பொது தமிழ் பகுதி ஆ பாஞ்சலிசபதம்

பாஞ்சலிசபதம்

ஆசிரியர் குறிப்பு:

  • சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 அன்று பிறந்தார்.
  • இவர்தம் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்.
  • இவரின் துணைவியார் செல்லம்மாள்.
  • இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
  • ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
  • இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.

நூல் குறிப்பு:

  • பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
  • பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
  • இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

சிறப்பு:

  • பாரதியார் “பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி” என்றேல்லாம் புகப்பெற்றார்.
  • சுதேசமித்திரன், இந்தியா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

Leave a Reply