TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07

TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07 டிசம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

இந்தியா

ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் 6-வது முறையாக தடுப்பூசி செலுத்தி சாதனை

  • கொரோனோவை விரட்ட இந்திய அரசின் சார்பில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
  • முதல் முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட தினம் = 27 ஆகஸ்ட் 2021
  • ஆகஸ்ட் 31, செப்டம்பர் 6 ஆம் தேதி, செப்டம்பர் 27 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது
  • பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நாளில் 2 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட தினம் = செப்டம்பர் 17 ஆம் தேதி
  • 6-வது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கு பேர் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட தினம் = டிசம்பர் 4 ஆம் தேதி

கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07

  • உத்திரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS) பிரதமர் நரேந்திர மோடி 7 டிசம்பர் 2021 அன்று திறந்து வைத்தார் // PRIME MINISTER NARENDRA MODI INAUGURATES AIIMS IN GORAKHPUR
  • 1011 கோடி ரூபாய் மதிப்பில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 300 படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்

  • கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளை சேர்ந்த 10,645 பேர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பாகிஸ்தானை சேர்ந்த 7782 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்
  • வெளிநாடுகளில் 1,33,83,718 பேர் இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

தமிழகம்

தமிழகத்தில் எயிட்ஸ் நோய் தாக்கம் 0.18 சதவீதமாக குறைவு

  • தமிழகத்தில் எயிட்ஸ் நோய் தாக்கம் 0.18 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்
  • 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் எயிட்ஸ் நோயினால் பாதிப்பிற்கு உள்ளானோர் சதவிகிதம் = 0.18%
  • இந்தியாவில் எயிட்ஸ் நோயின் தாக்கம் = 2.04% ஆகும்.

20-வது சர்வதேச பலூன் கண்காட்சி

  • 20-வது சர்வதேச பலூன் கண்காட்சி நடைபெற்ற இடம் = லியோன் நகரம், மெக்சிகோ
  • மெக்சிகோ நாட்டின் லியோன் நகரில் நடைபெற்ற 20-வது சர்வதேச பலூன் கண்காட்சியில் இந்திய சுற்றுலாத் துரையின் பெருமையை நிலைநாட்டும் விதமாக தேசிய கொடியின் வர்ணத்தில் அமைக்கப்பட்ட ராட்சத பலூனில் இடம்பெற்ற தமிழக சுற்றுலாத் துரையின் வாசகத்தை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

தமிழகத்தின் வளமான முதல் 5 மாவட்டங்கள்

TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07

  • நிதி யோக் அமைப்பு மூலம் வெளியிடப்பட்ட ஏழ்மை அறிக்கையின் படி, தமிழ்நாட்டின் வளமான முதல் 5 மாவட்டங்கள்,
    1. சென்னை
    2. கன்னியாகுமரி
    3. நீலகிரி
    4. கோயம்புத்தூர்
    5. திருவள்ளூர்

தமிழகத்தின் ஏழ்மையான 5 மாவட்டங்கள்

TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07

  • நிதி யோக் அமைப்பு மூலம் வெளியிடப்பட்ட ஏழ்மை அறிக்கையின் படி, தமிழ்நாட்டின் ஏழ்மையான முதல் 5 மாவட்டங்கள்
    1. புதுக்கோட்டை
    2. விழுப்புரம்
    3. விருதுநகர்
    4. அரியலூர்
    5. சிவகங்கை

உலகம்

வலியற்ற மரணத்திற்கான கருணைக்கொலை கருவிக்கு சுவிட்சர்லாந்து ஒப்புதல்

TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07

  • “சர்கோ கேப்சூல்” (SARCO CAPSULE) எனப்படும் தற்கொலை பாட் பயன்படுத்த சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது // SWITZERLAND HAS REPORTEDLY APPROVED THE USE OF A SUICIDE POD CALLED THE SARCO CAPSULE.
  • ஹைபோக்ஸியா (HYPOXIA) மற்றும் ஹைபோகாப்னியா (HYPOCAPNIA) (திசு மட்டத்தில் போதிய ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் இரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு குறைதல் ஆகியவை மரணத்திற்கு வழிவகுக்கும்) தூண்டுவதன் மூலம் பயனர்கள் தங்களை ஒப்பீட்டளவில் வலியின்றி கொல்ல அனுமதிக்கிறது.

