந்திய விமானப்படை (IAF) குழு மற்றும் DRDO 29 அக்டோபர் 2021 அன்று, சுகோய்-30 போர் விமானத்தில் இருந்து, ஒடிசாவின் பாலசோர் பகுதியில், நாட்டின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீண்ட தூர வெடிகுண்டை (LRB) வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இது 1000 கிலோ எடை கொண்டதாகும் (INDIA’S 1ST LONG-RANGE 1 TON GUIDED BOMB TEST-FIRED)
  • 100 கிலோமீட்டர் தூரம் வரக்கூடிய LR வெடிகுண்டு, 10 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும் IAF போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டது.

ஆர்.வி.ரவீந்திரன் குழு

  • “பெகாச” மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்துள்ள புகர் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முன்னால் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழுவினை அமைத்துள்ளது
  • இக்குழுவில் பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகளின் விலை 2 ரூபாயாக அதிகரிப்பு

  • தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தீப்பெட்டிகளின் விலை 2 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது

டிரிகோனோப்டெரஸ் கரோனா – சிறிய வகை வண்டு இனம் கண்டுபிடிப்பு

  • இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுகளில் புதிய வகை வண்டு இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது (TRIGONOPTERUS CORONA, THE NEW SPECIES OF TINY BEETLE NAMED AFTER THE CORONAVIRUS)
  • இதற்கு TRIGONOPTERUS CORONA என பெயரிட்டுள்ளனர். கொரொனோ வைரஸ் நோய்க் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இவ்வண்டிற்கு இப்பெயர் சூட்டப்பட்டது

அயோத்தி ராம் கதா பூங்கா பெயர் மாற்றம்

  • அயோத்தியில் சரயு நதிக்கரையில், ராம் கதா பூங்கா புதுப்பிக்கப்பட்டு, ராணி ஹியோ ஹ்வாங்-ஓக் நினைவு பூங்கா என மருபெயரிடப்பட்டுள்ளது (RAM KATHA PARK: RENAMED AS QUEEN HEO HWANG-OK MEMORIAL PARK)
  • இந்த கொரிய ராணி, இந்திய வம்சத்தை சேர்ந்தவர் என நம்பப்படுகிறது.
  • 2000 ஆம் ஆண்டில், இந்தியாவும் தென் கொரியாவும் அயோத்தி மற்றும் கிம்ஹேவை சகோதர நகரங்களாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இவர் அயோத்தியை ஆண்ட பத்மசேனன் மன்னன் மற்றும் ராணி இந்துமதியின் மகள் “இளவரசி சூரிரத்னா” என கூறப்படுகிறது

இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள், 2020 அறிக்கை

  • தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் “இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள், 2020” என்ற தலைப்பில் தனது அறிக்கையை வெளியிட்டது.
  • 2019 ஆம் ஆண்டினை காட்டிலும் 2020 ஆம் ஆண்டு தற்கொலைகள் 10% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • மாணவர்களின் தற்கொலைகள் 21.20 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
  • 2014 மற்றும் 2020 க்கு இடையில் தினசரி ஊதியம் பெறுபவர்களிடையே தற்கொலைகளின் பங்கு இரட்டிப்பாகியுள்ளது.
  • தினசரி கூலித் தொழிலாளிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

நிர்வாக செயல்திறன் அறிக்கை

  • பொது விவகார மையத்தின் (பிஏசி) நிர்வாக செயல்திறன் குறித்த சமீபத்திய ஆய்வில், கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளன.
  • பெரிய மாநிலங்களில் முதல் 3 இடம் = கேரளா, தமிழகம் மற்றும் தெலுங்கானா
  • சிறிய மாநிலங்களில் முதல் 3 இடம் = சிக்கிம், கோவா மற்றும் மிசோராம்
  • யூனியன் பிரதேசங்களில் முதல் 3 இடம் = புதுச்சேரி, ஜம்மு காஸ்மீர் மற்றும் சண்டிகர்

Leave a Reply