DAILY CURRENT AFFAIRS IN TAMIL 2021 DEC 16

Table of Contents

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 2021 DEC 16

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 2021 DEC 16 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16 டிசம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியா

யுனஸ்கோ கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்தது “துர்கா பூஜை” விழா

  • யுனஸ்கோ அமைப்பின் “பழமை மாறா கலாச்சார பட்டியலில்” மேற்குவங்கத்தின் பிரபலமான “துர்கா பூஜை” விழா நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது // UNESCO HAS ANNOUNCED THAT THE DURGA PUJA IN KOLKATA HAS BEEN INSCRIBED ON THE AGENCY’S LIST OF ‘INTANGIBLE CULTURAL HERITAGE OF HUMANITY’.
  • “மதம் மற்றுள் கலையின் ஒரு அற்புத கலவியாக துர்கா பூஜை நிகழ்வுகள் உள்ளன என யுனஸ்கோ தெரிவித்துள்ளது
  • வெனிசுலாவில் செயின்ட் ஜான் கொண்டாட்டங்கள் மற்றும் பனாமாவின் கார்பஸ் கிறிஸ்டி திருவிழா ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன002E

தமிழகம்

சென்னை ஆவடியில் பீரங்கி கண்காட்சி

  • சென்னை ஆவடியில் துவங்கிய போர் ஊர்தி வாகன கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியர் கண்டு களித்தனர்
  • கண்காட்சியில் “டி72 அஜயா, டி90 பீஷ்மா” உள்ளிட்ட பல பீரங்கிகள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி விழிப்புணர்வுக்காக ராணுவ வீரர் நடைப்பயணம்

  • கொரோனே தடுப்பூசியை, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, 197 நாடுகளின் கொடியுடன், ராணுவ வீரர் வடைப்பயனம் மேற்கொண்டு வருகிறார்
  • தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த மானாமதுரையை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் எஸ்.பாலமுருகன் என்பவர் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

முதன் முதல்

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கஞ்சாவை அங்கீகரித்த முதல் ஐரோப்பிய நாடு

  • ஐரோப்பிய யூனியனில் வீடுகளிலும் தனிப்பட்ட பயன்பாட்டிலும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக மால்டா மாறியுள்ளது // MALTA HAS BECOME THE 1ST COUNTRY IN EUROPEAN UNION TO LEGALIZE CANNABIS AT HOME AND FOR PERSONAL USE.
  • புதிய சட்டத்தின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7 கிராம் வரை கஞ்சாவும், வீட்டில் 4 செடிகள் வரை வளர்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.

சாத்விக் சான்றிதழைப் பெற்ற உலகின் முதல் ரயில் என்ற பெருமையை ஐஆர்சிடிசி பெற்றுள்ளது

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 2021 DEC 16

  • இந்திய சாத்விக் கவுன்சில், பீரோ வெரிடாஸ் உடன் இணைந்து, ஐஆர்சிடிசியின் ஸ்ரீ ராமாயண யாத்ரா சிறப்பு ரயிலுக்கு ‘சைவ சான்றிதழை’ வழங்கியுள்ளது // THE SATTVIK COUNCIL OF INDIA, IN ASSOCIATION WITH BUREAU VERITAS, HAS GIVEN A ‘VEGETARIAN CERTIFICATION’ TO IRCTC’S SHRI RAMAYAN YATRA SPECIAL TRAIN.
  • Bureau Veritas என்பது சாத்விக் கவுன்சிலின் உலகளாவிய தணிக்கை பங்குதாரர் ஆகும்.
  • சைவத்திற்கு ஏற்ற ரயில் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

காமன்வெல்த் பளுதூக்குதலில் அஜய்சிங் தங்கம் வென்றார்

  • காமல்வெல்த் பளுதொக்குதல் சாம்பியன்சிப்பில் இந்தியாவின் அஜய் சிங் ஆடவருக்கான 81 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். இப்போட்டியில் இந்தியாவுக்கு இது 3-வது தங்கப் பதக்கமாகும்
  • அஜய் சிங் தனது எடைப்பிரிவில் ஸ்னாட்ச்சில் 147 கிலோ, கிளீன் & ஜெர்க்கில் 175 கிலோ என மொத்தம் 322 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார்

இராணுவம்

இந்திய இராணுவத்தின் ஸ்வர்ணிம் விஜய் கதா நிகழ்ச்சி

  • 16 டிசம்பர் 2021 அன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் ‘ஸ்வர்னிம் விஜய் கதா’ ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது ஸ்வர்னிம் விஜய் வர்ஷின் கொண்டாட்டங்களின் வெளிப்பாட்டினை குறிக்கிறது.

MILAN 22 என்ற பன்னாட்டு கடற்படை பயிற்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டது

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 2021 DEC 16

  • ரியர் அட்மிரல் சஞ்சய் சாது, தலைமைப் பணியாளர்கள் (தொழில்நுட்பம்), கிழக்கு கடற்படைக் கட்டளை (ENC) இந்தியக் கடற்படையால் நடத்தப்படும் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு கடற்படைப் பயிற்சியான MILAN 2022 -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தினார் // OFFICIAL WEBSITE OF MULTINATIONAL NAVAL EXERCISE MILAN 22 LAUNCHED
  • இதன் இணையத்தளம் = https://www.in-milan.in/index.aspx
  • இப்பயிற்சியின் கரு = CAMARADERIE, COHESION, COLLABORATION

நியமனம்

முப்படைகளின் தலைமைப் பணியாளர்கள் குழுவின் தலைவர்

  • இராணுவத் தளபதி ஜெனரல் எம் எம் நரவனே, மூன்று படைத் தலைவர்களைக் கொண்ட தலைமைப் பணியாளர்கள் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • பாதுகாப்புப் படைத் தலைவர் பதவியை உருவாக்குவதற்கு முன்பு. மூன்று சேவைத் தலைவர்களில் மூத்தவர், தலைமைப் பணியாளர் குழுவின் தலைவராக இருந்தார்.
  • ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் காலமானதை தொடர்ந்து அந்த பதவி காலியானது.

