திரு வி க
திரு வி க வாழ்க்கைக்குறிப்பு
- திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதச்சல்னார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
- பெற்றோர் = விருதச்சலனார் – சின்னம்மையார்
- பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
- இவ்வூர், தற்போது தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சன்னியை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.
திரு வி க சிறப்பு பெயர்கள்
- தமிழ்த்தென்றல்
- தமிழ் முனிவர்
- தமிழ் பெரியார்
- தமிழ்ச்சோலை
- தமிழ் புதிய உரைநடையின் தந்தை
- தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
- தொழிலாளர் தந்தை
- பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
- இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
- தமிழ் வாழ்வினர்
- தண்டமிழ்ச் சான்றோர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கற்றல்
- தமிழ் கற்றது = யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம்
- சித்தாந்த சாத்திரம் கற்றது = மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடம்
- இலக்கியம் கற்றது = மறைமலை அடிகளிடம்
- சமய அறிவு பெற்றது = பாம்பன் சுவாமிகளிடம்
திரு வி க உரைநடை நூல்கள்
- முருகன் அல்லது அழகு
- தமிழ்ச்சோலை
- உள்ளொளி
- மேடைத்தமிழ்
- சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
- மனித வாழ்கையும் காந்தியடிகளும்
- பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
- தமிழ்த் தென்றல்
- சைவத்திறவு
- இந்தியாவும் விடுதலையும்
- சைவத்தின் சமரசம்
- கடவுட் காட்சியும் தாயுமானவரும்
- நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
- இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
- தமிழ் ந்நோல்களில் பௌத்தம்
- காதலா? முடியா?சீர்திருத்தமா?
- என் கடன் பணி செய்து கிடப்பதே
- இமயமலை அல்லது தியானம்
- இளமை விருந்து
- பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்
- வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்
செய்யுள் நூல்கள்
- முருகன் அருள் வேட்டல்
- கிறித்துவின் அருள் வேட்டல்
- உரிமை வேட்கை
- திருமால் அருள் வேட்டல்
- சிவன் அருள் வேட்டல்
- புதுமை வேட்டல்
- பொதுமை வேட்டல்
- அருகன் அருகே
- கிறித்து மொழிக்குறள்
- இருளில் ஒளி
- இருமையும் ஒருமையும்
- முதுமை உளறல்
திரு வி க பயண நூல்
- எனது இலங்கை செலவு
இதழ்
- நவசக்தி
- தேசபக்தன்
திரு வி க குறிப்புகள்
- பெரியபுராணத்திற்கு குறிப்புரை எழுதியுள்ளார்.
- திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களுக்கு விரிவுரை அளித்துள்ளார்.
- சென்னை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பனிப் புரிந்தார்.
- இவரின் சொற்பொழிவுகள் எல்லாம் “தமிழ்த்தென்றல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது.
- இவரின் பத்திரிக்கைத் தலையங்கம் எல்லாம் தொகுத்து “தமிழ்ச்சோலை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
- இவரின் மேடைபேச்சுகள் எல்லாம் “மேடைத்தமிழ்” என்ற தளிப்பில் வெளியிடப்பட்டது
- இவரின் செய்யுள் நூல்கள் எல்லாம் “அருள் வேட்டல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது.
திரு வி க சிறப்புகள்
- இந்தியாவிலிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார்.
- “தண்டமிழ்ச் சான்றோர்” என அழைக்கப்படுபவர் திரு.வி.கலியாணசுந்தரனார்.
- திரு.வி.க நடை என்று கூறும் அளவிற்கு தனி நடையை உரைநடையில் கொண்டவர்.
- அடுக்குத் தொடர்கள், வியங்கோள் அமைப்பு, வியப்புத் தொடர்கள், மரபுச் சொற்கள், கவிதை வரிகள், வினாவிடைப் பாங்கு, மேடைப் பேச்சுநடை, புதிய சொல்லாக்கம் ஆகியன இவர் தம் உரைநடையின் தனித்தன்மையாகும்.
- பி.ஸ்ரீ.ஆச்சார்யா = பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம் தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம்.
- “பிரயாணம்” என்ற சொலுக்கு பதிலாக “செலவு” என்ற சொல்லை பயன்படுத்தியவர்.
- எத்துறை பற்றியும் இன்தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என நிறுவியவர் இவரே.
- திரு.வி.காவின் இலக்கிய வாரிசுகள் = மு.வ, கல்கி.
- திரு.வி.க-வைப் பற்றிக் குறிப்பிடும்போது கல்கி கூறுகிறார்: “அவருடைய குணாதிசயங்களுக்குள்ளே என் ஞாபகத்தில் மேலோங்கி நிற்பது ‘அவர் எவ்வளவு நல்லவர்’ என்பதேயாகும். இந்த உலகத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய பேறு இதைக் காட்டிலும் வேறு என்ன இருக்கிறது?”
- சங்க இலக்கியங்கள் பற்றி திரு.வி.க இவ்வாறு அழைக்கிறார்.
-
- இயற்கை ஓவியம் = பத்துப்பாட்டு
- இயற்கை இன்பக்கலம் = கலித்தொகை
- இயற்கை வாழ்வில்லம் = திருக்குறள்
- இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் = சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
- இயற்கைத் தவம் = சிந்தாமணி
- இயற்கைப் பரிணாமம் = கம்பராமாயணம்
- இயற்கை அன்பு = பெரியபுராணம்
- இயற்கை இறையுறையுள் = தேவார திருவாசக திருவாய் மொழிகள்
-
உரைநடை
Very useful 👍