DAILY TAMIL CURRENT AFFAIRS 18/12/2022

Table of Contents

DAILY TAMIL CURRENT AFFAIRS 18/12/2022

DAILY TAMIL CURRENT AFFAIRS 18/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

2022-23 நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 25.90% ஆக அதிகரிப்பு

  • 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (திரும்பப்பெறுவதற்கு முன்) ரூ. 13,63,649 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ. 10,83,150 கோடி என்ற முந்தைய நிதியாண்டின் வசூலை விட 25.90% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

டெல்லி எய்ம்ஸ் வளாகம் புகையிலை இல்லாத மண்டலமாக அறிவிப்பு

DAILY TAMIL CURRENT AFFAIRS 18/12/2022

  • அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), புது தில்லி டிசம்பர் 2022 இல் ‘புகையிலை இல்லாத மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.
  • AIIMS புது தில்லி 1956 இல் நிறுவப்பட்டது மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ளது.

7 வது வந்தே பாரத் ரயில்

  • 7 வது வந்தே பாரத் ரயிலுக்கான பேட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • 7 வது வந்தே பாரத் ரயில் = விசாகப்பட்டினம் – செகந்திராபாத் இடையே இயக்கப்பட உள்ளது.
  • 6 வது வந்தே பாரத் ரயில் = பிளாஸ்பூர் – நாக்பூர் இடையே ஓடுகிறது
  • 5 வது வந்தே பாரத் ரயில் = சென்னை – மைசூரு இடையே ஓடுகிறது.

தமிழகத்தில் ஆறு பாதுகாப்பு, விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன

  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) ஆறு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிற் பூங்காக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது // Tamil Nadu to set up six defence, space industrial parks
  • சென்னையில் ஒன்றும், கோயம்புத்தூரில் மூன்று (அன்னூர், சூலூர் மற்றும் வரப்பட்டி) மற்றும் ஒரு (விண்வெளி பூங்கா) தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு படகு சேவை

  • புதுச்சேரியில் இருந்து இலங்கையின் யாழ்பாணம் மாவட்டம் “காங்கேசன் துறைக்கு” படகு போக்குவரத்து அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளது.
  • புதுச்சேரி மற்றும் காங்கேசன் ஹுரை இடையேயான ஒருவழி பயணத்திற்கு 60 டாலர் (சுமார் 4800 ரூபாய்) வசூலிக்கப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்து சிதறியது

  • ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் “ராடிசன் புளூ” என்ற நட்சத்திர ஓட்டலில் 52 அடி உயரம் கொண்ட கண்ணாடியால் ஆனா ராட்சத மீன் தொட்டி இருந்தது.
  • இது உலகின் மிகப்பெரிய நிற்கும் உருளை வடிவிலான மீன் தொட்டி ஆகும்.
  • இதன் பெயர் = அக்வாடோம்
  • 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மீன் தொட்டி வெடித்து சிதறியது.

லடாக் தனது முதல் புவிசார் குறியீட்டை பெற்றது

DAILY TAMIL CURRENT AFFAIRS 18/12/2022

  • லடாக் அதன் ராக்ட்சே கார்போ ஆப்ரிகாட்டுக்கு (Raktsey Karpo Apricot) முதன்முதலில் புவிசார் குறியீட்டை (ஜிஐ) பெற்றுள்ளது // Ladakh gets its first-ever GI Tag to its Raktsey Karpo Apricot
  • ஆப்ரிகாட் என்பது “ஒரு வகை பாதாமி பழம் ஆகும்”.