பிரெஞ்சு ஃபேஷன் குழுவான சேனலின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீனா நாயர், பிரெஞ்சு ஃபேஷன் குழுவான சேனலின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இந்தியாவின் மகாராஸ்டிராவில் பிறந்தவர் ஆவார்

அறிவியல், தொழில்நுட்பம்

கோவிட்19 நோய்த்தொற்றைத் தடுக்கும் புதிய மூலக்கூறை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

  • SARS-CoV2 வைரஸின் மேற்பரப்புடன் இணைந்திருக்கும் புதிய மூலக்கூறை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் மற்றும் அது மனித உயிரணுக்களுக்குள் நுழைந்து COVID-19 பரவுவதைத் தடுக்கிறது.
  • டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், தற்போது கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆன்டிபாடிகளை விட இந்த மூலக்கூறு மலிவானது மற்றும் தயாரிப்பது எளிது என்று குறிப்பிட்டுள்ளனர்.
  • மூலக்கூறு ஆர்என்ஏ அப்டேமர்கள் (RNA APTAMERS) எனப்படும் சேர்மங்களின் வகுப்பைச் சேர்ந்தது

புத்தகம்

ரேகா சவுதாரியின் புதிய புத்தகம்

  • டாக்டர் ரேகா சவுதாரி “INDIA’S ANCIENT LEGACY OF WELLNESS” என்ற புதிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். மனிதர்கள் இயற்கையுடன் நெருக்கமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இப் புத்தகம் வெளிப்படுத்துகிறது
  • டாக்டர் ரேகாவின் ஆராய்ச்சி WHO இல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் அவர் தனது ஆராய்ச்சியை வெளியிட ஜான் ஹாப்கின்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டார்

நாட்கள்

விஜய் திவாஸ்

  • விஜய் திவாஸ் (VIJAY DIWAS) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 1971 போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் விஜய்யின் வரலாற்று இராணுவ வெற்றியை இந்த நாள் கொண்டாடுகிறது; பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷையும் விடுவித்தது.
  • பாகிஸ்தான் படைகளின் தலைவரான ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி 93,000 பாகிஸ்தான் துருப்புக்களுடன் இந்திய இராணுவம் மற்றும் பங்களாதேஷின் முக்தி பாஹினியின் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தார்.

சர்வதேச தேயிலை தினம்

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 2021 DEC 16

  • சர்வதேச தேயிலை தினம் (INTERNATIONAL TEA DAY) டிசம்பர் 15 அன்று இந்தியா மற்றும் பிற தேயிலை வளரும் நாடுகளில் – பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா மற்றும் தான்சானியாவில் அனுசரிக்கப்படுகிறது.
  • முதல் சர்வதேச தேயிலை தினம் இந்தியாவில் 2005 இல் கொண்டாடப்பட்டது.

ஒப்பந்தம்

டிஜிட்டல் மீடியா துறையில் இந்தியாவும் வியட்நாமும் ஒப்பந்தம்

  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வியட்நாம் அரசின் தகவல் மற்றும் தொடர்புத் துறை அமைச்சரான திரு. குயென் மன் ஹங் உடன் 16 டிச’21 அன்று ஒப்பந்தக் கடிதத்தில் (LoI) கையெழுத்திட்டார்.
  • டிஜிட்டல் மீடியா துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் LCA போர் விமானங்களுக்காக BEL உடன் ஒப்பந்தம்

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) 16 டிசம்பர் 2021 அன்று பாதுகாப்பு பொதுத்துறை பிரிவான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) உடன் ₹2,400 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • LCA (இலகுரக போர் விமானம்) தேஜாஸ் Mk1A திட்டத்திற்கான 20 வகையான அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் விநியோகத்திற்காக இது கையொப்பமிடப்பட்டுள்ளது.
  • ஐந்தாண்டு ஒப்பந்தம் 2023 முதல் 2028 வரை நீடிக்கும்.

பட்டியல், மாநாடு

அகில இந்திய மேயர்கள் மாநாடு

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 2021 DEC 16

  • பிரதமர் நரேந்திர மோடி 16 டிசம்பர் 2021 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் வாரணாசியில் அகில இந்திய மேயர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் // PM MODI INAUGURATES ALL INDIA MAYORS’ CONFERENCE IN VARANASI
  • மாநாட்டின் கருப்பொருள் = NEW URBAN INDIA. இந்நிகழ்ச்சியை உத்தரபிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.

வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான தேசிய உச்சி மாநாடு

  • குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் 2021 டிசம்பர் 16 அன்று நடைபெற்ற வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான தேசிய உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளிடம் உரையாற்றினார் // PM NARENDRA MODI ADDRESSED THE FARMERS DURING THE VALEDICTORY SESSION OF THE NATIONAL SUMMIT ON AGRO AND FOOD PROCESSING ON 16TH DECEMBER 2021 IN ANAND, GUJARAT.
  • உச்சி மாநாட்டின் போது இயற்கை விவசாயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply