TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 9, 2021

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 9, 2021

       TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 9, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 9, 2௦21 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய கோல்ப் வீரர்கள்:
  • ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் கோல்ப் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவை சேர்ந்த “அணிர்பான் லகிரி மற்றும் உதயன் மானே” ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் (Anirban Lahiri and Udayan Mane, Indian Golf Players qualify for Tokyo Olympics)

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் கோல்ப் வீரர், அணிர்பான் லகிரி ஆவார் (First Indian Golf Player to qualify for Tokyo Olympics)
பருவநிலை மாற்றத்தால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர்:
  • மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அசாதாரணமான வெப்பநிலை மற்றும் கடுமையான் குளிரால் இந்தியாவில் ஆண்டு தோறும் சுமார் 7 லட்சம் இறப்பதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொனாஷ் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், உலகம் முழுவதும் 2௦௦௦ முதல் 2௦19 வரை, அதிகப்படியான வெப்பத்தினால் இறப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இந்தியாவில் கடுமையான வெப்பத்தினால் ஆண்டு தோறும் சுமார் 83,700 இறப்பதாகவும், மாறிவரும் கடுமையான் குளிரினால் 6,55,400 பேர் இறப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மல்லி:

TNPSC CURRENT AFFAIRS

  • புவிசார் குறியீட்டை பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பூஜைக்கு பயன்படும் மற்ற மலர்கள், தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • இந்த மலர்களை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மூலமாக சேகரிக்கப்பட்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தேவைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • APEDA = Agricultural and Processed Food Products Export Development Authority
  • மல்லியின் அறிவியல் பெயர் = Jasminum Officinale
நிலையான வளர்ச்சி இலக்குகள் அறிக்கை 2021:

TNPSC CURRENT AFFAIRS

  • ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறையின் (UN DESA = United Nations Department of Economic and Social Affairs) சார்பில் “2௦21 ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் அறிக்கை” (Sustainable Development Goals Report 2021) வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள குறிகாட்டிகளின் எண்ணிக்கை 2016 இல் 115 லிருந்து 2021 இல் 211 ஆக உயர்ந்துள்ளது
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் மொத்தம் 17,
    1. 2030 ஆம் ஆண்டில் உலகளாவிய வறுமை விகிதம் 7% என மதிப்பிடப்பட்டுள்ளது, இது வறுமையை ஒழிக்கும் இலக்கைக் எட்டாது
    2. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 22% குன்றியிருக்கிறார்கள், 7% வீணடிக்கப்படுகிறார்கள், 5.7% அதிக எடை கொண்டவர்கள்.
    3. கோவிட்-19 நோயினால் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை ஏற்படுவது குறைந்துள்ளது அல்லது மாற்றியமைத்துள்ளது. இது மக்களின் ஆயுட்கால அளவை குறைத்துள்ளது.
    4. 1-8 வகுப்புகளில் 9% குழந்தைகள் 2020 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச வாசிப்பு தேர்ச்சி மட்டத்திற்கு கீழே வந்துள்ளனர்
    5. தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 25.6% பெண்கள், 3% உள்ளூராட்சி பிரதிநிதிகள், 28.2% நிர்வாக பதவிகளில் உள்ளனர்.
    6. 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை, 6 பில்லியன் மக்கள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் சுகாதாரத்தை இழக்கின்றனர்.
    7. 6 பில்லியன் மக்கள் ஆபத்தான மற்றும் திறமையற்ற சமையல் முறைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
    8. கோவிட்-19, 255 மில்லியன் முழுநேர வேலைகளை இழக்க வழிவகுத்தது.
    9. நடுத்தர மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளின் உற்பத்தி 2020 இல் பொருளாதார மீட்சிக்கு பங்களித்தது;
    10. ஒவ்வொரு 100,000 பேருக்கும் 311 பேர் 2020 ல் அகதிகளாக உள்ளனர்.
    11. உலகின் நகர்ப்புற மக்களில் பாதி பேருக்கு பொது போக்குவரத்து வசதி உள்ளது.
    12. 2000 மற்றும் 2017 க்கு இடையில் உலகளாவிய பொருள் தடம் 70% அதிகரித்துள்ளது.
    13. உலகளாவிய சராசரி வெப்பநிலை 2020 இல் 1.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.
    14. இறப்பு மண்டலங்கள் 2008 ல் 400 ஆக இருந்து 2019 ல் 700 ஆக உயர்ந்துள்ளது
    15. 2000-2020 ஆம் ஆண்டில், 100 மில்லியன் ஹெக்டேர் காடுகள் இழந்தன.
    16. 2020 ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்கள் 160 மில்லியனாக அதிகரித்துள்ளனர். இது இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அதிகரித்துள்ளது.
    17. சுமார் 3.7 பில்லியன் மக்கள் (உலக மக்கள் தொகையில் பாதி) இன்னும் ஆன்லைனில் இல்லை
கேரளாவில் ஜிகா வைரஸ் நோய்:
  • கொசுவினால் பரவும், “ஜிகா வைரஸ் நோய்” (Zika Virus), கேரளாவில் முதல் குறிப்பு பதியப்பட்டுள்ளது.
  • புனேவில் உள்ள “தேசிய வைராலாஜி மையத்திற்கு” (National Institute of Virology, Pune), நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.
  • Flaviviridae வைரஸ் குடும்பத்தை சேர்ந்த சார்ந்த நோயாகும். ஏடிஸ் கொசுவினால் (Aedes Mosquitos) இந்நோய் பரப்பப்படுகிறது.
  • 1947 இல் முதன் முதலாக உகாண்டாவில், இவ்வைரஸ் நோய் கண்டறியப்பட்டது
பெண்களுக்கு எதிரான வன்முறை டெல்லியில் அதிகரிப்பு:
  • 202௦ ஆம் ஆண்டை காட்டிலும், 2௦21 ஆம் ஆண்டு தேசிய தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 63.3% அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
  • கடந்த 12 மாதங்களில், டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கற்பழிப்பு வழக்குகள் 43% அதிகரித்துள்ளது
  • துன்புறுத்தல் வழக்குகள் 39% அதிகரித்துள்ளது.
டெல்லியில் நைட்ரஜன் டை-ஆக்சைட் மாசு அதிகரிப்பு:
  • கிரீன்பீஸ் என்ற அரசுசாரா நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த ஒரு வருடத்தில் தேசிய தலைநகர் டெல்லியில், “நைட்ரஜன் டை-ஆக்சைட் காற்று மாசு”, 125% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அணைத்து நகரங்களிலும் நைட்ரஜன் டை-ஆக்சைட் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
    • டெல்லி = 125 % அதிகரிப்பு
    • சென்னை = 94 % அதிகரிப்பு
    • பெங்களூரு = 9௦ % அதிகரிப்பு
    • ஹைதராபாத் = 69 % அதிகரிப்பு
    • மும்பை = 52 % அதிகரிப்பு
    • கொல்கத்தா = 11 % அதிகரிப்பு
    • ஜெய்பூர் = 47 % அதிகரிப்பு
    • லக்னோ = 32 % அதிகரிப்பு
கப்பா வைரஸ் – உருமாறிய கொரோனா:
  • உருமாறிய கொரோனா, “கப்பா வைரஸ்” நோய் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • இவர்களின் மாதிரிகள் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • உருமாறிய கப்பா = 1.617
    • உருமாறிய டெல்டா = 1.617.2
பாதுகாப்பு அமைச்சகத்தின் “ஸ்பார்ஸ்” திட்டம்:
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில், ராணுவ பென்சனை ஒப்பளிப்பு மற்றும் விடுவித்தல் செய்வதற்கான தானியங்கி முறையான “ஸ்பார்ஸ்” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • ஓய்வூதியத்தை சார்ந்த பணியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
  • SPARSH = SYSTEM FOR PENSION ADMINISTRATION RAKSHA
இந்தியாவின் முதல் கடல்சார் நடுவர் மையம்:

TNPSC CURRENT AFFAIRS

  • குஜராத் மாநிலத்தின் காந்திநகர் பகுதியில் உள்ள “கிப்ட் நகரில்”, இந்தியாவின் முதல் கடல்சார் நடுவர் மையம் அமைக்கப்பட்டுள்ளது (India’s First Maritime Arbitration Centre in Gandhi Nagar, Gujarat)
  • குஜராத் கடல்சார் பல்கலைக்கழகம், சர்வதேச நிதிச்சேவைகள் மைய ஆணையத்துடன் (IFSCA – International Financial Services Centers Authority) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, இம்மையத்தை கொண்டுவந்துள்ளது.
  • GIMAC = Gujarat International Maritime Arbitration Centre
ஆக்சிஸ் வங்கியின் “பவர் சல்யுட்” முயற்சி:
  • ஆக்சிஸ் வங்கியின் சார்பில், ராணுவ வீரர்களுக்கான பிரத்தியோக சம்பளக் கணக்கு சேவை வழங்க ராணுவத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இதற்காக ஆக்சிஸ் வங்கியின் சார்பில் “பவர் சல்யுட்” (Power Salute) என்ற இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
புத்தகம் “ஆசிய ஜோதி”:
  • காங்கிரஸ் காட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னால் மத்திய அமைச்சருமான “ஜெயராம் ரமேஷ்”, “The Light of Asia” (ஆசிய ஜோதி) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
  • புத்தரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய குறிப்புகளை கொண்டுள்ளது இப்புத்தகம்.
  • The Light of Asia என்ற பெயரில் கவுதம புத்தரின் சிறப்புகளை பற்றி கூறும் புத்தகத்தை 1879 ஆம் வருடம் “சர் எட்வின் அர்னால்ட்” என்பவர் எழுதி வெளிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் சேவை ஒப்பந்தம் – இந்தியா, நேபாளம்:
  • இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இடையே “ரயில் சேவை ஒப்பந்தம்” மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 2004 ஆம் ஆண்டு ரயில் சேவை ஒப்பந்தம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது (India – Nepal signs Rail Services Agreement)
  • இது இந்திய ரயில்வே சரக்கு சேவைகள் மூலம் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய உதவும்.
இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம்:

TNPSC CURRENT AFFAIRS

  • பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள “பாட்னா பல்கலைக்கழக” வளாகத்தில், விரைவில் இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் (India’s First National Dolphin Research Cnetre) அமைய உள்ளது
  • ஆற்றுநதி டால்பின்களை பாதுகாக்கும் முயற்சியில் இம்மையம் செயல்படும்.
  • பீகாரில் “விக்கிரமசீலா” என்னுமிடத்தில் இந்தியாவின் முதல் கங்கைநதி டால்பின் சரணாலயம்” உள்ளது குறிப்பிடத்தக்கது
  • இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம், டால்பின் ஆகும்.
என்செலாடஸ் – சனிக்கோளின் நிலவு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • சனிக்கோளின் நிலவுகளில் 6-வது பெரிய நிலவான “என்செலாடஸ்” (Enceladus) இல் அறியப்படாத மீத்தேன் (Methane) உற்பத்தி செயல்முறைகள் இருக்கலாம் என சமிபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது
  • நாசாவின் “காசினி” விண்கலம் சனியின் நிலவுகளில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் டைஹைட்ரஜனுடன் சேர்ந்து வழக்கத்திற்கு மாறாக மீத்தேன் செறிவைக் கண்டறிந்தது.

TNPSC CURRENT AFFAIRShttps://tnpscwinners.com/tnpsc-current-affairs-july-9-2021/

எம்வோலியோ:
  • “பிளாக்பராக் தொழில்நுட்ப” ஸ்டார்ட்அப் நிறுவனம் சமிபத்தில் குளிபத சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இதற்கு “எம்வோலியோ” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது (Emvolio is a portable, battery-powered medical-grade refrigeration device)
  • இது சிறிய, பேட்டரி மூலம் இயங்கும் மருத்துவ தர குளிர்பதன சாதனம் ஆகும். இது 2-லிட்டர் திறன் கொண்டது, இது 30-50 குப்பிகளை சுமக்க உதவுகிறது.
ஒவ்வொரு நொடிக்கும் 11 பேரை கொள்ளும் பசி:
  • ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட “The Hunger Virus Multiplies” என்ற அறிக்கையில் உலகம் முழுவதும் பசி என்னும் பட்டினி நோயினால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • 2௦2௦ ஆம் ஆண்டை காட்டிலும் 2௦21 ஆம் ஆண்டு 6 மடங்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் ஏவுதலில் பங்கு கொள்ளும் இந்தியாவின் முதல் அரசுப்பள்ளி:
  • கர்நாடக மாநிலத்தின் மல்லேஸ்வரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது
  • செயற்கைக்கோள் ஏவுதலில் பங்கு கொள்ளும் இந்தியாவின் முதல் அரசுப்பள்ளி இதுவாகும்.

Leave a Reply