TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 10, 2021
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 10, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 10, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கார்பன் கருப்பு வளாகம்:
- இந்திய நிலக்கரி நிறுவனத்தின் சார்பாக, இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கார்பன் கருப்பு வளாகம் (India’s first integrated black complex), கர்நாடக மாநிலம் பெல்லாரியில் துவக்கப்பட்டுள்ளது.
- இதனை பிரபல எப்சிலான் நிறுவனம் கட்டமைத்துள்ளது.
முதல் இந்தோ – பசிபிக் வர்த்தக உச்சி மாநாடு:
- இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் “முதலாவது இந்தோ – பசிபிக் வணிக உச்சி மாநாட்டை” (first edition of Indo Pacific Business Summit) நடத்தியது.
- இம்மாநாட்டின் கரு = Developing a Road Map for Shared prosperity
- இந்தோ – பசிபிக் நாடுகளைச் சேர்ந்த முடிவெடுக்கும் வணிகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களைச் சந்தித்து விவாதிக்க ஒரு தளத்தை உருவாக்கி வழங்குதல்
சர்வதேச காலநிலை உச்சி மாநாடு 2௦21:
- வருகின்ற செப்டம்பர் மாதம், தலைநகர் புதுதில்லியில் “சர்வதேச காலநிலை உச்சி மாநாடு 2௦21” (International Climate Summit 2021” (ICS)) இந்தியாவின் சார்பில் நடத்தப்பட உள்ளது
- இம்மாநாட்டின் முக்கிய விவாதம், “பசுமை ஹைட்ரஜன்” (Green Hydrogen) பற்றியதாகும். மேலும் இந்தியாவை “பசுமை ஹைட்ரஜன்” சந்தையாக மாற்ற முயலவும் இம்ம்நாடு பயன்படுத்தப்பட உள்ளது
- இம்மாநாட்டின் கூட்டு நாடு = நார்வே ஆகும்.
பிரான்சின் டிரோன் எதிர்ப்பு அமைப்பு:
- பிரான்ஸ் நாட்டு இராணுவத்தின் சார்பில், லேசரில் இயங்கும் டிரோன் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. “HELMA-P” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
- HELMA – P = High Energy Laser for Multiple Application – Power
- 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிரோன்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது இது. 1 கிலோமீட்டர் சுற்றளவில் டிரோன்கள் நுழைந்தாலே இது தானாகவே கண்டுபிடித்து தாக்கும் வல்லமை கொண்டது.
செர்பிய ஓபனை வென்ற நிகல் சரின்:
- செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெற்ற “செர்பிய ஓபன் செஸ் சாம்பியன்சிப்” (Serbia open Chess Championship) போட்டியில் இந்தியாவின் 16 வயதுடைய “நிகல் சரின்” சாம்பியன்சிப் பட்டத்தை கைப்பற்றினார்
- கடந்த மாதம் “சில்வர் லேக் சாம்பிய்னசிப்” (Silver Lake Open Championship) பட்டத்தை வென்ற இவர், தொடர்ச்சியாக 2-வது சாம்பியன்சிப் பட்டத்தை வென்று, உலகத் தரவரிசை பட்டியலில் 88 வது இடத்திற்கு முன்னேறினார்.
ஐ.சி.சி முதன்மை நிர்வாகி விடுவிப்பு:
- ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்த “மானு சவனே” அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
- ஐ.சி.சி வாரியம் அதன் கூட்டத்தின் போது இந்த முடிவை எடுத்தது
- ஐ.சி.சியின் தலைமையகம் துபாயில் உள்ளது. அதன் தற்போதைய தலைவர், கிரேக் பார்க்லே ஆவார்.
மணிப்பூர் மாநிலத்திற்கு முதல் ரயில் சேவை:
- மணிபூர் மாநிலத்திற்கு முதன் முறையாக ரயில் சேவை துவங்கியது. அஸ்ஸாமின் சில்ச்சார் ரயில் நிலையத்தில் இருந்து, “ராஜ்தானி எக்ஸ்ப்ரஸ் பயணிகள்” ரயில், மணிப்பூரின் வைன்கைசுன்பா ரயில் நிலையத்திற்கு முன்னோட்ட ஓட்டமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- இரு மாநிலங்களையும் இணைக்கும் இந்த பாதை 11 கிலோமீட்டர் தூரமுடையது
பெங்களூருவில் கெம்ப்பகவுடா பாரம்பரிய தளங்கள்:
- பெங்களூரு நகரம் மற்றும் ஊரகப்பகுதிகள் போன்ற ப்[பல்வேறு இடங்கள் என மொத்தம் 46 கெம்பேகவுடா பாரம்பரிய தளங்களை உருவாக்க கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது
- 223 கோடி ரூபாயில் அமைக்கப்படும் இத்தளங்கள் மூலம் சுற்றுலா மேம்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
இந்திய தேசிய திரைப்படக் காப்பகம்:
- இந்திய தேசிய திரைப்படக் காப்பகத்தில், 2014 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த “பி.கே” திரைப்படம் சேர்க்கப்பட்டது. அப்படத்தில் அசல் கேமரா சுருள்கள் இம்மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
- 1964 ஆம் ஆடனு இந்திய தேசிய திரைப்படக் காப்பம் துவங்கப்பட்டது.
