TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04
TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 04 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04 டிசம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
இந்தியா
2025 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 10500 PM பாரதிய ஜன் ஔஷதி கேந்திராக்கள் திறக்கப்படும்
- மார்ச் 2025க்குள் நாடு முழுவதும் சுமார் 10,500 பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராக்களை (மலிவு விலை மருந்தகங்கள்) (PRADHAN MANTRI BHARTIYA JAN AUSHADHI KENDRAS (PMBJK)) திறக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது
- PMBJK நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது.
2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அணு உலைகளின் எண்ணிக்கை 9 ஆக உயரும்
- ராஜ்யசபாவில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதிலில் வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 9 அணு உலைகள் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- வட இந்தியாவில் முதல் முறையாக ஹரியானா மாநிலத்தின் கோரக்பூரில் புதிய அணு உலை அமைக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது
முதன் முதல்
வால்ட் டிஸ்னியின் முதல் பெண் தலைவராக சூசன் அர்னால்ட் நியமனம்
- வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக சூசன் அர்னால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் // SUSAN ARNOLD NAMED AS FIRST WOMAN CHAIRPERSON OF WALT DISNEY
- 98 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவராவார்
இந்தியாவின் முதல் உள்நாட்டு சர்வர் (சேவையகம்) – ருத்ரா
- நேஷனல் சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (NATIONAL SUPERCOMPUTING MISSION – NSM) கீழ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (C-DAC – CENTRE FOR DEVELOPMENT OF ADVANCED COMPUTING) உருவாக்கப்பட்ட முதல் உள்நாட்டு சேவையகமான ருத்ராவைத் துவக்கி வைத்தார் // UNDER THE NATIONAL SUPERCOMPUTING MISSION (NSM), MINISTRy LAUNCHED India’s FIRST INDIGENOUS SERVER, RUDRA, DEVELOPED BY THE CENTRE FOR DEVELOPMENT OF ADVANCED COMPUTING (C-DAC).
- சேவையக வடிவமைப்பு வணிக சேவையகங்களை உற்பத்தி செய்வதற்கும் பெரிய சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம்.
விளையாட்டு
2021 ஆசிய இளைஞர் பாராலிம்பிக் போட்டியில் காஷிஷ் லக்ரா (F51) தங்கம் வென்றார்
- டோக்கியோ பாராலிம்பியன் காஷிஷ் லக்ரா (F51) 3 டிசம்பர் 2021 அன்று பஹ்ரைனில் நடந்த 2021 ஆசியா யூத் பாராலிம்பிக் போட்டிகளில் கிளப் எறிதலில் (CLUB THROW) தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
- ஈட்டி எறிதலில் லக்சித் (எப்54) வெண்கலமும், ஷாட்புட்டில் சஞ்சய் ஆர்.நீலம் (எப்11) வெண்கலமும் வென்றனர்.
- டிசம்பர் 2 முதல் 6 வரை பஹ்ரைன் 4வது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகளை (BAHRAIN – 4TH ASIAN YOUTH PARA GAMES (AYPG)) நடத்துகிறது.
ஒரு இன்னிங்சில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் அஜாஸ் படேல்
- நியுசிலாந்து நாட்டின் அஜாஸ் படேல் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாறு படைத்தார் // AJAZ PATEL BECOMES THIRD BOWLER TO TAKE ALL 10 WICKETS IN AN INNINGS
- அவர் 119 ரன்களை கொடுத்து 10 விக்கெட்டுகளையும் எடுத்தார்
- ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆசிய யூத் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குண்டு எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை
- பஹ்ரைனின் மனமாவில் நடந்த ஆசிய யூத் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் எஃப்-20 பிரிவில் ஷாட்புட்டில் நாட்டின் முதல் வெள்ளிப் பதக்கத்தை அனன்யா பன்சால் வென்றார் // ANANYA BANSAL WON THE COUNTRY’S FIRST SILVER MEDAL IN SHOTPUT IN THE F-20 CATEGORY AT THE ASIA YOUTH PARALYMPIC GAMES IN MANAMA, BAHRAIN
- அவர் ஒரு அறிவுசார் குறைபாடு கொண்ட ஒரு விளையாட்டு வீராங்கனை // SHE IS AN ATHLETE WITH AN INTELLECTUAL IMPAIRMENT
இடங்கள்
அமேதியில் AK-203 தாக்குதல் துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு ஒப்புதல்
- உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள கோர்வாவில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது // THE CENTRE HAS APPROVED THE PRODUCTION OF OVER FIVE LAKH AK-203 ASSAULT RIFLES AT KORWA IN AMETHI, UTTAR PRADESH.
