TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 26
TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 26 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26 டிசம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
இந்தியா
அழைப்பு, இணைய பயன்பாடு தரவுகள் 2 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும்
- தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்திரவிடப்பட்டுள்ளது.
- முன்பு தரவுகளை 1 ஆண்டு வரை சேமித்து வைக்க வேண்டும் என்ற விதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாரத தர்ஷன் பூங்காவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
- நாட்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச்சின்னங்களை ப்ரகுயபளிகும் தரிசன பூங்காவை தில்லியில் மத்திய மைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார்
- இந்தப் பூங்காவில் இந்தியாவின் மொத்தம் 21 வரலாற்று சினங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தின் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இடம் பெற்றுள்ளது.
அரசு வேளைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4% ஆக அதிகரிப்பு
- மாற்றுத் திறனாளிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, முன்னுரிமை அளிக்கும் வகயில், அரசு வேளைகளில் மாற்றுத்திறனளி களுக்கான இட ஒதுக்கீடு 3 % இருந்து 4 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- உயர் கல்வியில் இட ஒதுக்கீடு ௩௫ இருந்து 5% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம்
120-வது பிறந்தநாளைக் கொண்டாடிய தமிழக மூதாட்டி
- திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் 120 வயது மூதாட்டி தனது பிறந்த நாளை கொண்டைனார். வள்ளித்தாய் எனப்படும் இவர் தற்போதைய நிலையில் தமிழகத்தில் மிக அதிக வயது கொண்ட நபர் ஆவார்.
- இவருக்கு பேரன் பேத்தி என மொத்தம் 150 பேர் கொண்ட குடும்பம் உள்ளது.
புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் முதல் பரிசை வென்ற சேலம் தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரி
- இந்திய தொழில் கூட்டமைப்பு கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகள், மதிநுட்பம் சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு, சி.ஐ.ஐ. இண்டஸ்ட்ரிஸ் இன்னோவேசன் அவரது என்ற தேசிய அளவிலான உயரிய விருதை இந்த ஆண்டு சேலம் தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வென்றனர்.
இத்தாலி தரச்சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் ரயில் பெட்டி தொழிற்சாலை
- சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்), இந்திய ரயில்வேயின் உற்பத்தித் தொல்ற்சாளைகளில் முதல் முறையாக, இத்தாலியின் “இன்டர்டேக் ஸ்பா” அமைப்பிடம் இருந்து ரயில் பேட்டிகள் மற்றும் பாகங்களுக்கான வெல்டிங் தொழில் நுட்பத்திற்கு தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக இணைய வழக்குகளை துல்லியமாக விசாரிக்க “சைபர் தடைய ஆய்வகம்”
- தமிழகத்தில் முதல் முறையாக இணைய வழக்குகளை துல்லியமாக விசாரிக்க ஏதுவாக “சைபர் தடய ஆய்வகம்” அமைக்கப்பட உள்ளது
- இந்த ஆய்வகம் சென்னையில் அடுத்த மாதம் அமைக்கப்பட உள்ளது.
முதன் முதல்
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் தெற்காசியாவின் முதல் நாடு – பூட்டான்
- கொரோநோவிற்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் தெற்காசியாவின் முதல் நாடு என்ற நிலையை பூட்டான் பெற்றுள்ளது
- முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் போன்றோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்திய நீதித்துறையில் முதல் முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் “ப்ரெய்லி பிரிண்டர்” அறிமுகம்
- பார்வையற்ற வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் நலனுக்காக இந்திய நீதித் துறையில் முதன் முறையாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் “ப்ரெய்லி பிரிண்டர்” வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு
அணைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் அறிவிப்பு
- அணைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்
- test கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வியர் என்ற சிறப்பை பெற்றவர் ஹர்பஜன் சிங் ஆவார்.
