TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04

Table of Contents

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04 டிசம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

இந்தியா

2025 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 10500 PM பாரதிய ஜன் ஔஷதி கேந்திராக்கள் திறக்கப்படும்

  • மார்ச் 2025க்குள் நாடு முழுவதும் சுமார் 10,500 பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராக்களை (மலிவு விலை மருந்தகங்கள்) (PRADHAN MANTRI BHARTIYA JAN AUSHADHI KENDRAS (PMBJK)) திறக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது
  • PMBJK நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது.

2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அணு உலைகளின் எண்ணிக்கை 9 ஆக உயரும்

  • ராஜ்யசபாவில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதிலில் வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 9 அணு உலைகள் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • வட இந்தியாவில் முதல் முறையாக ஹரியானா மாநிலத்தின் கோரக்பூரில் புதிய அணு உலை அமைக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது

முதன் முதல்

வால்ட் டிஸ்னியின் முதல் பெண் தலைவராக சூசன் அர்னால்ட் நியமனம்

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04

  • வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக சூசன் அர்னால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் // SUSAN ARNOLD NAMED AS FIRST WOMAN CHAIRPERSON OF WALT DISNEY
  • 98 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவராவார்

இந்தியாவின் முதல் உள்நாட்டு சர்வர் (சேவையகம்) – ருத்ரா

  • நேஷனல் சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (NATIONAL SUPERCOMPUTING MISSION – NSM) கீழ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (C-DAC – CENTRE FOR DEVELOPMENT OF ADVANCED COMPUTING) உருவாக்கப்பட்ட முதல் உள்நாட்டு சேவையகமான ருத்ராவைத் துவக்கி வைத்தார் // UNDER THE NATIONAL SUPERCOMPUTING MISSION (NSM), MINISTRy LAUNCHED India’s FIRST INDIGENOUS SERVER, RUDRA, DEVELOPED BY THE CENTRE FOR DEVELOPMENT OF ADVANCED COMPUTING (C-DAC).
  • சேவையக வடிவமைப்பு வணிக சேவையகங்களை உற்பத்தி செய்வதற்கும் பெரிய சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம்.

விளையாட்டு

2021 ஆசிய இளைஞர் பாராலிம்பிக் போட்டியில் காஷிஷ் லக்ரா (F51) தங்கம் வென்றார்

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04

  • டோக்கியோ பாராலிம்பியன் காஷிஷ் லக்ரா (F51) 3 டிசம்பர் 2021 அன்று பஹ்ரைனில் நடந்த 2021 ஆசியா யூத் பாராலிம்பிக் போட்டிகளில் கிளப் எறிதலில் (CLUB THROW) தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
  • ஈட்டி எறிதலில் லக்சித் (எப்54) வெண்கலமும், ஷாட்புட்டில் சஞ்சய் ஆர்.நீலம் (எப்11) வெண்கலமும் வென்றனர்.
  • டிசம்பர் 2 முதல் 6 வரை பஹ்ரைன் 4வது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகளை (BAHRAIN – 4TH ASIAN YOUTH PARA GAMES (AYPG)) நடத்துகிறது.

ஒரு இன்னிங்சில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் அஜாஸ் படேல்

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04

  • நியுசிலாந்து நாட்டின் அஜாஸ் படேல் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாறு படைத்தார் // AJAZ PATEL BECOMES THIRD BOWLER TO TAKE ALL 10 WICKETS IN AN INNINGS
  • அவர் 119 ரன்களை கொடுத்து 10 விக்கெட்டுகளையும் எடுத்தார்
  • ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆசிய யூத் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குண்டு எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை

  • பஹ்ரைனின் மனமாவில் நடந்த ஆசிய யூத் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் எஃப்-20 பிரிவில் ஷாட்புட்டில் நாட்டின் முதல் வெள்ளிப் பதக்கத்தை அனன்யா பன்சால் வென்றார் // ANANYA BANSAL WON THE COUNTRY’S FIRST SILVER MEDAL IN SHOTPUT IN THE F-20 CATEGORY AT THE ASIA YOUTH PARALYMPIC GAMES IN MANAMA, BAHRAIN
  • அவர் ஒரு அறிவுசார் குறைபாடு கொண்ட ஒரு விளையாட்டு வீராங்கனை // SHE IS AN ATHLETE WITH AN INTELLECTUAL IMPAIRMENT