- இந்தோ-ரஷியன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற சிறப்பு நோக்கக் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அறிவியல், தொழில்நுட்பம்
‘பட்டாம்பூச்சிகளின் தேசம்’ எனப்படும் சிக்கிமின் டிசோங்குவில் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
- வடக்கு சிக்கிமில் உள்ள டிசோங்குவில் புதிய வகை பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- “பட்டாம்பூசிகளின் தேசம்” எனப்படுவது = சிக்கிமின் டிசோங்கோ
- Chocolatebordered Flitter என்று பெயரிடப்பட்ட புதிய இனம் Zographetus dzonguensis என்ற அறிவியல் பெயரையும் கொண்டுள்ளது.
இறப்பு
ஆந்திர முன்னாள் முதல்வர் கொனிஜெட்டி ரோசய்யா காலமானார்
- ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் கொனிஜெட்டி ரோசய்யா 4 டிசம்பர் 2021 அன்று காலமானார் // FORMER ANDHRA PRADESH CHIEF MINISTER KONIJETI ROSAIAH PASSES AWAY
- ரோசய்யா தமிழக ஆளுநராகவும் பதவி வகித்தார்.
- 1968, 1974, 1980 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேச மாநில சட்ட மேலவையில் நான்கு முறை உறுப்பினராக இருந்தார்.
குழு
பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) 100 ஆம் ஆண்டு விழா
- பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) 100 ஆண்டு விழா துவங்கியது // THE CELEBRATION OF 100 YEARS OF THE PUBLIC ACCOUNTS COMMITTEE (PAC) IS SCHEDULED ON DECEMBER 4-5,
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
விருது
ரத்தன் டாடாவுக்கு ‘அசோம் பைபவ்’ விருது
- அசாம் திவாஸை முன்னிட்டு, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு ‘அசோம் பைபவ்’ விருதை வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது // RATAN TATA TO BE CONFERRED WITH THE ‘ASOM BHAIBAV’ AWARD
- மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் அவரது பங்களிப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
நாட்கள்
இந்திய கடற்படை தினம்
- 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது கராச்சி துறைமுகத்தின் மீதான தாக்குதலை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி இந்திய கடற்படை தினம் (INDIAN NAVY DAY) கொண்டாடப்படுகிறது.
- 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய கடற்படை தினத்தின் கருப்பொருள் = INDIAN NAVY – COMBAT READY, CREDIBLE AND COHESIVE
- இந்தியக் கடற்படை என்பது இந்திய ஆயுதப் படைகளின் கடற்படைக் கிளை ஆகும், இது இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தளபதியாக வழிநடத்தப்படுகிறது.
- மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜ், இந்தியக் கடற்படையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
- இந்திய கடற்படை 1612 இல் கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது.
சர்வதேச வங்கிகள் தினம்
- நிலையான வளர்ச்சிகளுக்கு நிதியளிப்பதில் பலதரப்பு மற்றும் சர்வதேச வளர்ச்சி வங்கிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க டிசம்பர் 4 ஆம் தேதி சர்வதேச வங்கிகள் தினம் (INTERNATIONAL DAY OF BANKS IS CELEBRATED ON DECEMBER 4) கொண்டாடப்படுகிறது.
- வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பதில் உறுப்பு நாடுகளில் வங்கி அமைப்புகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த நாளைக் கடைப்பிடிக்கிறது.
திட்டம்
தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் திட்டம் – RE – HAB
- யானைகள் – மனித மோதலைத் தடுக்க சிறிய தேனீக்களை பயன்படுத்தி யானைகளை விரட்டும் “RE-HAB” (REDUCING ELEPHANT HUMAN – ATTACKS USING BEES) என்ற புதிய திட்டத்தை அஸ்ஸாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- இத்திட்டம் அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள மோர்னோய் கிராமத்தில் துவக்கி வைக்கப்பட்டது
- TNPSC NOVEMBER 2021 MONTH CURRENT AFFAIRS PDF
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 03
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 02
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS DEC 01
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS NOV 30
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS NOV 29
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS NOV 28
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS NOV 27
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS NOV 26
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS NOV 25
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS NOV 24
- TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS NOV 23
- TNPSC INDIAN POLITY – TAMIL – NATIONAL CALENDAR
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04/08/2021