பரலி சு நெல்லையப்பர்

பரலி சு நெல்லையப்பர்

பரலி சு நெல்லையப்பர்

பரலி சு நெல்லையப்பர் – குறிப்பு

  • பெயர் = பரலி சு. நெல்லையப்பர்
  • பிறப்பு = 1889 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி
  • பெற்றோர் = சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் ஆகியோரின் 2-வது மகன்
  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் பரலிக்கோட்டை
  • மறைவு = 1971 ஆம் ஆடனு மார்ச் மாதம் 28 ஆம் நாள்
  • மறைந்த இடம் = குரோம்பேட்டை

பணியாற்றிய இதழ்கள்

  • சூரியோதயம் (பாரதி நடத்தியது. துணையாசிரியராக பணி)
  • கர்மயோகி (பாரதி நடத்தியது. துணையாசிரியராக பணி)
  • லோகோபகாரி
  • தேசபக்தன்

பரலி சு நெல்லையப்பர்

சிறப்பு பெயர்

  • பாரதியாரியன் புரவலர்
  • பாரதி படைப்புகளின் பதிப்பாளர்

பரலி சு நெல்லையப்பர் படைப்புகள்

  • பாரதி வாழ்த்து
  • உய்யும் வழி
  • பூ லோகத்து சப்த அதிசயங்கள்
  • பகவான் அரவிந்தர் பத்தினிக்கு எழுதிய கடிதங்கள்
  • தமிழ்த் திருமண முறை
  • பாரதியார் சரித்திரம்
  • வ.உ. சிதம்பரம் பிள்ளை சரித்திரம்
  • ஏறத்தாழ 50ஆண்டுகளாகத் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 142 பக்கங்களில்நெல்லைத் தென்றல் என்னும் நூலாக 1966ஆம் ஆண்டு வெளியிட்டார்

பரலி சு நெல்லையப்பர் மொழிபெயர்ப்பாளர்

  • பரலி நெல்லையப்பர் பல்வேறு நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். அவையாவன,
    • பக்கிம் சந்திர சட்டர்சியின்ராதாராணி
    • பக்கிம் சந்திர சட்டர்சியின்சோடி மோதிரம்
    • சுவர்ணலதா(டாக்டர் பா.நடராசனுடன் இணைந்து)
    • காந்தியடிகளின்சுயராஜ்யம்
    • காந்தியடிகளின்சுகவழி
    • சிவானந்தர் உபதேசமாலை

பரலி சு நெல்லையப்பர் வ.உ.சியுடன் தொடர்பு

  • பரலி நெல்லையப்பர், வ.உ.சிதம்பரனாரின் “சுதேசிக் கப்பல்” நிறுவனத்தில் கணக்கராக பணி புரிந்தார்

பரலி சு நெல்லையப்பர்

பரலி சு நெல்லையப்பர்

  • பாரதியாரால் “தம்பி” என அன்புடன் அழைக்கப்பட்டவர்
  • பாரி” என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதினார்
  • இவர் திருமணம் செய்துக் கொள்ள வில்லை. தன்னுடைய இறுதி காலத்தில் “பூங்கோதை” என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார்
  • 1907 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்திலுள்ளசூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கு வ.உ.சி. உள்ளிட்டவர்களைத் திரட்டுவதற்காகத் தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை வ.உ.சி.யின் வீட்டில் முதன்முறையாகக் கண்டார்.
  • 1932ஆம் ஆண்டில் காந்தியடிகளின் கட்டளையை ஏற்று சென்னை சிந்தாரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார்.
  • இறுதி நாட்களில் தான் வாழ்ந்த பகுதிக்கு “பாரதிபுரம்” எனப் பெயர் சூட்டினார்
  • 1921 செப்டம்பர் 11ஆம் நாள் இரவு ஒரு மணிக்கு இறந்த பாரதியாரின் உடலை மறுநாள் சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவருள் நெல்லையப்பரும் ஒருவர்
  • 1908ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 7ஆம் நாள் வ.உ.சி.க்கு இரட்டை வாழ்நாள் தண்டனையும் சிவத்திற்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. இதனைக் கண்டித்து நெல்லையப்பர் கட்டுரையொன்று எழுதினார். அது பாரதியார் நடத்தியஇந்தியா இதழில் வெளியிடப்பட்டது. இதுவே அச்சில் வந்த அவரின் முதற் படைப்பு
  • பாரதியை பற்றி “இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களை தமிழ்நாட்டு மாதர்களும், புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன்” எனக் கூறினார் நெல்லையப்பர்

பாரதி படைப்புக்களை பதிப்பித்தல்

  • பாரதியை ‘நோபல் பரிசு பெறாத தமிழ்நாட்டுத் தாகூர்’ என்று கண்ணன் பாட்டு முன்னுரையில் பரலியார் குறிப்பிடுகிறார்
  • 1917ஆம் ஆண்டு பாரதியாரின்கண்ணன் பாட்டு (ஆகத்து), 19 பாடல்கள் அடங்கிய நாட்டுப்பாட்டு (அக்டோபர்), பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தார்.
  • 1923ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்துபாரதி பிரசுராலயம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தாறு ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.

Leave a Reply