TNPSC GROUP 4 CURRENT AFFAIRS IN TAMIL NOV 28

Table of Contents

TNPSC GROUP 4 CURRENT AFFAIRS IN TAMIL NOV 28

TNPSC GROUP 4 CURRENT AFFAIRS IN TAMIL NOV 28 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தேசிய மாணவர் படை தினம்

TNPSC GROUP 4 CURRENT AFFAIRS IN TAMIL NOV 28

  • நேஷனல் கேடட் கார்ப்ஸ் (NCC) எனப்படும் தேசிய மாணவர் படையின் 78-வது ஆண்டு தினம், நவம்பர் 28 ஆம் தேதி கொண்டாடப்பட்டது / NATIONAL CADET CORPS (NCC) CELEBRATED THE 73RD ANNIVERSARY OF ITS RAISING ON 28 NOV
  • நவம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை NCC தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • நேஷனல் கேடட் கார்ப்ஸ் என்பது இந்திய ஆயுதப் படைகளின் இளைஞர் பிரிவாகும், அதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாகும்.

மணிப்பூரில் இந்திய ரயில்வே உலகின் மிக உயரமான பாலத் தூணைக் கட்டுகிறது

TNPSC GROUP 4 CURRENT AFFAIRS IN TAMIL NOV 28

  • உலகின் மிக உயரமான பாலத் தூண் மணிப்பூரில் இந்திய ரயில்வேயால் கட்டப்பட்டு வருகிறது / WORLD’S TALLEST BRIDGE PIER IS BEING BUILT IN MANIPUR BY THE INDIAN RAILWAYS.
  • 141 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்த பாலம், ஐரோப்பாவில் உள்ள மாண்டினீக்ரோவில் உள்ள மாலா – ரிஜேகா வைடக்டில் தற்போதுள்ள 139 மீட்டர் சாதனையை முறியடிக்கும்.
  • இந்த திட்டம் மணிப்பூரின் தலைநகரை நாட்டின் அகலப்பாதை நெட்வொர்க்குடன் இணைக்கும் 111 கிமீ நீளமுள்ள ஜிரிபாம்-இம்பால் ரயில் பாதையின் ஒரு பகுதியாகும்.

சிவப்பு கிரக தினம்

TNPSC GROUP 4 CURRENT AFFAIRS IN TAMIL NOV 28

  • சிவப்பு கிரக தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 28 அன்று அனுசரிக்கப்படுகிறது / THE RED PLANET DAY IS OBSERVED ON NOVEMBER 28 EVERY YEAR.
  • 1964 ஆம் ஆண்டு ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் நாசா மூலம் மரைனர் 4 என்ற ரோபோட்டிக் இன்டர்பிளேனட்டரி ப்ரோப் ஏவப்பட்டதை நினைவுகூரும் நாள்.

உலகின் முதல் மல்டிமாடல் மூளை இமேஜிங் தரவு மற்றும் பகுப்பாய்வு தளம் – ஸ்வதேஷ்

TNPSC GROUP 4 CURRENT AFFAIRS IN TAMIL NOV 28

  • DBT-தேசிய மூளை ஆராய்ச்சி மையம் (DBTNBRC = DBT-NATIONAL BRAIN RESEARCH CENTRE) சமீபத்தில் SWADESH திட்டத்தை உருவாக்கியுள்ளது // SWADESH, WORLD’S FIRST MULTIMODAL BRAIN IMAGING DATA AND ANALYTICS
  • SWADESH என்பது பெரிய அளவிலான மல்டிமாடல் நியூரோஇமேஜிங் தரவுத்தளமாகும், இது இந்திய மக்களுக்காக குறிப்பாக பெரிய தரவு கட்டமைப்பு மற்றும் பல்வேறு நோய் வகைகளுக்கான பகுப்பாய்வுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்க மயில் விருது

TNPSC GROUP 4 CURRENT AFFAIRS IN TAMIL NOV 28

  • கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 52வது பதிப்பின் நிறைவு விழாவில் ஜப்பானிய இயக்குனர் மசகாசு கனேகோவின் ரிங் வாண்டரிங் அவர்களுக்கு தங்க மயில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது // JAPANESE DIRECTOR MASAKAZU KANEKO’S RING WANDERING BAGGED THE COVETED GOLDEN PEACOCK AWARD AT THE CLOSING CEREMONY OF THE 52ND EDITION OF THE INTERNATIONAL FILM FESTIVAL OF INDIA (IFFI), IN GOA

