DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022
DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
CSIR இன் “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” பிரச்சாரம்
- “ஒரு வாரம் ஒரு ஆய்வகம்” என்ற கருப்பொருள் அடிப்படையிலான பிரச்சாரம் இளம் கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்-அப்கள், கல்வியாளர்களை உற்சாகப்படுத்தும் என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR – Council of Scientific and Industrial Research) தெரிவித்துள்ளது // CSIR’s “One Week, One Lab” countrywide campaign from 6th January, 2023
- இந்த பிரசாரம் 2023 ஜனவரியில் நடத்தப்படும்.
- CSIR இன் தலைவர் = இந்திய பிரதமர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
2031 ஆம் ஆண்டுக்குள் 20 அணுமின் நிலையங்களை அமைக்க திட்டம்
- இந்தியாவில் 2031 ஆம் ஆண்டுக்குள் 20 அணுமின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இந்த 20 புதிய அணுமின் நிலையங்களில் முதலாவதாக குஜராத்தில் காக்ரபாரில் அமைக்கப்பட்டு வரும் 700 மெகாவாட் மின்நிலையம் 2023 ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும்.
தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரோட்டில் நடமாடும் மின்மயானம்
- தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரோட்டில் நடமாடும் மின்மயானத்தை அம்மாவட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் அமைத்துள்ளனர்.
- இதில் கட்டணமாக 7500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
தமிழ்ச் செம்மல் விருது
- பட்டிமன்றப் பேச்சாளர் திருவாரூர் இரா.சண்முகவடிவேல் அவர்களுக்கு “தமிழ்ச் செம்மல் விருது” வழங்கப்பட உள்ளது.
- சென்னை கம்பன் கழகத்தின் ராதாகிருஷ்ணன் விருது, தமிழாசிரியர் கழகத்தின் நற்றமிழ் நல்லாசான் விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
தமிழ்ச் செம்மல் விருது
- தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன், அவர்களுக்கு தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரே பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள அமேரிக்கா
- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஒரே பாலின திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார்.
- 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா போன்ற 33 நாடுகளில் ஒரே பாலின ஜோடிகளுக்கு இடையிலான திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கண் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
- 3வது கண் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் புது தில்லியில் நடைபெற்றது // T20 World Cup for Blind: India beat Bangladesh to clinch their third title
- இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேச அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.
2022 இல் டிராக் அண்ட் ஃபீல்டில் அதிகம் எழுதப்பட்ட வீரர்
- உலக தடகளத்தின் படி, இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2022 ஆம் ஆண்டில் தடகளத்தில் அதிகம் எழுதப்பட்ட வீரராக ஆனார் // the most written player in the track and field in 2022
- ஜமைக்கா ஜாம்பவான் உசைன் போல்ட் இரண்டாம் இடத்திற்கு சென்றார்.
ஜூலியஸ் பேர் சேலஞ்சர் சாம்பியன்ஷிப்பை வென்ற பிரக்ஞானந்தா
- இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற ஜூலியஸ் பேர் சேலஞ்சர் சாம்பியன்ஷிப்பை பிரக்ஞானந்தா வென்றார் // Praggnanandhaa won Julius Baer Challenger Championship in Tel Aviv, Israel.
- ஆர். பிரக்ஞானந்தா, சக தமிழக கிராண்ட்மாஸ்டர் வி. பிரணவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த ஸ்கோர்
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த ஸ்கோரை ஆஸ்திரேலியாவின் ‘சிட்னி தண்டர்” அணி பதிவு செய்துள்ளது.
- அடிலெயிட் ஸ்ட்ரைக் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
160 மீட்டர் டிரிசோனிக் விண்ட் டன்னலை இஸ்ரோ வெற்றிகரமாகச் சோதித்தது
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சமீபத்தில் கேரளாவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) நிறுவப்பட்ட புதிய காற்றாலை சுரங்கப்பாதையின் (160 meter Trisonic Wind Tunnel) முதல் ப்ளோ-டவுன் சோதனையை நடத்தியது.
- சுரங்கப்பாதையின் நீளம் 160 மீட்டர் மற்றும் அதிகபட்ச குறுக்குவெட்டு 5.4 மீட்டர்.
மென்மையான ரோபோ “ஜெல்பாட்”
- ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜெல் மூலம் உருவாக்கப்பட்ட மென்மையான ரோபோவை உருவாக்கியுள்ளனர் = ஜெல்போட் என்று அழைக்கப்படுகிறது // RESEARCHERS FROM JOHN HOPKINS UNIVERSITY HAVE DEVELOPED A SOFT ROBOT MADE OF GEL = CALLED GELBOT.
- இந்த ரோபோ தனது உடலை வெவ்வேறு வடிவங்களில் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.
இஸ்ரோவின் பெண் ரோபோ “வியோமோ மித்ரா”
- இந்தியாவின் இஸ்ரோவின் சார்பில் 2024 ஆம் ஆண்டு மத்தியில் ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது.
- ஆளில்லா விண்கலத்தில் அனுப்புவதற்காக “வியோமோ மித்ரா” என்ற பெண் ரோபோவை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.
தேசிய ஓய்வூதியர்கள் தினம்
- தேசிய ஓய்வூதியர்கள் தினம் (NATIONAL PENSIONERS DAY) = டிசம்பர் 17.
- 12.1982 தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு கண்ணியத்தையும் அருளையும் கொண்டு வர பல ஆண்டுகளாகப் போராடிய மறைந்த டி.எஸ்.நகராவை நினைவுகூரும் வகையில் நமது நாட்டில் ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது.
பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம்
- பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் (International Day to End Violence Against Sex Workers) = டிசம்பர் 17.
- சிவப்பு குடை இதன் குறியீடு ஆகும்.
- பாலியல் தொழிலாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளால் ஆண்டுதோறும் டிசம்பர் 17 அன்று பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஐதராபாத்தில் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையம் திறப்பு
- ஐதராபாத்தில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார் // ICMR-NARFBR (National Animal Resource Facility for Biomedical Research) at Genome Valley, Hyderabad
IEI இண்டஸ்ட்ரி எக்ஸலன்ஸ் விருது
- IEI இண்டஸ்ட்ரி எக்ஸலன்ஸ் விருது = தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வென்றது.
- சென்னையில் நடைபெற்ற 37 வது இந்திய பொறியியல் காங்கிரஸ் கூட்டத்தில் இவ்விருது வழங்கப்பட்டது.
சிவப்பு மை விருது (Redink Award)
- டி.பி. சூரஜ், TNIE தலைமை புகைப்படக் கலைஞர் (கேரளா), ‘தி பிக் பிக்சர்’ வகைக்காக 2022 ஆம் ஆண்டிற்கான ரெட்டிங்க் விருதுகளை வென்றுள்ளார்.
- இந்த விருது ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் நினைவுப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
21 ஆண்டுகளுக்கு பிறகு “திருமதி உலக அழகி” பட்டதை வென்ற இந்தியா
- “திருமதி உலக அழகி” போட்டிகள் நடைபெற்ற இடம் = அமேரிக்கா, வாஷிங்டன்
- 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த “சர்கம் கவுஷல்” இப்பட்டத்தை தற்போது வென்றுள்ளார்.
- 2001 ஆம் ஆண்டு இப்பட்டத்தை வென்ற இந்திய அழகி = அதிதி கவுரிகர்
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 16/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 14/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 13/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 12/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 11/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 10/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 9/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 8/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 7/12/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL 6/12/2022