DAILY CURRENT AFFAIRS 31 OCTOBER 2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS 31 OCTOBER 2021

                     DAILY CURRENT AFFAIRS 31 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 31 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

உலக சிக்கன தினம்

DAILY CURRENT AFFAIRS 31 OCTOBER 2021

  • உலக சிக்கன தினம் (WORLD THRIFT DAY / WORLD SAVINGS DAY) உலகம் முழுவதும் ஆண்டு தோறும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
  • ஆனால் இந்தியாவில் உலக சிக்கன தினம் அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
  • இன்றைய உலகில் சேமிப்பின் முக்கியத்துவத்தையும், பணத்தைச் சேமிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் ஊக்குவிக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

தேசிய ஒற்றுமை தினம்

DAILY CURRENT AFFAIRS 31 OCTOBER 2021

  • இந்திய தேசிய ஒற்றுமை (NATIONAL UNITY DAY OR RASHTRIYA EKTA DIWAS) தினம் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
  • இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினம் நினைவுகூருகிறது, அவர் பல சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைக்க முக்கியப் பங்காற்றினார்.
  • அவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும், இந்தியக் குடியரசின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

உலக நகரங்கள் தினம்

DAILY CURRENT AFFAIRS 31 OCTOBER 2021

  • உலக நகரங்கள் தினம் (WORLD CITIES DAY), ஐக்கிய நாடுகள் அவை அறிவித்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது
  • 2014 இல் முதன்முதலில் நடத்தப்பட்ட உலகளாவிய அனுசரிப்பு, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட புரவலன் நகரத்துடன் ஒருங்கிணைந்து ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டத்தால் (UN-Habitat) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கரு = ADAPTING CITIES FOR CLIMATE RESILENCE

தேசிய நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வங்கியின் புதிய தலைவர்

DAILY CURRENT AFFAIRS 31 OCTOBER 2021

  • தேசிய நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வங்கியின் புதிய தலைவராக கே.வி.காமத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் (THE GOVERNMENT OF INDIA HAS APPOINTED K V KAMATH AS CHAIRPERSON OF THE NATIONAL BANK FOR FINANCING INFRASTRUCTURE AND DEVELOPMENT (NABFID))
  • அவர் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட வங்கியாளர் மற்றும் புதிய மேம்பாட்டு வங்கியின் (NDB) முதல் தலைவர் ஆவார்.
  • NaBFID என்பது இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட வளர்ச்சி நிதி நிறுவனம் (DFIs).

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிர் தப்பிய சுனாவோ சுபோய் காலமானார்

DAILY CURRENT AFFAIRS 31 OCTOBER 2021

  • ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிர் தப்பிய சுனாவோ சுபோய் காலமானார் (HIROSHIMA NUCLEAR BOMB ATTACK SURVIVOR, SUNAO TSUBOI PASSES AWAY)
  • உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய ஜப்பானிய அணு ஆயுதங்களுக்கு எதிரான முன்னணி பிரச்சாரகர் 96 வயதில் இறந்தார்.
  • அமெரிக்க திபராக இருந்த பாரக் ஒபாமா, ஹிரோஷிமா சென்ற பொழுது சுனாவோ சுபோயை சந்தித்தது குறிப்பிடத்தக்கது

புற்றுநோயியல் நிபுணர் பத்மஸ்ரீ டாக்டர் மாதவன் கிருஷ்ணன் நாயர் காலமானார்

  • பிரபல புற்றுநோய் மருத்துவரும், மண்டல புற்றுநோய் மையத்தின் (ஆர்.சி.சி) நிறுவன இயக்குநருமான பத்மஸ்ரீ டாக்டர் மாதவன் கிருஷ்ணன் நாயர் காலமானார் (EMINENT ONCOLOGIST PADMA SHRI DR MADHAVAN KRISHNAN NAIR PASSED AWAY)
  • இந்தியாவின் தேசிய புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்த நிபுணர் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
  • 2001 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான பத்மஸ்ரீ விருதை அரசு அவருக்கு வழங்கியது.

14 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிக்-பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற தைஜுல் இஸ்லாம்

  • அக்டோபர் 22 ஆம் தேதி எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பின் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் ஸ்ரீநகரை சேர்ந்த தைஜுல் இஸ்லாம் தங்கப் பதக்கம் வென்றார் (SRINANAGR’S TAIJUL ISLAM WON A GOLD MEDAL IN THE UNDER-14 CATEGORY OF THE WORLD KICKBOXING CHAMPIONSHIP, HELD IN CAIRO, EGYPT)
  • அவர் நான்கு போட்டிகளில் விளையாடினார் – இரண்டு எகிப்துடன், அரையிறுதியில் பிரான்சுடன் மற்றும் உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தினார்

உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாக 2-வது முறையாக டெட்ரோஸ் அதானோம் தேர்வு

  • உலக சுகாதார அமைப்பு, 29 அக்’21 அன்று, அதன் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு போட்டியின்றி போட்டியிடுகிறார் என்று அறிவித்தது (TEDROS ADHANOM REAPPOINTED AS WHO DIRECTORGENERAL FOR A SECOND TERM)
  • எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த டெட்ரோஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கும் முதல் ஆப்பிரிக்கர் ஆவார்.

