TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 8, 2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 8, 2௦21

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 8, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 8, 2௦21 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 

இந்திய பல்கலை கூட்டமைப்பு தலைவராக திருவாசகம் தேர்வு:
  • சென்னை “அமெட்” (AMET) கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தரான திருவாசகம், இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பிற்கு (AIU) தலைவராக 1008 பல்கலைகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • AMET = ACADEMY OF MARITIME EDUCATION AND TRAINING
  • இக்கூட்டமைப்பின் 1௦௦-வது தலைவர் இவராவார் (100TH PRESIDENT OF ASSOCIATION OF INDIAN UNIVERSITIES (AIU))
இரட்டைமலை சீனிவாசன்:

 

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • ஜூலை 7 ஆம் தேதி, தமிழகத்தில் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது
  • தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பெரியாருக்கு முன்னரே பாடுபட்டவர்.
  • 1891 ஆம் ஆண்டு “பறையர் மகாஜன சபையை” துவக்கினார்.
  • 1893 ஆம் ஆண்டு ஆதிதிராவிட மகாஜன சபையை துவக்கினார்
  • பறையன் என்ற பெயரில் தமிழ் செய்தித்தாளையும் நடத்தினார்
  • இவர் அம்பேத்கருடன் சேர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, லண்டனில் முதல் மற்றும் 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்துக் கொண்டார்.
  • ஆங்கிலேய அரசு இவரின் சமூகப் பணிகளைப் பாராட்டி, 1926 ஆம் ஆண்டு “இராவ் சாகிப்” பட்டமும், 1930 ஆம் ஆண்டு “இராவ் பகதூர்” பட்டமும், 1936 ஆம் ஆண்டு “திவான் பகதூர்” பட்டமும் வழங்கியது.
  • 1936 ஆம் ஆண்டு இவருக்கு “திராவிடமணி” என்ற பட்டத்தை திரு.வி.க வழங்கினார்.
வேலையின்மை:

 

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • நாட்டிலேயே அதிகபட்சமாக புதுவையில் வேலையின்மை (UNEMPLOYMENT) விகிதம் 47.1 % ஆக அதிகரித்துள்ளது
  • தென்னிந்தியாவில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் இரட்டை இலக்கங்களில் உள்ள ஒரே மாநிலம், கேரளம் ஆகும்.
  • ஜூலை 7-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் வேலையின்மை
    • இந்தியா = 7.9%
    • நகரப்பகுதி = 9.௦%
    • ஊரகப்பகுதி = 7.4%
    • புதுச்சேரி = 47.1%
    • தமிழகம் = 8.3%
    • கேரளா = 15.8%
  • நாட்டிலேயே குறைவான வேலையின்மை உள்ள மாநிலங்கள் = சிக்கிம் மற்றும் அஸ்ஸாம்
பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது 2௦21:
  • 2௦21 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது, இந்திய பொருளாதார அறிஞர் “கவுசிக் பாசு” அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (INDIAN ECONOMIST KAUSHIK BASU GETS HUMBOLDT RESEARCH AWARD FOR ECONOMICS FOR 2021)
  • உலக வங்கியின் முதன்மை பொருளாதார அலுவலராக பணியாற்றிய முதல் இந்தியர் இவராவார் (1ST INDIAN TO BECOME THE WORLD BANK CHIEF ECONOMIST)
  • 2008 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது
ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் கேசவ் தத் காலமானார்:
  • ஹாக்கியில் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற கேசவ் தத் காலமானார்
  • 1948 ஒலிம்பிக்கில் இந்தியாவின் வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக அவர் இருந்தார், அங்கு அவர்கள் லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் சொந்த அணியான பிரிட்டனை வீழ்த்தி சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
2௦22 பெண்கள் கால்பந்து ஆசியக் கோப்பை:
  • 2௦22 ஆம் ஆடனு நடைபெற உள்ள பெண்கள் கால்பந்து ஆசியக் கோப்பை போட்டிகள், புவனேஷ்வர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெற இருந்த போட்டிகளை, தற்போது மும்பை மற்றும் பூனே நகரங்களுக்கு மாற்றம் செய்து ஆசிய கால்பந்து கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது (MUMBAI, PUNE TO HOST 2022 WOMEN’S ASIAN CUP)
  • பங்கேற்பாளர்களுக்கான பயண நேரத்தைக் குறைப்பதற்கும், உயிர் பாதுகாப்பான “உகந்த சூழலை” உறுதி செய்வதற்கும் இடங்கள் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உலகின் மிகப்பெரிய உயரமான “மணல் கோட்டை”:

