DAILY CURRENT AFFAIRS FOR TNPSC 2022 JAN 12

Table of Contents

DAILY CURRENT AFFAIRS FOR TNPSC 2022 JAN 12

DAILY CURRENT AFFAIRS FOR TNPSC 2022 JAN 12 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12 ஜனவரி 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

இந்தியா

இந்தோ-பிரெஞ்சு சுற்றுச்சூழல் ஆண்டு

  • இந்தியா மற்றும் பிரெஞ்ச் நாடுகள் இணைந்து 2022 ஆம் ஆண்டினை “இந்தோ-பிரெஞ்சு சுற்றுச்சூழல் ஆண்டு” ஆக கொண்டாட முடிவு செய்துள்ளன
  • 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது நமது இந்தியப் பிரதமர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது

யுனெஸ்கோ இந்தியாவின் பாரம்பரிய தளங்களின் இந்தி விளக்கங்களை வெளியிட உள்ளது

  • யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையம், இந்தியாவின் உலக பாரம்பரிய தளங்கள் குறித்த ஹிந்தி விளக்கங்களை தனது இணையதளத்தில் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளது.
  • ஜனவரி 10, 2022 அன்று உலக ஹிந்தி தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவின் அதிக வயதான சோம்பல் கரடி குலாபோ தனது 40 வயதில் காலமானது

DAILY CURRENT AFFAIRS FOR TNPSC 2022 JAN 12

  • ம.பி.யின் போபாலில் உள்ள வான் விஹார் தேசிய பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் இந்தியாவின் பழமையான கரடி என்று கூறப்படும் சோம்பல் கரடி “குலாபோ” தனது 40 வது வயதில் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை துவக்கி வைத்த பிரதமர்

  • தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை துவக்கி வைத்தார் பிரதமர். விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்தக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.
  • 2014-ல் நம் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 596 மருத்துவக் கல்லூரிகளாக உயர்ந்துள்ளது. இது 54 சதவீதம் அதிகமாகும் என்றும் கூறினார்
  • “ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை நான் திறந்து வைத்தேன். எனவே, எனது சாதனையை நானே முறியடிக்கிறேன்” என்றும் கூறினார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

  • தமிழகத்தின் சென்னை நகரில் மத்திய அரசின் சார்பில் “புதிய செம்மொழி தமிழாய்வு நிறுவன” கட்டிடத்தை துவக்கி வைத்தார் பிரதமர்.
  • “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டடம் தமிழ்ப் படிப்புக்களை மேலும் பிரபலப்படுத்தும். மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பரந்த பரப்பை இது கொடுக்கும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழா

  • புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
  • புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளையோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • “எனது கனவு இந்தியா” மற்றும் “இந்திய விடுதலை இயக்கத்தில் போற்றப்படாத நாயகர்கள்” குறித்து தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார்
  • எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம் மற்றும் திறந்தவெளி அரங்குடனான கலையரங்கம்- பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தைத் தொடங்கிவைத்தார்

“இஸ்பாகான் 2022” கருத்தரங்கம்

  • அகில இந்திய அறிவியல் தொழில்நுட்ப வணிக அமைப்புகளின் 14 ஆம் ஆண்டு கருத்தரங்கம் “இஸ்பாகான் 2022” சென்னையில் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்
  • 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் வளர்ச்சி 1 ட்ரில்லியன் மதிப்பு பெரும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜியாக ஆசியம்மாள் நியமனம்

  • தமிழக காவல் துரையின் உளவுப் பிரிவு முதல் பெண் ஐ.ஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழக காவல் துறை வரலாற்றில் உளவுத்துறை ஐ.ஜியாக பெண் அதிகாரி நியமனம் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

உலகம்

நிகரகுவாவில் நான்காவது முறையாக அதிபராக டேனியல் ஒர்டேகா பதவியேற்றார்

  • நிகரகுவா ஜனாதிபதி டேனியல் ஒர்டேகா 10 ஜனவரி 2022 அன்று நான்காவது முறையாக பதவியேற்றார்.
  • மனகுவா அந்நாட்டின் தலைநகரம்.

விளையாட்டு

ஏ.டி.பி கோப்பையை வென்ற கனடா

  • ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஏ.டி.பி கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டியன் இறுதி ஆட்டத்தில் கனடா அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அறிவியல், தொழில்நுட்பம்

தொடுதல் மற்றும் ஒலி சென்சார் பயன்பாட்டுக்கான சிறப்பு எலக்ட்ரோ நானோ துகள்கள் உருவாக்கம்

  • இதுவரையுள்ள மின்சார புலத்தில் மிக குறைந்த அளவில், பாலிவினைல்டின் புளூரைடு (PVDF) நானோ துகள்களின் டெல்டா கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர் // THE SCIENTISTS HAVE ACHIEVED Δ-PHASE IN PVDF NANOPARTICLES AT LOWEST POSSIBLE ELECTRIC FIELD TILL DATE — 103 TIMES LESSER ELECTRIC FIELD THAN THE CONVENTIONAL METHOD
  • இது வழக்கமாக உள்ள மின்புலத்தை விட 103 மடங்கு குறைந்தது. பயன்பாட்டு அடிப்படையிலான வர்த்தக தொழில்நுட்பங்களுக்கு, இந்த கண்டுபிடிப்பு மிகவும் வசதியானது