முதன் முதல்

ஹோண்டுராசின் முதல் பெண் அதிபர் தேர்வு

  • லத்தின் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • ஹோண்டுராசில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் = சியோமோரோ காஸ்ட்ரோ

உலகின் முதல் உயிருள்ள ரோபோக்கள் – ஜீனோபாட்ஸ்

  • அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக உயிரி ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அவர்கள் உருவாக்கினர். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜீனோபஸ் லேவிஸ் என்ற தவளை இனத்தின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கியதால் இதற்கு ஜீனோபாட்ஸ் 0 என்று பெயரிடப்பட்டது. இவை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டவை. பேக் மேன் வடிவிலான இந்த ரோபோக்களால் நகர முடியும். நீந்த முடியும்.
  • தொடர் ஆராய்ச்சியின் பலனாக கடந்த மே மாதம் ஜீனோபாட்ஸ் 0 ரோபோ உருவாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஜீனோபாட்ஸ் 3.0 ரோபோ குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டனர்
  • ஜீனோபாட்ஸ் 3.0 = இவற்றால் குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த ரோபோ ஆராய்ச்சியின் மூலம் விபத்தில் படுகாயமடைந்த மனிதர்களை குணப்படுத்த முடியும். பிறவி குறைபாடுகள், புற்றுநோயை குணப்படுத்த முடியும். முதுமை பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி போட்டிகள்

  • 16-வது தேசிய சீனியர் ஆடவர் ஹக்கி சாம்பியன்சிப் போட்டிகள் நடைபெற உள்ள இடம் = புணே, மகாராஸ்டிரா
  • தமிழகம் உட்பட 30 மாநிலங்களின் அணிகள் இதில் பங்கேற்க உள்ளன.

அறிவியல், தொழில்நுட்பம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனனை தேர்வு செய்த நாசா

TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07

  • சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான பயணத்திற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனனை நாசா தேர்வு செய்துள்ளது // NASA PICKS UP INDIAN-ORIGIN ANIL MENON FOR A MISSION TO MOON AND MARS
  • அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு பயணங்களுக்கு செல்லும் விண்கலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.

திட்டம்

ஹூண்டாய் நிறுவனத்தின் “தண்ணீர் சேமிப்பு சவால்” திட்டம்

  • ஹூண்டாய் கார் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை தண்ணீரை பயன்படுத்தாமல் சுத்தம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அந்நிறுவனம் “தண்ணீர் சேமிப்பு சவால்” என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
  • நிலையான எதிர்காலத்திற்காக சுற்றுச்சூழலை பாதிக்காத நடைமுறைகள் மூலம் மனித குளத்தின் முன்னேற்றத்தை ஹூண்டாய் வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

இறப்பு

“புத்தகத் தாத்தா” முருகேசன் காலமானார்

  • “புத்தகத் தாத்தா” என்று அழைக்கப்பட்ட தமிழ் ஆர்வலர் சா.க்.முருகேசன் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் காலமானார்
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் இவர்.
  • ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுவதற்காக தன்னிடம் உள்ள புத்தகங்களை வழங்கி உதவியர் இவர்.

இடங்கள், கருத்தரங்கம்

உலகளாவிய நிதி தொழில்நுட்ப கருத்தரங்கு

  • உலகளாவிய நிதி தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கை புது தில்லியில் பிரதமர் துவக்கி வைத்தார்
  • சர்வதேச நிதியியல் சேவைகள் மையங்களின் ஆணையம், உலகளாவிய நிதி மற்றும் தொழில் நுட்ப சேவைகள் முனையமான கிப்ட் சிடி ஆகியவை இணைந்து இக்கருத்தரங்கை நடத்த உள்ளன.

விருது

கே.எம்.செரியனுக்கு கவுரவ விருது

  • புது தில்லி டாக்டர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 12-வது இந்திய உறுப்பு தான நாள் விழாவில் மத்திய அமைச்சகம் சார்பில், இதய பராமரிப்பு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் “கே.எம்.செரியன்” அவர்களுக்கு கவுரவ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

நியமனம்

டபுள்யு.எப்.எஸ்.ஏ கற்பித்தல் குழுவின் தெற்காசிய பிரதிநிதியாக டாக்டர் பாலவெங்கட் தேர்வு

  • இந்திய மயக்கவியல் சங்கத்தின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், கோவை கங்கா மருத்துவ மனையின் மயக்கவியல் பிரிவு நிபுணருமான டாக்டர் பால்வெங்கட், “வேர்ல்ட் பெடரேசன் ஆப் சொசைட்டி ஆப் அனஸ்தீஷியா (டபுள்யு.எப்.எஸ்.ஏ) இணையவழி கற்பித்தல் குழுவின் தெற்கு ஆசிய பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

Leave a Reply