2022 ஐடிஎஃப் உலக சாம்பியன்கள்

  • ஆண்கள் பிரிவிற்கான 2022 ஐடிஎஃப் உலக சாம்பியன் விருது ஸ்பெயினின் ரபேல் நடாலுக்கு வழங்கப்பட்டது // Rafael Nadal and Iga Swiatek crowned ITF World Champions 2022
  • பெண்கள் பிரிவிற்கான 2022 ஐடிஎஃப் உலக சாம்பியன் விருது இகா ஸ்வியாடெக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

FIFA கிளப் உலகக் கோப்பை 2023

  • அடுத்த கால்பந்து கிளப் உலகக் கோப்பையை மொராக்கோ நடத்தும் என்று உலக கால்பந்து நிர்வாகக் குழு அறிவித்துள்ளது // Morocco will host the next football Club World Cup
  • போட்டி 2023 பிப்ரவரி 1 முதல் 11 வரை நடைபெறும்.
  • மொராக்கோ ஏற்கனவே 2013 மற்றும் 2014 இல் கிளப் உலகக் கோப்பையை நடத்தியது.

பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2023

DAILY TAMIL CURRENT AFFAIRS 18/12/2022

  • பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற இடம் = கத்தார்
  • முதல் இடம் = அர்ஜெண்டினா (3 வது உலகக் கோப்பை)
  • இரண்டாவது இடம் = பிரான்ஸ்
  • மூன்றாவது இடம் = குரேசியா
  • தங்க ஷூ விருதை வென்றவர் = பிரான்ஸ் வீரர் கிளியன் எம்பாப்பே
  • சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது = அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி
  • சிறந்த ஆட்ட விருது = இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது
  • இளம் வீரர் விருது = என்சோ பெர்னாண்டஸ்
  • தங்க கையுறை விருது = எமிலியானோ மார்டின்ஸ்.

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டதை வென்ற இந்திய மகளிர் அணி

  • பெண்களுக்கான முதலாவது நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்ற இடம் = ஸ்பெயினின் வலேன்சியா
  • இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஸ்பெயின் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றியது.

ஐஎன்எஸ் மோர்முகோவ் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது

  • மும்பைக் கடற்படைத் தளத்தில் 2022 டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐஎன்எஸ் மொர்முகவ் என்ற ஏவுகனைகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டப் போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
  • இதன்மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது 2-வது விசாகப்பட்டினம் கிளாஸ் டெஸ்ட்ராயர் இது எந்த பெருமையையும், அந்தக் கப்பல் பெற்றுள்ளது.

சுக்ராயன்-1

  • சுக்ராயன்-1 என்பது வெள்ளியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட உள்ள விண்கலம் ஆகும் // Shukrayaan-1 is a planned mission to Venus by ISRO to study the surface and atmosphere of Venus.
  • இந்த பணி 2024 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணியில் ஆர்பிட்டர் மற்றும் வளிமண்டல பலூன் ஆய்வு ஆகியவை அடங்கும்.

சிறுபான்மையினர் உரிமைகள் தினம்

DAILY TAMIL CURRENT AFFAIRS 18/12/2022

  • சிறுபான்மையினர் உரிமைகள் தினம் (Minority Rights Day) = டிசம்பர் 18
  • சிறுபான்மையினர் உரிமைகள் தினம் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் மற்றும் சம வாய்ப்புகளுக்கான உரிமையை நிலைநிறுத்துகிறது மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

உலக அரபு மொழி தினம்

  • உலக அரபு மொழி தினம் (World Arabic Language Day) = டிசம்பர் 18
  • டிசம்பர் 18 அரேபிய மொழிக்கான தேதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் இது “1973 இல் பொதுச் சபை அரபியை அதிகாரப்பூர்வ ஐ.நா. மொழியாக அங்கீகரித்த நாள்”.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்

  • சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day) = டிசம்பர் 18
  • 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தின் கருப்பொருள் = Integrating migrants into primary health care

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், ஐயர்லாந்து பிரதமராக மீண்டும் தேர்வு

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் (38) அயர்லாந்தின் பிரதமராக 2020 இல் செய்யப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவரின் தந்தை ஒரு இந்தியர் ஆவார்.

 

 

  • DAILY TAMIL CURRENT AFFAIRS 17/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 16/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 15/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 14/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 13/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 12/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 11/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 10/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 17/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 17/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 17/12/2022
  • DAILY TAMIL CURRENT AFFAIRS 17/12/2022

Leave a Reply