TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 20

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 20

TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 20 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது

TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 20

  • உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்தியாவின் பிரபல முன்னாள் பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவிற்கு வழங்கப்பட்டது / BWF GIVES PRAKASH PADUKONE LIFETIME ACHIEVEMENT AWARD
  • 2018 ஆம் ஆண்டில், அவருக்கு இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் (BAI) வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானியின் முதல் நாவல்

TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 20

  • மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி தனது முதல் நாவலான “லால் சலாம்” மூலம் எழுத்தாளராக மாறியுள்ளார் / SMRITI IRANI BECOMES AUTHOR WITH HIS FIRST NOVEL “LAL SALAAM”
  • ஏப்ரல் 2010 இல் தண்டேவாடாவில் 76 சிஆர்பிஎஃப் வீரர்களின் சோகமான கொலைகளை பற்றி விவரிக்கிறது இந்நாவல்
  • இந்நாவல் இளம் இராணவ வீரரான விக்ரம் பிரதாப் சிங் பற்றியது ஆகும்

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது

TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 20

  • டாக்காவில் நடைபெற்ற 22-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021ல் இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றது.
  • சாம்பியன்ஷிப்பின் இறுதி நாளில் இந்தியாவின் ரிகர்வ் வில்வித்தை அணிகள் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் சேர்த்தன.
  • ஒருவாரம் நீடித்த கான்டினென்டல் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம் என ஏழு பதக்கங்களுடன் முடிந்தது.

இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பட்டத்தை தொடர்ந்து 5வது முறையாக இந்தூர் பெற்றுள்ளது

TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 20

  • மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம், 20 நவம்பர் 2021 அன்று மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷன் 2021 இன் கீழ் தொடர்ச்சியாக 5வது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது / MADHYA PRADESH’S INDORE CITY HAS BEEN DECLARED AS INDIA’S CLEANEST CITY FOR 5TH TIME IN A ROW UNDER THE CENTRE’S SWACHH SURVEKSHAN 2021
  • சூரத் (குஜராத்) மற்றும் விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
  • இந்திய மாநிலங்களில், நாட்டின் தூய்மையான மாநிலமாக சத்தீஸ்கர் முதலிடத்தைப் பிடித்துள்ளது / CHHATTISGARH HAS BAGGED TOP POSITION AS THE COUNTRY’S CLEANEST STATE.

52வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் துவங்கியது

TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 20

  • ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவின் 52வது பதிப்பு, இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் துவங்கியது / THE 52ND EDITION OF ASIA‟S OLDEST AND INDIA‟S BIGGEST FILM FESTIVAL, THE INTERNATIONAL FILM FESTIVAL OF INDIA (IFFI)
  • 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த திரைப்பட விழா உலக சினிமாவின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் தற்போது கோவா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

56வது டிஜிபி மாநாடு

  • 56-வது டி.ஜி.பிக்கல் மாநாடு உத்திரப்பிரதேசதின் லக்னோ நகரில் துவங்கியது. மாநாட்டை மத்திய அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார் / PRIME MINISTER NARENDRA MODI WILL ATTEND THE 56TH CONFERENCE OF DIRECTOR GENERALS OF POLICE (DGP)
  • மாநாட்டில் பிரதமர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த மாநாட்டில் சைபர் கிரைம், டேட்டா கவர்னன்ஸ், தீவிரவாத எதிர்ப்பு சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்திய போலீஸ் அறக்கட்டளையின் ஸ்மார்ட் போலிசிங் இன்டெக்ஸ் 2021

  • இந்திய போலீஸ் அறக்கட்டளை (ஐபிஎஃப்) நடத்திய ஸ்மார்ட் போலிசிங் இன்டெக்ஸ் 2021 இல் ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • தெலுங்கானா இரண்டாவது இடத்திலும், அசாம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • தமிழ்நாடு = 13-வது இடத்தை பிடித்துள்ளது

திருமதி இந்தியா உலகளாவிய ராணி பட்டம்

  • நவம்பர் 2021 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ்-அல்-கைமாவில் நடைபெற்ற தி ஹாட் மொண்டே மிசஸ் இந்தியா 2021 உலக அளவிலான போட்டியின் இறுதிப் போட்டியில் பூஜா பத்லானி திருமதி இந்தியா உலகளாவிய குயின் – எலிமென்ட் ஏர் என முடிசூட்டப்பட்டார் / POOJA BADLANI WAS CROWNED MRS INDIA WORLDWIDE QUEEN – ELEMENT AIR AT THE GRAND FINALE
  • இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்.