 

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • உலகின் மிகப்பெரிய, உயரமான மணல் கோட்டை, டென்மார்க்கில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் உயரம் 21.16 மீட்டர் ஆகும் (WORLD’S TALLEST SANDCASTLE WAS BUILT IN DENMARK. IT HAS ESTABLISHED NEW GUINNESS WORLD RECORD OF 21.16 METRES)
  • இது ஒரு புதிய கின்னஸ் உலக சாதனை ஆகும்.
  • முக்கோண வடிவில் கட்டப்பட்ட இந்த மணல் கோட்டை, சுமார் 4860 டன் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் காலமானார்:
  • மூத்த காங்கிரஸ் தலைவரும், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான வீரபத்திரசிங் மொகாலியில் காலமானார்.
  • அவருக்கு வயது 87.
துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்திற்கு வித்யாபாலன் பெயர் சூட்டல்:
  • ஜம்மு காஸ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தின் குல்மர்க் என்னுமிடத்தில் உள்ள இந்திய ராணுவத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்திற்கு, இந்தி நடிகை “வித்யாபாலன்” பெயர் சூட்டப்பட்டுள்ளது (INDIAN ARMY NAMES FIRING RANGE AFTER VIDYA BALAN)
  • இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
ஹைதி அதிபர் படுகொலை:
  • கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டின் அதிபர், “ஜோவனால் மாயிஸ்”, அவரது இல்லத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரின் மனைவியும் இதில் மரணமடைந்தார் (HAITI PRESIDENT, JOVENEL MOISE WAS ASSASSINATED)
  • அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது
கேப்டன் குர்ஜிந்தர் சிங்க் சூரி – போர் நினைவகம் திறப்பு:
  • 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற “பிர்சாமுண்டா நடவடிக்கையின்” பொழுது உயிர் நீத்த கேப்டன் குர்ஜிந்தர் சிங்க் சூரி அவர்களை கவுரவிக்கும் பொருட்டு, “எல்லைக் கட்டுப்பாடு கோடு” அருகே உள்ள “குல்மர்க்” என்னுமிடத்தில், போர் நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது (ON THE OCCASION OF THE BIRTHDAY OF CAPTAIN GURJINDER SINGH SURI, WHO DIED DURING THE OPERATION BIRSA MUNDA” IN 1999, THE INDIAN ARMY INAUGURATED A WAR MEMORIAL IN MEMORY OF CAPTAIN IN GULMARG NEAR THE LINE OF CONTROL (LOC))
அண்டார்டிக்காவில் புதிய தாவர இனம் கண்டுபிடிப்பு:
  • பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள “மத்திய பஞ்சாப் பல்கலைக்கழகத்தை” சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள், கிழக்கு அண்டார்டிக்காவில் புதிய ஹ்டாவர இனங்களை கண்டுபிடித்துள்ளனர்
  • MOSS தாவர இனத்தை ஆராய்சியாளர்கள கண்டுபிடித்தனர். இதற்கு அறிவியல் பெயராக ‘BRYUM BHARATIENSIS’ என சூட்டியுள்ளனர்
  • இந்திய அண்டார்டிக் மிஷனின் கீழ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே தாவர இனம் இதுதான் ஆகும்.
  • இந்திய அண்டார்டிக் மிசன் திட்டத்தின் கீழ் இதுவரை 3 ஆராய்ச்சி மையங்களை இந்தியா அங்கு திறந்துள்ளது
    1. தக்சின் கங்கோத்ரி = 1983
    2. மைத்ரி = 1989
    3. பாரதி = 2012
சீனாவில் உயராமான கட்டிடங்களை கட்ட தடை:
  • சீன அரசு 5௦௦ மீட்டர் (1,640 அடி) மீள் உயராமன் கட்டிடங்களை கட்ட தடை விதித்துள்ளது
  • மேலும் உள்ளூர் சீன அதிகாரிகளை 25௦ மீட்டருக்கு மேல் கட்டிடங்களை கட்டுவதற்கு கட்டுபாடுகளை விதிக்கவும் ஆணை விதித்துள்ளது.
இந்திய, இத்தாலி கடல்சார் பயிற்சி நிகழ்ச்சி:
  • இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளின் கப்பற்படையின் சார்பில் கடல்சார் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்தியாவின் சார்பில் “ஐ.என்.எஸ் தப்பார்” போர்க்கப்பல் இதில் பங்குபெற்றது. இப்பயிற்சி மத்திய தரைக்கடல் பகுதியில் நடைபெற்றது.
அசாமில் புதிய இரண்டு சிலந்தி இனங்கள் கண்டுபிடிப்பு:
  • மேற்கு அசாமின் சிராங் வனப்பகுதியில் உள்ள ஜார்ப்பாரி பகுதியில் புதிய 2 சிலந்தி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு இனங்களும் ஒரே இடத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன.
