TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03/12/2022
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
21 அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு விருது பெற்ற வீரர்களின் பெயர்
- அந்தமான் நிகோபார் தீவில் மனிதர்கள் வசிக்காத 21 தீவுகள் உள்ளன. இவற்றுக்கு ராணுவத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- வீரதீர செயல் புரிந்து போரில் இறக்கும் ராணுவத்தினருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.
- அந்தமானின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள மனிதர்கள் வசிக்காத ‘ஐஎன்ஏஎன்370’ என்ற தீவுக்கு மேஜர் சோம்நாத் சர்மா பெயர் வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த தீவு ‘சோம்நாத் தீப்’ என அழைக்கப்படும். இவர்தான் பரம்வீர் சக்ரா விருதை முதன் முதலில் பெற்றவர்
- மேலும் ‘ஐஎன்ஏஎன்308’ என்ற தீவுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற கவுரவ கேப்டன் கரம் சிங் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 1500 ஆக உயர்வு
- தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயா உயர்த்தப்பட்டுள்ளது.
- இது நடைமுறைக்கு வரும் தேதி = ஜனவரி 1, 2023.
6 மணி நேரத்தில் 6 லிட்டர் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைக்கும் திண்டுக்கல்
- தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமையை மேம்படுத்தும் வகையில் ஆறு மணி நேரத்தில் ஆறு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
- இந்த நடவடிக்கையால் மாவட்டம் கின்னஸ் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.
தாமிரபரணி ஆற்றின் பெயரை “பொருநை” என்ற மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
- தாமிரபரணி ஆற்றின் பெயரை “பொருநை” என மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் உற்பத்தி ஆகிறது.
துப்பாக்கி சுடுதலில் இரட்டை தங்கம் வென்ற சரப்ஜோத் சிங்
- 65வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் (65th National Shooting Championship) நடைபெற்ற இடம் = போபால், மத்தியப்பிரதேசம்
- சரப்ஜோத் சிங் தனிநபர் பிரிவிலும், இருவர் அணி பிரிவிலும் தங்கம் வென்று இரட்டை தங்கத்தை தன்வசப்படுத்தினார்
ப்ரெஸிடென்ட் கோப்பை போட்டியில் துப்பாக்கி சுடும் வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் தங்கம் வென்றார்
- சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF – International Shooting Sport Federation President’s Cup) ப்ரெஸிடென்ட் கோப்பை போட்டிகள் நடைபெற்ற இடம் = கெய்ரோ, எகிப்து
- 10 மீ ரைபிள் பிளே-ஆஃப் போட்டியில் இந்திய வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் தங்கம் வென்றார்.
2022 விஜய் ஹசாரே கோப்பையை வென்றது சௌராஷ்டிரா அணி
- 2022 விஜய் ஹசாரே கோப்பையை வென்ற அணி = சௌராஷ்டிரா (இறுதி போட்டியில் மகாராஸ்டிரா அணியை வீழ்த்தியது) // Saurashtra cricket team wins Vijay Hazare Trophy 2022
- “ரஞ்சி ஒரு நாள் கோப்பை” என அழைக்கப்படும் கோப்பை = விஜய் ஹசாரே கோப்பை // The Vijay Hazare Trophy is also known as the Ranji One-Day Trophy.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி = இங்கிலாந்து // England becomes the first team to score 500 runs on Day 1 of a Test Cricket Match
- பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணி 506/4 ரன்கள் எடுத்தது.
- மொத்தம் 3 சாதனைகள்:
- ஒரே நாளில் 506 ரன்கள் அடிக்கப்பட்டது.
- அதிவேகமாக 500 ரன்கள் (74.4 ஓவர்களில்) அடிக்கப்பட்டது
- ஒரே நாளில் 4 பேட்டர்கள் சதம் அடித்தது.
பாட்மின்டன் ஆசிய கோப்பை மகளிர் 17 வயது பிரிவு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்
- பாட்மின்டன் ஆசிய கோப்பை மகளிர் 17 வயது பிரிவு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளவர் = உனாட்டி ஹூடா
- பாட்மின்டன் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறும் இடம் = தாய்லாந்தின் நோதபுரி நகரம்
பூமியில் இருந்து அதிக தொலைவு சென்று நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் கேப்ஸ்யூல் சாதனை
- பூமியின் இருந்து அதிக தொலைவு சென்ற விண்கலம் = நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் கேப்ஸ்யூல்
- சென்ற தூரம் = 4,01,798 கிலோமீட்டர் தூரம்
- இதற்கு முன்னர் = அப்பல்லோ 13 விண்கலம் 4,00,171 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது
கீதா ஜெயந்தி
- கீதா ஜெயந்தி (கீதா மஹோத்ஸவ்) = சுக்ல பக்ஷத்தின் ஏகாதசி திதியில் (11 வது நாள்)
- இந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி.