பிரிக்ஸ் சிறந்த திரைப்பட விருது

  • பிரிக்ஸ் சிறந்த திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    1. சிறந்த நடிகர் = தனுஷ் (படம் – அசுரன் – இந்தியா)
    2. சிறந்த நடிகை = லாரா போல்டோரிணி (படம் – ON WHEELS – பிரேசில்)
    3. சிறந்த திரைப்படம்,
    4. சிறப்பு ஜூரி விருது = இயக்குனர் யான் ஹான் (A LITTLE RED FLOWER – சீனா)

உலகிலேயே முதன்முறையாக முழு டிஜிட்டல் 3டி அச்சிடப்பட்ட செயற்கைக் கண் பொருத்தப்பட்ட நபர்

  • உலகிலேயே முதன்முறையாக முழு டிஜிட்டல் 3டி அச்சிடப்பட்ட செயற்கைக் கண் இங்கிலாந்தில் பொருத்தப்பட்டது / STEVE VERZE BECAME WORLD’S 1ST PERSON TO HAVE FULLY 3-D PRINTED EYES
  • 47 வயதான ஸ்டீவ் வெர்ஸ் என்பவருக்கு இக்கண் பொருத்தப்பட்டுள்ளது
  • லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியின் புதிய புத்தகம்

  • ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான மரூப் ராசா என்பவர், “CONTESTED LANDS: INDIA, CHINA AND THE BOUNDARY DISPUTE” என்ற தனது புதிய புத்தகத்தில் சீனாவுடனான இந்தியாவின் எல்லைகளின் வரலாற்றுப் பின்னணி மற்றும் சிக்கல்கள் பற்றி விரிவாக கூறுகிறது.

உலக பாரா பவர் லிப்டிங்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்

  • ஜார்ஜியாவில் நடைபெறும் உலக பாரா பவர் லிப்டிங் சாம்பியன்சிப்பில் இந்திய வீரர் பரம்ஜீத் குமார் வெண்கலப் பாதகம் வென்றார்
  • இதன் மூலம், உலக சாம்பியன்சிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்
  • ஆடவருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்ட பரம்ஜீத், 3-வது இடத்தை பிடித்தார்.

பிரதமருக்கு நன்றி கூறிய விசில் கிராம மக்கள்

  • மேகாலயாவில் இயற்கை எழில் சூழ்ந்த “காங்தாங்” என்ற கிராமத்தை ஐ.ணா சபையின் உலக சுற்றுலா அமைப்பின் போட்டிக்கு இந்தியா முன்மொழிந்தது.
  • அதற்கு நன்றி கூறி “விசில் கிராமம்” எனப்படும் “காங்தாங்” கிராம மக்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற முதல் தமிழக பள்ளி

  • ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சமையல் கூடத்திற்கு, தமிழகத்திலேயே முதல் முறையாக ஐ.எஸ்.ஓ தரச் சான்று தரப்பட்டுள்ளது
  • அப்பள்ளி தலைமை ஆசிரியை மாலாவை அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டினார்.

துணைக் குடியரசுத் தலைவர் வெளியிட்ட புதிய புத்தகம்

  • துணைக் குடியரசுத் தலைவர் திரு வெங்கையா நாயுடு, “DEMOCRACY, POLITICS AND GOVERNANCE” என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டார்
  • இப்புத்தகத்தை எழுதியவர் = டாக்டர் சூர்யபிரகாஷ்

மிகவும் வேகமாக சுழலும் வெள்ளை நிற குள்ள நட்சத்திரம்

  • LAMOST J51+195226.9 (சுருக்கமாக J0240+1952) எனப்படும் ஒரு இறந்த வெள்ளை குள்ள நட்சித்திரம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரத்திலேயே மிகவும் வேகமாக சுழலுகிறது // IT’S A WHITE DWARF STAR, NAMED LAMOST J024048.51+195226.9 (J0240+1952 FOR SHORT) AND LOCATED 2,015 LIGHT-YEARS AWAY, AND IT HAS AN INSANE ROTATION RATE OF JUST 25 SECONDS
  • இது ஒவ்வொரு 25 நொடிக்கு ஒருமுறை சுழலுகிறது
  • இது 2015 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ளது

பயங்கரவாதம் மற்றும் நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான BIMSTEC கூட்டுப் பணிக்குழுவின் 9வது கூட்டம்

  • பயங்கரவாதம் மற்றும் நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான BIMSTEC கூட்டுப் பணிக்குழுவின் 9வது கூட்டம், பூட்டான் நாட்டின் தலைமையில் கானொளியில் நடைபெற்றது // 9TH MEETING OF THE BIMSTEC JOINT WORKING GROUP ON COUNTER TERRORISM AND TRANSNATIONAL CRIME
  • கூட்டத்தில் அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.

 

 

Leave a Reply