  • GRAVELYIA BORO” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலந்தி, பூமிக்கு அடியில் வலை (UNDERGROUND BURROW SPIDER) கட்டி வாழும் இனமாகும்.
  • “DEXIPPUS KLEINI எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த சிலந்தி இனம், குதித்து செல்லும் இனமாகும் (JUMPING SPIDER). இந்த சிலந்தி பற்றி 129 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்வீடன் நாடு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
  • இந்த 2 இனங்களும் போடோலாந்து பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மிசோராமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய விஷமில்லா பாம்பு இனம்:
  • மிசோராம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதிய விஷமில்லா பாம்பு (NON VENOMOUS SNAKE SPECIES) இனத்தை கண்டுபிடித்துள்ளனர்
  • இதன் அறிவியல் பெயர் = STOLICZKIA VANHNUAILIANAI
  • மிசோராமின் சிறப்பான போர் வீரராக இருந்த வான்ஹுயிலியானா என்பவற்றின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது
சட்ட மேலவை அமைக்க உள்ள மேற்குவங்கம்:
  • மேற்குவங்க மாநிலத்தில், சட்ட மேலவை அமைக்க அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியல அமைப்பு சட்ட விதி 169 = மாநிலங்களில் சட்டமன்ற மேலவைகளை ஒழித்தல் அல்லது உருவாக்குதல் (ABOLITION OR CREATION OF LEGISLATIVE COUNCILS IN STATES)
  • இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 171 = மாநில சட்டமன்றத்தின் எண்ணிக்கையில் 3-ல்-1 பங்கு உறுப்பினர்களே சட்ட மேலவையில் இருக்க வேண்டும் மற்றும் 40 உறுப்பினர்களுக்கு குறையாமல இருக்க வேண்டும்.
  • இதுவரை இந்தியாவில் 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது,
    1. பீகார்
    2. உத்திரப்பிரதேசம்
    3. மகாராஸ்டிரா
    4. ஆந்திரப்பிரதேசம்
    5. தெலுங்கானா
    6. கர்நாடகா
அசாமின் கமோசா துண்டு:
  • அஸ்ஸாம் மாநில அரசு, அம்மாநிலத்தில் நடைபெறும் அணைத்து அரசு விழாக்களிலும், அம்மாநில மக்களால் கைகளல உருவாக்கப்படும் “கமோசா” (ASSAMESE GAMOSA) எனப்படும் துண்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
  • “புவிசார் குறியீடு” அந்தஸ்தை பெற்றுள்ள இந்த துண்டு, வெள்ளை நிறத்தில், சிவப்பு நிற எல்லைகளை கொண்டுள்ளது.
பாலியா கோதுமை:
  • சமீபத்தில், புவியியல் காட்டி (ஜிஐ) சான்றளிக்கப்பட்ட பாலியா வகை கோதுமையின் முதல் கப்பல் கென்யா மற்றும் இலங்கைக்கு குஜராத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது (FIRST SHIPMENT OF GEOGRAPHICAL INDICATION (GI) CERTIFIED BHALIA VARIETY OF WHEAT)
  • ஜூலை 2௦11 இல் இது புவிசார் குறியீட்டினை பெற்றது.
  • இந்திய புவிசார் குறியீட்டு பதிவு அலுவலகம், சென்னையில் உள்ளது
பந்தர் வைர சுரங்க திட்டம்:
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட புக்ச்வாகா வனப்பகுதியில் அமைக்கப்பட உள்ள பந்தர் வைர சுரங்க திட்டத்தால், இப்பகுதியில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது (PROPOSED BUNDER DIAMOND MINING PROJECTIN THE BUXWAHA PROTECTED FOREST REGION IN CHHATARPUR (MADHYA PRADESH) MAY HAVE A GREATER ECOLOGICAL IMPACT ON THE REGION)
கருப்பு சிறுத்தை:
  • மிகவும் அபூர்வமான “கருப்பு சிறுத்தை”, மகாராஸ்டிரா மாநிலத்தின் நவேகான் நஜிரா புலிகள் காப்பகத்தில் தென்பட்டுள்ளது (A RARE MELANISTIC LEOPARD, POPULARLY CALLED BLACK LEOPARD, WAS SPOTTED IN THE NAVEGAON NAGZIRA TIGER RESERVE (NNTR) OF MAHARASHTRA.)
  • இத் தென்னிந்தியாவில் மட்டுமே உள்ள புலிகள் இனமாகும்.
  • மெலனிஸ்டிக் சிறுத்தைகள் ASIP மரபணுவில் ஒரு பின்னடைவு பிறழ்வைக் கொண்டுள்ளன (இது தோல் / கண் / முடி நிறமி தொடர்பானது).
  • கருப்பு நிற மெலனின் அதிக சுரத்தல் காரணமாக இது கருமை நிறத்தில் உள்ளன.
கார்கில் ஹீரோ “விக்ரம் பத்ரா”:

 

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • 1999 கார்கில் போரில் ஹீரோக்களில் ஒருவரான “விக்ரம் பத்ராவிற்கு” ராணுவத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது (TO COMMEMORATE THE “BALIDAN DIWAS” OF THE KARGIL WAR HERO OF 1999, CAPTAIN VIKRAM BATRA, HIS THEN COMMANDING OFFICER AND NOW GENERAL OFFICER COMMANDING IN CHIEF NORTHERN COMMAND, LIEUTENANT GENERAL Y K JOSHI PAID HOMAGE TO HIS FALLEN COMRADE FROM THE SKY)
  • அவரின் நினைவாக 4875 மலைப்புள்ளிக்கு, “பத்ரா உச்சி” என பெயர் சூட்டப்பட்டது
  • பூரில் வீரமரணம் அடைந்த விக்ரம் பத்ராவிற்கு, இராணுவத்தின் உயர்ந்த விருதான “பரம்வீர் சக்ரா” விருது அர்பணிக்கப்பட்டது.
வானொலி தரவரிசை:
  • நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் வானொலி மையங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது
  • முதல் இடத்தில அமெரிக்க வானொலி உள்ளது. இந்தியாவின் “ஆல் இந்தியா ரேடியோ” (AIR – ALL INDIA RADIO) எனப்படும் “ஆகாசவாணி (AKASHVANI) அகில இந்தியா வானொலி” 7-வது இடத்தில இருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியது
  • “தமிழ் அகில இந்திய வானொலி” 1௦-வது இடத்திற்கு பின்சென்றது.
அமேசானின் “டிஜிட்டல் கேந்திரா”:

 

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • அமேசான் இந்தியா தனது முதல் செங்கல் மற்றும் மோட்டார் (காரை) வள மையமான ‘டிஜிட்டல் கேந்திரா’ குஜராத்தின் சூரத்தில் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது (AMAZON INDIA HAS ANNOUNCED THE LAUNCH OF ITS FIRST BRICK-AND-MORTAR RESOURCE CENTER, ‘DIGITAL KENDRA’ IN SURAT, GUJARAT)
உலகின் முதல் தனி மோட்டார்சைக்கிள் பயணம்:
  • “காஞ்சன் உகுசாண்டி” என்ற பெண்மணி, உலகின் முதல் தனி மோட்டர்சைக்கிள் பயணத்தை, வடக்கு இமயமலைப் பகுதிகளில் துவங்கி வெற்றிகரமாக புதுதில்லியில் உள்ள சீமா சதக் பவனில் நிறைவு செய்தார் (THE WORLD’S FIRST SOLO MOTORCYCLE EXPEDITION UNDERTAKEN BY MISS KANCHAN UGUSANDI, COVERING 18 TREACHEROUS PASSES IN NORTHERN HIMALAYAN RANGES CULMINATED ON WEDNESDAY (JULY 07, 2021) AT SEEMA SADAK BHAWAN IN NEW DELHI.)
  • வடக்கு இமயமலைப் பகுதிகளில் உள்ள 18 கணவாய் பகுதிகளை மோட்டார் சைக்கிள் மூலம் கடந்த முதன் பெண்மணி இவராவார் (MISS UGUSANDI HAS BECOME THE FIRST SOLO WOMAN BIKER TO SCALE THE UMLINGLA PASS, THE FIRST WOMAN TO COVER THE 18 PASSES AND ALSO THE FIRST WOMAN TO TRAVERSE A DISTANCE OF 3,187 KILOMETRE)
  • மேலும் “உம்லிங்கா கணவாயை” தனியாக கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உலகின் முதல் வாய்வழி புற்றுநோயில் மரபணு மாறுபாடுகளின் தரவுத்தளம்:

 

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • மத்திய உயிரி தொழில்நுட்ப துறையின், மேகுவங்க மாநிலத்தின் கல்யானியில் உள்ள “தேசிய உயிரிமருத்துவ மரபியல் நிறுவனம்”, உலகின் முதல் வாய்வழி புற்றுநோயில் மரபணு தரவுதளத்தை உருவாக்கி உள்ளது. (DBT-NATIONAL INSTITUTE OF BIOMEDICAL GENOMICS (NIBMG), KALYANI AN AUTONOMOUS INSTITUTE FUNDED BY THE DEPARTMENT OF BIOTECHNOLOGY, GOVERNMENT OF INDIA HAS CREATED A DATABASE OF GENOMIC VARIATIONS IN ORAL CANCER; THE FIRST OF ITS KIND IN THE WORLD. NIBMG HAS MADE THIS DATABASE PUBLICLY-ACCESSIBLE.)
  • பொது மக்கள் எளிதில நகும் நிலையில் இந்த தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவாமி பிரக்சானந்தா காலமானார்:
  • கேரளாவின் புகழ்பெற்ற “சிவகிரி மடத்தின்” முன்னால் தலைவரான சுவாமி பிரக்சானந்தா, வயது மூப்பின் காரணமாக 99 வயதில் காலமானார் (THE FORMER HEAD OF THE SIVAGIRI MUTT IN KERALA, SWAMI PRAKASHANANDA, PASSED AWAY)
  • இவர், “சிவகிரி ஸ்ரீ நாராயண தர்ம சங்கத்தின்” தலைவராகவும் இருந்துள்ளார்.

Leave a Reply