- கீதா ஜெயந்தி என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை ஞானத்தை விளக்கிய நாள்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of Persons with Disabilities) = டிசம்பர் 3 ஆண்டு தோறும்
- இந்த ஆண்டின் கருப்பொருள் = Transformative solutions for inclusive development: the role of innovation in fueling an accessible and equitable world
டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்
- டாக்டர் ராஜேந்திர பிரசாத் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ஆவார், அவரது பிறந்த நாள் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு அவரது 137வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
- 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய குடியரசுத் தலைவர் ஆவார்.
- டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1962 இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றார்.
- அவர் ‘சத்யாகிரக இயக்கம்’ மற்றும் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ ஆகியவற்றின் தீவிர பங்கேற்பாளராக இருந்தார், எனவே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
- அவர் மூன்று ஆண்டுகள் பாங்கிபூர் சிறையில் இருந்தபோது, அவர் தனது சுயசரிதையான ‘ஆத்மகதா’ எழுதினார்.
வன்முறை அபாயம் உள்ள நாடுகளின் பட்டியல்
- வன்முறை அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலை (list of nations at risk of violence) வெளியிட்ட அமைப்பு = அமெரிக்காவின் Early Warning Project
- முதல் இடம் = பாகிஸ்தான்
- இந்தியா = 8 வது இடத்தில் உள்ளது
உலகளாவிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் இந்தியா 48வது இடம்
- உலகளாவிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் (ICAO aviation safety ranking) இந்தியா 48வது இடம். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா 102 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ICAO = International Civil Aviation Organization
- முதல் மூன்று இடம் = சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா
சத்யாகிரகி விஞ்ஞானி ஜே.சி.போஸ்
- “சத்யாகிரகி விஞ்ஞானி ஜே.சி. போஸ்ஸின் பங்களிப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்ற இடம் = புதுதில்லி
- தாவரங்களுக்கு உய்ய்ர் உண்டு என்பதனை தனது Crescograph கருவி மூலம் நிரூபித்தவர் = ஜே.சி. போஸ் ஆவார்.
பெண்களுக்கான உலக மாநாடு
- பெண்களுக்கான உலக மாநாடு (World Assembly for Women) நடைபெற்ற இடம் = ஜப்பானின் டோக்கியோ நகரம்
- பாலின சமத்துவம், அரசியலில் பெண்களின் பங்கை மேம்படுத்துதல் போன்ற பிரச்சனைகளை விவாதித்தனர்.
24வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டம் (NOS-DCP)
- 24வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டம் (NOS-DCP) நடைபெற்ற இடம் = சென்னை, தமிழ்நாடு
- NOS – DCP = National Oil Spill Disaster Contingency Plan and Preparedness
- இந்திய கடல் பகுதியில் ஏதேனும் எண்ணெய் மற்றும் இரசாயன கசிவு ஏற்பட்டால் அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.
முதல் ஜி-20 ஷெர்பா கூட்டம்
- முதல் ஜி-20 ஷெர்பா கூட்டம் நடைபெற உள்ள இடம் = உதைபூர், ராஜஸ்தான் // Udaipur will host the first G-20 Sherpa Meeting
- இக்கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் = இந்திய ஷெர்பா அமிதாப் கன்ட்
ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் 2022 விருது
- ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் 2022 (Rashtriya Khel Protsahan Puruskar 2022) விருதை பெற்ற நிறுவனம் = கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (Kalinga Institute of Industrial Technology (KIIT))
- காரணம் = டூட்டி சந்த், ஒலிம்பியன் CA பவானி தேவி, ஒலிம்பியன் ஷிவ்பால் சிங், ஒலிம்பியன் அமித் ரோஹிதாஸ் போன்ற பல உயரடுக்கு விளையாட்டு வீரர்களை KIIT உருவாக்கியுள்ளது
பெய்லி கிஃபோர்ட் பரிசு வென்ற புத்தகம்
- பெய்லி கிஃபோர்ட் பரிசை (Baillie Gifford Prize) வென்ற புத்தகம் = Super-Infinite: The Transformations of John Donne
- இந்நூலின் ஆசிரியர் = பிரிட்டிஷ் எழுத்தாளர் கேத்தரின் ருண்டலின்
கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப் பரிசு 2022
- கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப் பரிசு 2022 (The Kamaladevi Chattopadhyay NIF Book Prize 2022) ஐ வென்ற புத்தகம் = The Chipko Movement: A People’s Movement
- இந்நூலின் ஆசிரியர் = சேகர் பதக்
நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் 2022 இல் சிறந்த இயக்குனருக்கான விருது
- நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் 2022 இல் சிறந்த இயக்குனருக்கான விருது (Best Director Award at the ‘New York Film Critics Circle 2022) = திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி
- படம் = RRR படத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
மத்திய அரசின் வருவாய்த் துறையின் புதிய செயலாளர்
- மத்திய வருவாய்த் துறையின் புதிய செயலாளர் (Secretary in Department of Revenue, Ministry of Finance) = சஞ்சய் மல்ஹோத்ரா
- இவர் ராஜஸ்தான் கேடரின் 1990-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி.
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02/12/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 29/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 28/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 25/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL 19/11/2022