14 வங்கிகளுக்கு பண அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி:
- இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத 14 இந்திய வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி சுமார் 14.5 கோடி ரூபாய் “பண அபராதம்” விதித்துள்ளது
பந்தன் வங்கி | 1 கோடி அபராதம் |
பரோடா வங்கி | 2 கோடி |
மகாராஸ்டிரா வங்கி | 1 கோடி |
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா | 1 கோடி |
கிரெடிட் சூசி ஏ.ஜி | 1 கோடி |
இந்தியன் வங்கி | 1 கோடி |
இண்டஸ்இந்த் வங்கி | 1 கோடி |
கர்நாடக வங்கி | 1 கோடி |
கரூர் வைசியா வங்கி | 1 கோடி |
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி | 1 கோடி |
சவுத் இந்தியன் வங்கி | 1 கோடி |
பாரத ஸ்டேட் வங்கி | 5௦ இலட்சம் |
ஜம்மு காஸ்மீர் வங்கி | 1 கோடி |
உத்கர்ஷ் சிறு நிதிநிறுவன வங்கி | 1 கோடி |
ஸ்க்ரிப்ஸ் தேசிய எழுத்துப்பிழை போட்டி:
- உலகப் புகழ் பெற்ற ஸ்க்ரிப்ஸ் தேசிய எழுத்துப்பிழை போட்டியின் (scripps national spelling bee) 2௦21 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளராக, ஆப்ரிக்க-அமெரிக்க சிறுவனான “ஜைலா அவனத் கார்டே” அறிவிக்கப்பட்டுள்ளான்.
- 96 வருட பாரம்பரியம் மிக்க இப்போட்டியில் வெல்லும் முதல் ஆப்ரிக்க-அமெரிக்க சிறுவன் இவனாவான்.
- “Murraya” என்ற வார்த்தையின் எழுத்துக்களை சரியாக கூறி வெற்றி பெற்றான்.
- இப்போட்டியின் 2-வது 3-வது இடங்களை இந்திய வம்சாவழியை சேர்ந்த சைத்ரா தும்மாலா மற்றும் பாவனா மதினி ஆகியோர் பிடித்தனர்.
தேசிய மீன் விவசாயிகள் தினம்:
- நாடு முழுவதும் ஜூலை 1௦ ஆம் தேதி, தேசிய மீன் விவசாயிகள் தினம் (National Fish Farmers Day) கொண்டாடப்பட்டது
- ஜூலை 10, 1957 அன்று இந்திய முக்கிய கார்ப்ஸின் தூண்டப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் டாக்டர் கே எச் அலிகுன்ஹி மற்றும் டாக்டர் எச்.எல். சவுத்ரி ஆகியோரின் நினைவாக ஆண்டுதோறும் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.
- இது 64-வது தேசிய மீன் விவசாயிகள் தினமாகும்.
ஹைதராபாத்தில் புதிய சூரிய வெப்ப கூறுகள் சோதனை வசதி:
- ஹைதராபாத்தில் புதிதாக நிறுவப்பட்ட செறிவூட்டப்பட்ட சூரிய வெப்ப (சிஎஸ்டி) அடிப்படையிலான சோதனை ரிக் வசதி இந்தியாவில் வளர்ந்து வரும் சூரியத் தொழிலுக்கு சூரிய ரிசீவர் குழாய்கள், வெப்ப பரிமாற்ற திரவங்கள், குவிக்கும் கண்ணாடிகள் போன்ற சூரிய வெப்பக் கூறுகளின் திறனையும் செயல்திறனையும் சோதிக்க உதவும் (New solar thermal components testing facility at Hyderabad)
இமயமலை காட்டு எருதுகள்:
- அருணாச்சலப் பிரதேசத்தின் திறன் பகுதியில் உள்ள “தேசிய காட்டுஎருது ஆராய்ச்சி மையத்தின்” (National Research Centre on Yak (NRCY) at Dirang in Arunachal Pradesh) சார்பில் “நேஷனல் இன்சுரன்ஸ் கம்பெனி”யிடம் எருதுகளுக்காக காப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- காலநிலை மாற்றம், நோய்கள், காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் போன்றவற்றால் எருதுகள் சீரற்ற காலநிலைக்கு ஆளாகிறது.