நிலவில் தண்ணீர் – சீன விண்கலம் கண்டுபிடிப்பு

  • நிலவின் தரைப்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சீன விண்கலம் கண்டறிந்துள்ளது. சீனாவின் “சாங்கே-5” என்ற விண்கலம் நிலவில் இருந்து கொண்டுவந்த மண் மாதிரிகளை சோதித்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது
  • நிலவில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தெண்ணீர் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய ‘கடல் டிராகன்’ புதைப்படிவம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

DAILY CURRENT AFFAIRS FOR TNPSC 2022 JAN 12

  • சுமார் 10 மீட்டர் நீளமும், 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதுமான “இக்தியோசர்” எனப்படும் “கடல் டிராகன்” இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது // HUGE ‘SEA DRAGON’ NAMED ONE OF UK’S GREATEST FOSSIL FINDS
  • சுமார் 10 மீட்டர் நீளமுள்ள எலும்புக்கூடு மற்றும் ஒரு டன் எடையுள்ள மண்டை ஓட்டுடன், இங்கிலாந்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகப்பெரிய மற்றும் முழுமையான புதைபடிவமாகும்.

திட்டம்

இரயில்வே பாதுகாப்புப் படையின் ‘மிஷன் அமனாத்’ திட்டம்

  • இரயில்வே பாதுகாப்பு படையின் சார்பில், பயணிகளின் தொலைந்து போன உடமைகளைக் கண்காணிக்கும் புதிய முயற்சியான “மிஷன் அமனாத்” என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது
  • இதன் கீழ், தொலைந்து போன லக்கேஜ்கள் மற்றும் உடைமைகளின் விவரங்கள் புகைப்படங்களுடன் மண்டல ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • தொலைந்து போன லக்கேஜ் பற்றிய தகவல்கள் https://wr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

குறியீடு

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 7 இடங்கள் முன்னேறி 83வது இடத்தில் உள்ளது

  • இந்தியாவின் பாஸ்போர்ட் ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் 83 வது இடத்தில் உள்ளது, 2021 இல் 90 வது இடத்தில் இருந்து ஏழு இடங்கள் தற்போது முன்னேறி உள்ளது // INDIA’S PASSPORT RANKS AT 83RD POSITION IN THE HENLEY PASSPORT INDEX, CLIMBING SEVEN PLACES FROM 90TH RANK IN
  • முதல் இடம் = ஜப்பான், சிங்கப்பூர்
  • 2-வது இடம் = ஜெர்மனி, தென்கொரியா
  • 3-வது இடம் = பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின்

விருது

உலகளாவிய மகளிர் சுகாதார தொழில்நுட்ப விருது

  • NIRAMAI Health AnalytixPvt. லிமிடெட் மற்றும் InnAccel டெக்னாலஜிஸ் பிரைவேட். , DBT-BIRAC ஆல் ஆதரிக்கப்படும் இரண்டு ஸ்டார்ட்-அப்கள்), உலக வங்கி குழு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப சங்கத்தின் உலகளாவிய மகளிர் சுகாதார தொழில்நுட்ப விருதுகளைப் பெற்றுள்ளன // DBT-BIRAC (BIOTECHNOLOGY INDUSTRY RESEARCH ASSISTANCE COUNCIL) SUPPORTED START-UPS INNACCEL AND NIRAMAI HAVE RECEIVED WORLD BANK GROUP AND THE CONSUMER TECHNOLOGY ASSOCIATION’S GLOBAL WOMEN’S HEALTHTECH AWARDS
  • இது வளர்ந்து வரும் சந்தைகளில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் புதுமையான தொடக்கங்களை அங்கீகரிக்கிறது.

மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2021 அழகிப் பட்டம்

DAILY CURRENT AFFAIRS FOR TNPSC 2022 JAN 12

  • குருகிராமில் உள்ள கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸில் நடைபெற்ற மிஸ் டீன் திவா 2021 இல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 16 வயதான மன்னத் சிவாச் மிஸ் டீன் இன்டர்நேஷனல் கிரீடம் வென்றார் // 16-YEAR-OLD MANNAT SIWACH WAS CROWNED MISS TEEN INTERNATIONAL AT MISS TEEN DIVA
  • பதினாறு வயதான மன்னத் சிவாச் தற்போது ஜெய்ஸ்ரீ பெரிவால் உயர்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நாட்கள்

தேசிய இளைஞர் தினம்

DAILY CURRENT AFFAIRS FOR TNPSC 2022 JAN 12

  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 அன்று தேசிய இளைஞர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு, இந்திய அரசு சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ஆம் தேதியை அவரைக் கௌரவிக்கும் நாளாக அறிவித்தது // NATIONAL YOUTH DAY IS OBSERVED ON 12 JANUARY EVERY YEAR IN INDIA.
  • 2022 ஆம் ஆண்டு அவரது 159வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • 2022 தேசிய இளைஞர் தினத்திற்கான தீம் “எல்லாம் மனதில் உள்ளது / IT’S ALL IN THE MIND”.

 

Leave a Reply