TNPSC TODAY CURRENT AFFAIRS TAMIL 2022 JAN 02

Table of Contents

TNPSC TODAY CURRENT AFFAIRS TAMIL 2022 JAN 02

TNPSC TODAY CURRENT AFFAIRS TAMIL 2022 JAN 02 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02 ஜனவரி 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியா

பாகிஸ்தானின் உள்ள இந்து கோவிலில் இந்திய, இங்கிலாந்து இந்துக்கள் விஜயம் செய்தனர்

  • இந்தியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இந்து யாத்ரீகர்கள் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மகாராஜா பரம்ஹன்ஸ் ஜி மந்திரில் பிரார்த்தனை செய்தனர்
  • இக்கோவில் கடந்த வருடம் தீவிரவாத கும்பலால் இடிக்கப்பட்டது. தற்போது அக்கோவில் புனரமைக்கப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது

மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

TNPSC TODAY CURRENT AFFAIRS TAMIL 2022 JAN 02

  • உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • மீரட்டில் உள்ள சர்தானா நகரின் சாலவா மற்றும் கைலி கிராமங்களில் ₹700 கோடி மதிப்பீட்டில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
  • 540 பெண்கள் மற்றும் 540 ஆண்கள் உட்பட 1,080 விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திறன் பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 25000 கி.மீ சைக்கிள் பயணம்

  • ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரி நர்பாத் சிங் புரோகித் சைக்கிளில் 25000 கி.மீ தொலைவு பயணம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்
  • ராஜஸ்தான் மாநில மக்கள், இவரை “பசுமை மனிதர்” என்று அழைக்கின்றனர்.

தமிழகம்

19-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் துவக்கம்

TNPSC TODAY CURRENT AFFAIRS TAMIL 2022 JAN 02

  • சென்னையில் 19-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கப்பட்டது. 53 நாடுகளில் இருந்து சுமார் 100 படங்கள் 19-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரை இடப்படம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விழாவினை “இந்தோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன்” என்ற அமைப்பு நடத்துகிறது.

உலகம்

10 மில்லியன் கோவிட்-19 நோய்த்தொற்றுகளைக் கொண்ட 6வது நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது

TNPSC TODAY CURRENT AFFAIRS TAMIL 2022 JAN 02

  • 10 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் நோய்த்தொற்றுகளைப் புகாரளித்த உலகின் ஆறாவது நாடாக பிரான்ஸ் ஆனது. பிரான்ஸ் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து 10 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் உள்ளன.
  • பிரான்சில் 11 வயது முதல் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

விளையாட்டு

உலக பிளிட்ஸ் செஸ் – கோனேரு ஹம்பி 5-வது இடம்

TNPSC TODAY CURRENT AFFAIRS TAMIL 2022 JAN 02

  • போலந்து நாட்டின் வார்சா நகரில் நடைபெற்று வந்த உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி 14-வது இடத்தை பிடித்துள்ளார்
  • இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் 30-வது இடத்தையும், பத்மினி ரௌத் 55-வது இடத்தையும் பிடித்தனர்.

லோர்கா ஓபன் செஸ் – இனியன் 3-வது இடம்

  • ஸ்பெயினில் நடைபெற்ற லோர்கா ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்
  • மொத்தம் நடைபெற்ற 9 சுற்றுகளில் அவர் 7 வெற்றி, 2 தோல்வி பதிவு செய்து 3-வது இடத்தை பிடித்தார்.

தேசிய சப் ஜூனியர் ‘டிராக் சைக்ளிங்’ போட்டிகள்

  • தேசிய அளவிலான சப் ஜூனியர் ‘டிராக் சைக்ளிங் சாம்பஈயன்ஷிப்’ போட்டியில் தமிழகதின் கோவையை சேர்ந்த ஸ்ரீமதி மற்றும் தன்யதா ஆகிய மாணவிகள் 4 பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்
  • இப்போட்டிகள் “சைக்ளிங் பெடரேசன் ஆப் இந்தியா” அமைப்பு சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் நடத்தப்பட்டது.

அறிவியல், தொழில்நுட்பம்

ஜப்பான் மிகப்பெரிய இன்மார்சாட்-6 F1 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது

  • இன்மார்சாட்-6 எஃப்1 செயற்கைக்கோள் எச்-2ஏ ராக்கெட்டில் இருந்து டிசம்பர் 22, 2021 அன்று ஜப்பானின் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது // THE INMARSAT-6 F1 SATELLITE WAS LAUNCHED FROM H-2A ROCKET ON DEC. 22, 2021, FROM JAPAN’S TANEGASHIMA SPACE CENTER.
  • H-2A என்பது ஜப்பானின் முதன்மை மீடியம்-லிஃப்ட் லாஞ்சர் ஆகும்.

விருது

இங்கிலாந்து முன்னாள் பிரதமருக்கு “சர்” பட்டம்

  • பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேருக்கு “சர்” பட்டம் வழங்கப்பட்டது
  • டோனி ப்ளேருக்கு பிரிட்டன் அரசி எலிசபெத், மாவீரர் விருது வழங்கி உள்ளார். “ஆர்டர் ஆப் கார்ட்டர்” உறுபினராக டோனி பிளேரை அரசி நியமித்து கவுரவப்படுத்தி உள்ளார்.

பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் வீர தளபதி விருது

  • பிரிட்டனின் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் அஜய் குமார் கக்கர் உட்பட 50 பேருக்கு கே.இ.பி எனப்படும் பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் வீர தளபதி விருது வழங்கப்பட உள்ளது.
  • இவ்வுயரிய விருதை இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 பெர் பெற உள்ளனர்.

மிஸ் டீன் இந்தியா அழகிப் பட்டம்

  • டெல்லியில் நடைபெற்ற “மிஸ் டீன் இந்தியா – குயின் ஆப் ஹார்ட்ஸ்” அழகிப் போட்டியில் தமிழகத்தின் கோவையை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் நேகா ஷிவானி, முதல் இடத்தை பிடித்து அழகிப் பட்டதை வென்றார்
  • இவர் ஏற்கனவே மிஸ் டீன் தமிழ்நாடு பட்டதை வென்றவர் ஆவார்.

பட்டியல், மாநாடு

நம்பகத்தன்மை குறியீடு

  • நம்பகத்தன்மை குறித்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மருத்துவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அரசியல் வாதிகள் கடைசி இடத்தில் உள்ளனர்.
  • உலகின் நம்பகமான நாடுகள் பட்டியலில் மலேசியா முதல் இடத்தையும், இந்தியா 2-வது இடத்தையும் பெற்றுள்ளன.
  • “இப்சாஸ்” என்ற நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய நம்பகத்தன்மை கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • நம்பகத்தன்மை குறியீட்டில்,
    • முதல் இடம் = மருத்துவர்கள்
    • 2-வது இடம் = விஞ்ஞானிகள்
    • 3-வது இடம் = ஆசிரியர்கள்
    • கடைசி இடம் = அரசியல் வாதிகள்
  • இந்தியாவில் மருத்துவர்கள் மீது 64% மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்
  • நாடுகளின் நம்பகத்தன்மை குறியீட்டில்,
    • முதல் இடம் = மலேசியா
    • 2-வது இடம் = இந்தியா
    • 3-வது இடம் = ஸ்வீடன்

 

Leave a Reply