மகாராஸ்டிராவில் யானைக்கால் நோய்க்கு எதிராக மாநிலம் தழுவிய மருத்துவ முகாம்:
- மகாராஸ்டிரா மாநிலத்தில் கொரோனா 2-வது அலைக்கு பிறகு, யானைக்கால் நோய்க்கு எதிரான மாநிலம் தழுவிய மருத்துவ முகாமினை அம்மாநில அரசு துவங்கியுள்ளது
- இது மனிதனின் நிணநீர் உறுப்பினை பாதிக்கும்.
- கியுலக்ஸ் என்ற வகையான கொசுக்கள் கடிப்பதால் இந்நோய் வருகிறது. இந்த நோய் இருப்பவர்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் காய்ச்சல் அடிக்கும், நெறிகட்டுதல், கால்வீக்கம், விறைவீக்கம் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
- இதனை பரப்பும் முக்கிய உயிரி = Wuchereria bancrofti
- இந்நோய்க்கு வழங்கப்படும் மருந்துகள் = diethylcarbamazine (DEC) and albendazole, Ivermectin
“கதவின் அருகே புத்தகங்கள்” இயக்கம்:
- கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்ட நூலக கவுன்சிலின் சார்பில், “கதவின் அருகே புத்தகம்” என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது (The Ernakulam District Library Council’s initiative, ‘Books at Doorstep’,)
- இதன்படி, பள்ளி குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை புதுப்பிக்க இம்முயற்சி உத்தியாக உள்ளது.
- இந்த திட்டம் மாவட்ட நூலக சபையின் கீழ் 500 நூலகங்களில் 25,000 குடும்பங்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சம்வேதான் 2௦21:
- மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் சோனிஇந்தியா மென்பொருள் நிறுவனம் ஆகியவை இணைந்து, “சம்வேதான் 2௦21” என்ற பெயரில் ஹேக்கத்தான் நிகழ்ச்சியை நடத்த உள்ளன (Indian Institute of Technology-Madras and Sony India Software Centre have proposed to host a hackathon called Samvedan 2021)
- ஹேக்கத்தானின் கீழ், இந்தியாவில் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்க போட்டியாளர்கள் கேட்கப்படுவார்கள்
நாசாவின் ஐஸ்சாட்-2 செயற்கைகோள்:
- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா” தனது ஐஸ்சாட்-2 (ICESAT-2) செயற்கைகோள் மூலம் அண்டார்டிக்காவில் உள்ள உருகேம் நேர் ஏரிகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
- ICESAT = Ice, Cloud and Land Elevation Satellite
- தடிமனான அண்டார்டிக் பனி அடுக்குகளுக்கு அடியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஏரியின் முழு நெட்வொர்க் காணப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் நடுவர்:
- தேசிய ரைபிள் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (என்.ஆர்.ஏ.ஐ) இணை பொதுச் செயலாளர் பவன் சிங், வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான முதல் இந்திய ஜூரராக (நடுவராக) தேர்வு செய்யப்பட்டுள்ளார் (first ever Indian juror for the upcoming Tokyo Olympic Games, Pawan SIngh)
- இவர் கன் ஃபார் குளோரி ஷூட்டிங் அகாடமியின் (Gun For Glory Shooting Academy) நிறுவனர்-இயக்குனர் ஆவார்.
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதர்:
- அமெரிக்க அதிபர் “ஜோ பைடன்”, இந்தியாவிற்கான புதிய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரான “எரிக் கார்செட்டி” என்பவரை நியமித்துள்ளார் (Eric Garcetti: US Ambassador to India)
- எரிக் கார்செட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் யூத மேயராவார்.
குரு கோபிந்த் சிங் பற்றிய புத்தகம்:
- மறைந்த பால்ஜித் கவுர் துளசி எழுதிய ‘ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜியின் ராமாயணம்’ (The Ramayan of Shri Guru Gobind Singh Ji) என்ற புத்தகத்தின் முதல் நகலை பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டது
- குரு கோபிந்த் சிங் மனித வடிவத்தில் சீக்கிய குருக்களில் பத்தாவது மற்றும் கடைசி ஆவார்
ஒருங்கிணைந்த சோதனை சாவடிகள்:
- 2025 க்குள் இந்தியா தனது நில எல்லைகளில் 24 ஒருங்கிணைந்த சோதனை சாவடிகளை (24 Integrated Check Posts ) உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது
- இதை இந்திய துறைமுக ஆணையத்தின் (எல்பிஏஐ) (Land Ports Authority of India (LPAI)) தலைவர் ஆதித்யா மிஸ்ரா அறிவித்தார்.
TNPSC நடப்பு நிகழ்வுகள் ஜூலை 9, 2௦21
TNPSC நடப்பு நிகழ்வுகள் ஜூலை 7, 2௦21