தேசிய ஸ்கேட்டிங்கில் தமிழக வீரருக்கு 4 தங்கம், 1 வெள்ளி
- 58-வது தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தில்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த அவிக்ஷித், ஜூனியர் பிரிவில் 4 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை வென்றார்
- சப்சூனியர் பிரிவில் தமிழகத்தின் ஆர்யா விவேக் விஸ்வநாத் 2 வெண்கலப் பதக்கம் பெற்றார்.
12-வது தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்
- உத்திரக்காண்டு மாநிலத்தின் டேராடூனில் நடைபெற்ற 12-வது தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில், உத்திரக்காண்டு மாநில அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டதை வென்றது
- 2-வது இடத்தை மகாராஸ்டிரா மாநில அணி பிடித்தது.
11-வது ஹாக்கி இந்திய ஜூனியர் தேசிய ஆண்கள் சாம்பியன்ஷிப்
- 11-வது ஹாக்கி இந்திய ஜூனியர் தேசிய ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், உத்திரப் பிரதேச அணி, சண்டிகரை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது
- இப்போட்டிகள் தமிழகத்தின் கோவில்பட்டியில் நடைபெற்றது.
விஜய் ஹசாரே கோப்பை – தமிழகத்தை வீழ்த்தி ஹிமாச்சலப் பிரதேசம் சாம்பியன்
- ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை வவீழ்த்தி ஹிமாச்சலப் பிரதேச அணி கோப்பையை முதல் முறையாக வென்றது
- வெளிச்சம் குறைவு காரணமாக வி.ஜே.டி முறையில் ஹிமாச்சலப் பிரதேச அணி வேன்றதாக் அறிவிக்கப்பட்டது.
அறிவியல், தொழில்நுட்பம்
புதிய வகை ரோஜாப்பூவிற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்
- புதிய வகை ரோஜாப்பூவுக்கு இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி கவுரவித்துள்ளார் கொடைக்கானலை சேர்ந்த எம்.எஸ்.வீரராகவன்.
- இந்த ரோஜா வகையான ஊதா நிறத்துடன் ஊக்கமளிக்கும் நறுமணத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். இந்த ரோஜா செடி 4 முதல் 5 அடி வரை வளரும்.
நடப்பாண்டில் அதிகம் பார்க்கப்பட்ட சமூக வலைத்தளம் – டிக்டாக்
- நடப்பாண்டில் அதிகம் பார்க்கப்பட்ட சமூக வலைத்தளமாக டிக்டக் உள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- முதல் இடம் = டிக்டாக்
- 2-வது இடம் = கூகுள்
- 3-வது இடம் = பேஸ்புக்
- இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிகசக்தி வாய்ந்த தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது
- உலகின் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான “ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்” வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா”, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தொலைநோக்கியை உருவாக்கி உள்ளன.
- “ஏரியன்-5” என்ற ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ வட்டப் பாதையில் இந்த தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட உள்ளது.
விருது
கலிங்கா பாதுகாப்பு சிறப்பு விருதுகள்
- கலிங்கா பாதுகாப்பு மேலாண்மை விருது (தங்கம்) = IFFCO பாரதீப் (இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம், பாரதீப்)
- கலிங்கா வணிக மேலாண்மை விருது = கே.ஜே படேல் IFFCO, பாரதீப்
- கலிங்கா பாதுகாப்பு மேல்நாமை விருது (பிளாட்டினம்) = OPGC நிறுவனம், ஒடிசா
இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு “சிறந்த தென் ஆப்ரிக்கர்” விருது
- இந்திய வம்சாவளியை சேர்ந்த இம்தியாஸ் சூலிமான் என்பாருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தென் ஆப்ரிக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவரான இவர், “கிப்ட் ஆப் தி கிவர்ஸ்” (கொடுப்பவர்களின் பரிசு) என்ற தன்னார்வ அமைப்பை நட்டி வருகிறார்.
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 25
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 24
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 23
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 22
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 21
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 20
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 19
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 18
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 17
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 16
- TNPSC CURRENT AFFAIRS DAILY DEC 15