Tnpsc General Tamil Part C Bharathiyar

Tnpsc General Tamil Part C Bharathiyar

bharthiyar

பாரதியார்

வாழ்க்கைக் குறிப்பு:

 • இவரின் இயற்பெயர் = சுப்பிரமணியம்
 • ஊர் = எட்டயபுரம்
 • பெற்றோர் = சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள்
 • மனைவி  = செல்லம்மாள்
 • காலம் = 11.12.1882-11.09.1921(39 ஆண்டுகள்)

புனைப் பெயர்கள்:

 • காளிதாசன்
 • சக்திதாசன்
 • சாவித்திரி
 • ஓர் உத்தம தேசாபிமானி
 • நித்திய தீரர்
 • ஷெல்லிதாசன்

சிறப்பு பெயர்கள்:

 • புதுக் கவிதையின் முன்னோடி
 • பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
 • சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
 • நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
 • காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
 • பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
 • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
 • தேசியக்கவி
 • விடுதலைக்கவி
 • அமரக்கவி
 • முன்னறி புலவன்
 • மகாகவி
 • உலககவி
 • தமிழ்க்கவி
 • மக்கள் கவிஞர்
 • வரகவி

உரைநடை நூல்கள்:

 • ஞானரதம்(தமிழின் முதல் உரைநடை காவியம்)
 • தராசு
 • சந்திரிகையின் கதை
 • மாதர்
 • கலைகள்

கவிதை நூல்கள்:

 • கண்ணன் பாட்டு
 • குயில் பாட்டு
 • பாஞ்சாலி சபதம்
 • காட்சி(வசன கவிதை)
 • புதிய ஆத்திச்சூடி
 • பாப்பா பாட்டு
 • பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
 • பாரததேவியின் திருத்தசாங்கம்
 • விநாயகர் நான்மணிமாலை

சிறுகதைகள்:

 • திண்டிம சாஸ்திரி
 • பூலோக ரம்பை
 • ஆறில் ஒரு பங்கு
 • ஸ்வர்ண குமாரி
 • சின்ன சங்கரன் கதை
 • நவதந்திரக்கதைகள்
 • கதைக்கொத்து(சிறுகதை தொகுப்பு)

நாடகம்:

 • ஜெகசித்திரம்

பொதுவான குறிப்புகள்:

 • எட்டயப்புர சமஸ்தானப் புலவர்கள் “பாரதி” என்ற பட்டம் அளித்தனர்
 • தம்மை “ஷெல்லிதாசன்” என்று அழைத்துக்கொண்டார்
 • தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடற்கு அளித்தவர்
 • தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்
 • 1905இல் சக்கரவர்த்தினி என்ற இதழ் தொடங்கினார்
 • கர்மயோகி, பாலபாரத் ஆகிய இதழை நடத்தினார்
 • சுதேசி மித்திரன் என்ற இதழின் துணையாசிரியர் ஆக பணிப்புரிந்தார்
 • ”இந்தியா”  என்ற இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
 • சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்
 • நிவேதிதா தேவியைச் சந்தித்த பின் தீவிரவாதி ஆனார்
 • இவரின் ஞானகுரு = நிவேதிதா தேவி
 • இவரின் அரசியல் குரு = திலகர்
 • பதினான்கு மொழிகள் அறிந்தவர்
 • இவர் “தம்பி” என அழைப்பது = பரலி நெல்லையப்பர்
 • பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர்
 • பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் = கிருஷ்ணசாமி ஐயர்
 • பாரதியின் படத்தை வரைந்தவர் “ஆர்ய என்ற பாஷ்யம்”
 • பாரதிக்கு “மகாகவி” என்ற பட்டம் கொடுத்தவர் வ.ரா(ராமசாமி ஐயங்கார்)
 • பாரதி சங்கத்தை தொடங்கியவர் = கல்கி
 • மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
 • இவரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் = விவேகபானு(1904, தலைப்பு = தனிமை இரக்கம்)
 • இவர் கீதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
 • பதஞ்சலி சூத்திரத்திற்கு உரை எழுதி உள்ளார்
 • தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
 • பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொது எனக்கு வருத்தம் உண்டாகிறது. தமிழனை விட மற்றொரு சாதி அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்
 • உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, “கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி” என்கிறார்
 • தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டவர் இவரே
 • “புவியனைத்தும் போற்றத் தமிழ்மொழியைப் புகளில் ஏற்ற, கவியரசன் இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது; நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற் குழைத்தல்! இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று அறிவித்தார்
 • “சுவை புதிது! பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை” என்று சூளுரைத்தார்