இடங்கள்

அமேதியில் AK-203 தாக்குதல் துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு ஒப்புதல்

  • உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள கோர்வாவில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது // THE CENTRE HAS APPROVED THE PRODUCTION OF OVER FIVE LAKH AK-203 ASSAULT RIFLES AT KORWA IN AMETHI, UTTAR PRADESH.
  • இந்தோ-ரஷியன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற சிறப்பு நோக்கக் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அறிவியல், தொழில்நுட்பம்

‘பட்டாம்பூச்சிகளின் தேசம்’ எனப்படும் சிக்கிமின் டிசோங்குவில் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

  • வடக்கு சிக்கிமில் உள்ள டிசோங்குவில் புதிய வகை பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • “பட்டாம்பூசிகளின் தேசம்” எனப்படுவது = சிக்கிமின் டிசோங்கோ
  • Chocolatebordered Flitter என்று பெயரிடப்பட்ட புதிய இனம் Zographetus dzonguensis என்ற அறிவியல் பெயரையும் கொண்டுள்ளது.

இறப்பு

ஆந்திர முன்னாள் முதல்வர் கொனிஜெட்டி ரோசய்யா காலமானார்

  • ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் கொனிஜெட்டி ரோசய்யா 4 டிசம்பர் 2021 அன்று காலமானார் // FORMER ANDHRA PRADESH CHIEF MINISTER KONIJETI ROSAIAH PASSES AWAY
  • ரோசய்யா தமிழக ஆளுநராகவும் பதவி வகித்தார்.
  • 1968, 1974, 1980 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேச மாநில சட்ட மேலவையில் நான்கு முறை உறுப்பினராக இருந்தார்.

குழு

பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) 100 ஆம் ஆண்டு விழா

  • பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) 100 ஆண்டு விழா துவங்கியது // THE CELEBRATION OF 100 YEARS OF THE PUBLIC ACCOUNTS COMMITTEE (PAC) IS SCHEDULED ON DECEMBER 4-5,
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

விருது

ரத்தன் டாடாவுக்கு ‘அசோம் பைபவ்’ விருது

  • அசாம் திவாஸை முன்னிட்டு, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு ‘அசோம் பைபவ்’ விருதை வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது // RATAN TATA TO BE CONFERRED WITH THE ‘ASOM BHAIBAV’ AWARD
  • மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் அவரது பங்களிப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

நாட்கள்

இந்திய கடற்படை தினம்

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04

  • 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது கராச்சி துறைமுகத்தின் மீதான தாக்குதலை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி இந்திய கடற்படை தினம் (INDIAN NAVY DAY) கொண்டாடப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய கடற்படை தினத்தின் கருப்பொருள் = INDIAN NAVY – COMBAT READY, CREDIBLE AND COHESIVE
  • இந்தியக் கடற்படை என்பது இந்திய ஆயுதப் படைகளின் கடற்படைக் கிளை ஆகும், இது இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தளபதியாக வழிநடத்தப்படுகிறது.
  • மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜ், இந்தியக் கடற்படையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
  • இந்திய கடற்படை 1612 இல் கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது.

சர்வதேச வங்கிகள் தினம்

  • நிலையான வளர்ச்சிகளுக்கு நிதியளிப்பதில் பலதரப்பு மற்றும் சர்வதேச வளர்ச்சி வங்கிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க டிசம்பர் 4 ஆம் தேதி சர்வதேச வங்கிகள் தினம் (INTERNATIONAL DAY OF BANKS IS CELEBRATED ON DECEMBER 4) கொண்டாடப்படுகிறது.
  • வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பதில் உறுப்பு நாடுகளில் வங்கி அமைப்புகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த நாளைக் கடைப்பிடிக்கிறது.

திட்டம்

தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் திட்டம் – RE – HAB

  • யானைகள் – மனித மோதலைத் தடுக்க சிறிய தேனீக்களை பயன்படுத்தி யானைகளை விரட்டும் “RE-HAB” (REDUCING ELEPHANT HUMAN – ATTACKS USING BEES) என்ற புதிய திட்டத்தை அஸ்ஸாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இத்திட்டம் அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள மோர்னோய் கிராமத்தில் துவக்கி வைக்கப்பட்டது

 

 

Leave a Reply