இந்தியாவின் முதல் 3டி கண் அறுவை சிகிச்சை வசதி சென்னையில் தொடங்கப் பட்டது

  • இந்தியாவின் முதல் 3டி கண் அறுவை சிகிச்சை வசதியை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
  • நாட்டின் முதல் முப்பரிமாண கண் அறுவை சிகிச்சை வசதி சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது / THE COUNTRY‟S FIRST THREE-DIMENSIONAL EYE SURGERY FACILITY HAS BEEN DEVELOPED AT CHENNAI’S EGMORE EYE HOSPITAL

பெண்கள் தொழில் முனைவோர் தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று பெண்கள் தொழில் முனைவோர் தினம் (WOMEN ENTREPRENEURSHIP DAY) கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் மகளிர் தொழில்முனைவோர் தின அமைப்பு (WEDO – WOMEN‟S ENTREPRENEURSHIP DAY ORGANISATION) என்ற அமைப்பின் சிந்தனையில் உருவானது.

உலக குழந்தைகள் தினம்

  • உலக குழந்தைகள் தினம் (WORLD CHILDREN’S DAY) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது முதன்முதலில் 1954 இல் உலகளாவிய குழந்தைகள் தினமாக நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கரு = A BETTER FUTURE FOR EVERY CHILD

உலகின் அதிநவீன MRI ஸ்கேன் வசதி மானேசரில் திறக்கப்பட்டது

  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஹரியானா மாநிலம் மனேசரில் உள்ள தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் (NBRC – NATIONAL BRAIN RESEARCH CENTRE) உலகின் அதிநவீன MRI ஸ்கேன் வசதி மையத்தை துவக்கி வைத்தார் / WORLD’S MOST SOPHISTICATED MRI FACILITY INAUGURATED IN MANESAR
  • இந்த புதிய வசதி தீவிர ஸ்கேனிங் முறைகளை மிக வேகமாக இயக்க முடியும், இது முந்தைய தலைமுறை இயந்திரங்களில் இருந்து நோயாளிகளுக்கான ஸ்கேனிங் நேரத்தை கிட்டத்தட்ட கால் பங்காக குறைக்கிறது

இந்திரா காந்தி அமைதிப் பரிசு

  • 2021 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதத்துறப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு சிவில் சமூக அமைப்பான பிரதம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது / THE INDIRA GANDHI PRIZE FOR PEACE, DISARMAMENT, AND DEVELOPMENT FOR 2021 HAS BEEN AWARDED TO CIVIL SOCIETY ORGANIZATION PRATHAM.
  • இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கான கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அதன் முன்னோடி பணிக்காக இது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய வானொலி வானியற்பியல் மைய விஞ்ஞானிகள் சூரியனை விட வெப்பமான எட்டு அரிய நட்சத்திரங் களைக் கண்டு பிடித்துள்ளனர்

  • புனேவைச் சேர்ந்த தேசிய வானொலி வானியற்பியல் மையத்தின் (NCRA – NATIONAL CENTRE FOR RADIO ASTROPHYSICS) வானியலாளர்கள் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு சூரியனை விட வெப்பமான எட்டு அறிய வகை நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளனர்
  • இது GIANT METREWAVE RADIO TELESCOPE (GMRT) மூலம் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இவை MRP அல்லது MAIN-SEQUENCE RADIO PULSE எனப்படும் அரிய வகுப்பைச் சேர்ந்தவை.

குடியரசுத் தலைவர் விஜயம் செய்த மாதிரி கிராமம்

  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சூய் கிராமத்திற்கு வருகை தந்தி, அக்கிராமத்தில் பல்வேறு பொது வசதிகளைத் திறந்து வைத்தார்.
  • ஹரியானா அரசாங்கத்தின் ஸ்வப்ரிட் ஆதர்ஷ் கிராம் யோஜனா (SPAGY) திட்டத்தின் கீழ் மகாதேவி பரமேஸ்வரிதாஸ் ஜிண்டால் அறக்கட்டளை மூலம் இந்த கிராமம் ஆதர்ஷ் கிராமமாக (மாதிரி கிராமமாக) உருவாக்கப்பட்டுள்ளது

உலக பாரம்பரிய வாரம் 2021

  • பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் நினைவுச்சின்னங்களின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25 வரை இந்தியா முழுவதும் உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது / WORLD HERITAGE WEEK IS ANNUALLY OBSERVED ACROSS INDIA FROM 19TH TO 25TH NOVEMBER TO PROMOTE THE CONSERVATION OF THE HERITAGE AND THE CULTURE OF MONUMENTS.
  • இந்தியா முழுவதும் உள்ள 40 பாரம்பரிய தளங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன, இதில் 32 கலாச்சார, 7 இயற்கை மற்றும் 1 கலப்பு தளம் அடங்கும்.

வகுப்புவாத நல்லிணக்க பிரச்சார வாரம்

  • வகுப்புவாத நல்லிணக்க பிரச்சார வாரம் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் நவம்பர் 19 முதல் நவம்பர் 25 வரை அனுசரிக்கப்படுகிறது மற்றும் வகுப்புவாத நல்லிணக்க பிரச்சார வாரத்தின் கடைசி வேலை நாள் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
  • இது தன்னாட்சி அமைப்பான தேசிய இன நல்லிணக்கத்திற்கான அறக்கட்டளையால் (NFCH – NATIONAL FOUNDATION FOR COMMUNAL HARMONY) அனுசரிக்கப்படுகிறது.

 

Leave a Reply