சிறப்பு:

 • கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் இவரே
 • பரலி நெல்லையப்பர் = பாரதியார் ஒரு அவதாரப் புருஷர், இவர் நூலைத் தமிழர் வேதமாகக் கொள்வார்களாக
 • நாமக்கல் கவிஞர் = பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும்; இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்
 • கவிமணி = பாட்டுக்கொரு புலவன் பாரதி
 • கவிமணி = இவரின் பாப்பா பாட்டில் நெஞ்சை பறிகொடுத்தேன்
 • பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம்
 • சிற்பி பாலசுப்ரமணியம் = “அவனுக்கு(பாரதி) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டும் தெரியும்; ஜப்பானிய ஹைக்கூ லாவகமும் புரியும். தாகூரையும் அறிவான்; வால்ட் விட்மனின் புதுக்கவிதை ஒளியையும் உணர்வான். காளிதாசனான அவன் ஷெல்லிதாசனாகவும் தன்னை அறிவித்துக் கொண்டவன். சுதந்திரத்தையும் பெண் உரிமையையும் புதுயுகக் கனவுகளையும் நவநவமான மொழிகளில் பேசியவன்” என்கிறார்.
 • அனைவரும் தாய்நாடு எனக் கூற பாரதி மட்டும் தந்தையர் நாடு எனக் கூறியவர்
 • வையாபுரிப்பிள்ளை = இவருடைய பாடல்களில் கருத்தாழமும், ஆற்றலும், எளிமையும், இசை நயமும், தொடர் இன்பமும் ஒருங்கு அமையக் காண்கிறோம். இவ்வளவு சிறந்த கவிஞர் தமிழுலகில் சில நூற்றாண்டுகளாகத் தோன்றவில்லை
 • Dr.H.Cousins = அழகின் தூய – வாய்மையான வடிவத்தை பாரதி கவிதையிலே காண இயலும்

பாரதியை பற்றி பாவேந்தர்:

 • பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
  செந்தமிழ்த் தேனி
  சிந்துக்குத் தந்தை
  குவிக்கும் கவிதைக் குயில்
  இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக்
  கவிழ்க்கும் கவிமுரசு
  நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
  காடு கமழும் கற்பூரச் சொற்கோ
  கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
  திறம் பாட வந்த மறவன் புதிய
  அறம் பாட வந்த அறிஞன்
  என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
  தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
  தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
 • பாரதியார் உலககவி – அகத்தில் அன்பும்
  பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்
  ஒரூர்க்கொரு நாட்டுக்குரிய தான
  ஓட்டைச் சாண் நினைப்புடையார் அல்லர்

மேற்கோள்:

 • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல்
  இனிதாவது எங்கும் காணோம்
 • சொல்லில் உயர்வு தமிச் சொல்லே – அதைத்
  தொழுது படித்திடடி பாப்பா
 • மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்
  கொளுத்துவோம்
 • ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்
 • உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
 • வாக்கினிலே ஒளி உண்டாம்
 • தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
 • செந்தமிழ் நாடென்ற போதினிலே

Read Also: Tnpsc General Tamil Part C Bharathidasan

Pavendar bharathiyar history in tamil

TNPSC Pavendar Bharathidasan

Online Tnpsc General Tamil Practices test

TNPSC General Tamil Part C Bharathiyar 

[WpProQuiz 1]

Leave a Comment

Your email address will not be published.