கங்கா உத்சவ்

  • கங்கா உத்சவ் 2021 நவம்பர் 1 முதல் 3 வரை 150 மாவட்டங்களில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது (GANGA UTSAV 2021 TO BE ORGANISED FROM 1ST TO 3RD NOVEMBER)
  • கங்கை நதியை ‘தேசிய நதி’யாக அறிவித்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதாவது நவம்பர் 4ஆம் தேதியை தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் (NMCG) ஒவ்வொரு ஆண்டும் கங்கை உத்சவ் கொண்டாடுகிறது.

சங்கராச்சாரியாரின் மறுசீரமைக்கப்பட்ட சமாதி

  • ஜகத்குரு என அழைக்கப்படும் சங்கராச்சாரியாரின் மறுசீரமைக்கப்பட்ட சமாதி மற்றும் அவரின் திரு உருவச்சிலையை அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்
  • கேரளாவின் காலடியில் பிறந்த சங்கராச்சாரியார், “அத்வைத-வேதாந்தத்தை” நிறுவியவர் ஆவார்
  • இவர் உத்திரக்காண்டின் சமோலியில் ஜோதிர்மடம், குஜராத்தின் துவாரகாவில் துவாரகா பீடம், ஓடிசாவின் பூரியில் கோவர்த்தன மடம் மற்றும் கர்நாடகாவின் சிரிங்கேரியில் சிரின்கேறி சாரதா பீடம் ஆகியவற்றை நிறுவி உள்ளார்

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் “மெட்டா” என மாற்றம்

  • சமூக ஊடகம் என்பதை தாண்டி “மெட்டாவெர்ஸ்” எனும் மெய்நிகர் உலகத்தை உருவாக்குவதில் பேஸ்புக் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது
  • அதற்கு வசதியாக நிறுவனத்தின் பெயரை “பேஸ்புக் இன்கார்ப்பரேட்டட்” என்பதில் இருந்து “மெட்டா” என மாற்றம் செய்துள்ளது

இந்திய ராணுவத்தின் “PLAN 190” திட்டம்

  • இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைக் கட்டுபாட்டு பகுதியில், இந்திய ராணுவத்தின் சார்பில் “PLAN 190” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
  • அதாவது ஒவ்வொரு நாளும் 190 நிமிடங்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சியும் மற்றும் தற்காப்பு பயிற்சி வழங்கப்படும். இது சுமார் 15000 அடி உயரத்தில் நடத்தப்படுகிறது

MeitY ஸ்டார்ட்அப் ஹப் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து “ஆப்ஸ்கேல் அகாடமி” திட்டத்தை துவக்கி உள்ளன

  • MeitY ஸ்டார்ட்அப் ஹப் மற்றும் கூகுள் இணைந்து, இந்தியா முழுவதும் ஆரம்ப மற்றும் நடுநிலை ஸ்டார்ட்அப்களுக்கு பயிற்சி அளிக்க, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டமான ‘ஆப்ஸ்கேல் அகாடமி’யைத் தொடங்குகின்றன (MEITY STARTUP HUB AND GOOGLE TIE-UP TO LAUNCH ‘APPSCALE ACADEMY’ PROGRAMME)
  • இந்தியாவின் அடுக்கு II மற்றும் அடுக்கு III நகரங்களில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 127ஒய் விசாகப்பட்டினம் போர்க்கப்பல், கடற்படையிடம் ஒப்படைப்பு

  • மசாகன் கப்பல்கட்டும் நிறுவனம் மூலம், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட “127ஒய்12704 விசாகப்பட்டினம்’ என்ற போர்க் கப்பல் கடற்படையிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது
  • இது 15பி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். இது 164 மீட்டர் மற்றும் சுமார் 7,500 டன் கொண்டதாகும். மணிக்கு 30 நாட் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும்.
  • இது இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய நாசகார கப்பல்களில் ஒன்றாகும்.

எடெல்கிவ் ஹுருன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியல் 2021

  • எடெல்கிவ் ஹுருன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது (EDELGIVE HURUN INDIA PHILANTHROPY LIST 2021)
  • இதன்படி முதல் இடத்தில ஆண்டுக்கு ரூ.9,713 கோடி நன்கொடை வழங்கிய விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி முதல் இடத்தில உள்ளார். இவர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 27 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி வருகிறார்
  • 2-வது இடத்தில எச்.சி.எல் நிறுவனர் சிவா நாடார் 1,263 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். 3-வது இடத்தில் ரூ.577 கோடி வழங்கி ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார்

Leave a Reply