BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022

Table of Contents

BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022

BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியா முழுமையாக மின் வாகனங்களுக்கு மாற 23 லட்சம் கோடி நிதி தேவை – ஆய்வு

  • இந்தியாவில் முழுமையான அளவில் 2 மற்றும் 3 சக்கர மின் வாகனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர 23 இலட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

பாரதியார் பிறந்த நாளை “இந்திய மொழி திருவிழாவாக” கொண்டாட யுஜிசி அறிவிப்பு

  • பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11 ஆம் தேதியை “இந்திய மொழி திருவிழாவாக” கொண்டாட வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.
  • இந்திய மொழிகள் தொடர்பான கண்காட்சியை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் 341 பெண் மாலுமிகள் சேர்ப்பு

  • அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் முதல் முறையாக 341 பெண் மாலுமிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • அக்னிபாதை திட்டத்தின் கீழ் கடற்படையில் 3000 வீரர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 341 பேர் பெண்கள் ஆவர்.

சத்தீஸ்கரில் 76% இடஒதுக்கீடு

  • சத்தீஸ்கரில் அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 76% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாக்கள் அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாக்களை அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்க பிரதமரை சந்திக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆபரேசன் மறுவாழ்வு

  • தமிழ்நாடு காவல்துறையின் “ஆபரேசன் மறுவாழ்வு” மூலம் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆபரேசன் மறுவாழ்வு = பெண்கள், குழந்தைகளை மிரட்டி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்களிடம் இருந்து மீட்டல்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் பெற்ற மூன்று தமிழர்கள்

  • நாடு முழுவதும் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
  • மூவர் = திருமலைக்குமார் (விளையாட்டு வீரர்), செண்பகவல்லி (இசை ஆசிரியை), இந்து உமா (அறிவுசார் மாற்றுத்திறனாளி)

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த பிரெஞ்ச் உணவு “பாகுட்”

BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
  • “பாகுட்”, பிரதான பிரெஞ்சு ரொட்டி – யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது // “Baguette”, the staple French bread — was inscribed into the UNESCO intangible cultural heritage list.
  • பகெட் என்பது மாவு, தண்ணீர், உப்பு மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றால் செய்யப்பட்ட நீண்ட மற்றும் மெல்லிய ரொட்டியாகும்

இந்தியாவின் முதல் நகராட்சி பசுமை பத்திரம்

  • இந்தியாவின் முதல் நகராட்சி பசுமை பத்திரம் வெளியிட உள்ள நகரம் = மத்தியப்பிரதேசத்தின் “இந்தூர்” நகரம் // Indore is planning to issue the nation’s first local government bond
  • தனிப்பட்ட முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு நாட்டின் முதல் உள்ளூர் அரசாங்கப் பத்திரத்தை வெளியிட இந்தூர் திட்டமிட்டுள்ளது.

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தலா 4 தங்கம் வென்ற 2 திருச்சி வீரர்கள்

  • காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்ற இடம் = நியுசிலாந்து
  • திருச்சியை சேர்ந்த தினேஷ் = சப்-ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றார். தனது முந்தைய எடை தூக்கிய சாதனையையும் முறியடித்தார்.
  • திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா = மொத்தம் 500 கிலோ எடையை தூக்கி 4 தங்கம் வென்றுள்ளார்.

ஹாக்கி ஆண்கள் உலகக் கோப்பை போட்டிகள் 2023

  • ஹாக்கி ஆண்கள் உலகக் கோப்பை போட்டிகள் 2023 (FIH Odisha Hockey Men’s World Cup 2023) நடைபெற உள்ள இடம் = இந்தியாவின் பல்வேறு நகரங்களில்
  • 2023 ஜனவரி 13 முதல் துவங்கும் இதன் துவக்கக் விழா நிகழ்ச்சி ஓடிசாவில் நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் இருந்து “பிரிடேட்டர் டிரோன்”களை வாங்கும் இந்தியா

  • அமெரிக்காவிடம் இருந்து இந்திய ராணுவம் 24000 கோடி ரூபாய் மதிப்பிலான டிரோன்களை வாங்க உள்ளது.
  • இந்த டிரோன்களின் பெயர் = 30 எம்.கியூ 9 பி பிரிடேட்டர்”

இந்திய கடற்படை தினம் 2022

BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
  • இந்திய கடற்படை தினம் (Indian Navy Day 2022) 2022 = டிசம்பர் 4 ஆம் தேதி ஆண்டுதோறும்
  • டிசம்பர் 4, 1971 அன்று, ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ கீழ், இந்திய கடற்படை பாகிஸ்தானில் உள்ள கராச்சி கடற்படை தளத்தை தாக்கியது.
  • “இந்திய கடற்படையின் தந்தை” எனப்படுபவர் = சத்திரபதி சிவாஜி மகராஜா.

சர்வதேச வங்கிகள் தினம்

  • சர்வதேச வங்கிகள் தினம் (International Day of Banks) = டிசம்பர் 4 ஆம் தேதி ஆண்டுதோறும்
  • நோக்கம் = வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் வங்கி அமைப்புகளின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்காக

வாழ்வதற்கு மிகவும் அதிக செலவு மிக்க நகரங்களின் பட்டியல்

BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
  • வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரங்களின் பட்டியல் (Most Expensive Cities list) வெளியிட்ட நிறுவனம் = எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ்
  • முதல் இடம் = அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் (2 நகரங்கள் முதலிடம்)
  • பிற இடங்கள் = டெல் அவிவ் (3வது), ஹாங்காங் (4வது), லாஸ் ஏஞ்சல்ஸ் (5வது), சூரிச் (6வது), ஜெனீவா (7வது), சான் பிரான்சிஸ்கோ (8வது), பிரான்ஸ் (9வது), கோபன்ஹேகன் (10வது)
  • வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்களில் முதன்மை நகர்னகள் = சிரியா நாட்டின் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி
  • தமிழகத்தின் “சென்னை” நகரம் = 164 வது இடம்
  • அகமதாபாத் = 165 வது இடம்
  • பெங்களூரு = 161 வது இடம்

இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச யோகா மையம்

BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
BEST CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
  • இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச யோகா மையம் (India’s largest yoga center) திறக்கப்பட்டுள்ள இடம் = ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரின் செனானி தாலுகாவின் மந்தலை கிராமத்தில்.
  • தாவி நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடிதம் எழுதும் திருவிழா “டாக்ரூம்”

  • கலாச்சார அமைச்சகம், தபால் துறையுடன் இணைந்து, புகழ்பெற்ற கடிதம் எழுதும் திருவிழாவான “டாக்ரூமை” புது தில்லி ராஜ்காட்டில் ஏற்பாடு செய்தது // Ministry of Culture organizes “Daakroom”, the letter writing carnival in Association with Department of Post
  • நோக்கம் = இந்தியாவில் கடிதம் எழுதும் கலையை புதுப்பித்தல்

முதல் “பழங்குடியினர் குளிர்கால விழா”

  • முதல் “பழங்குடியினர் குளிர்கால விழா” (First-ever “Tribal Winter Festival”) நடைபெற்ற இடம் = ஜம்மு மற்றும் காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம்
  • நோக்கம்: சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது.

“நிதி கரே” குழு

  • ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னணு தயாரிப்புகளுக்கான நிலையான சார்ஜிங் போர்ட்டாக ‘USB Type-C’ ஐ ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை அமைக்க “நிதி கரே” (Nidhi Khare Committee) தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கிளைமாத்தான் 2022 பரிசு

  • கிளைமாதன் 2022 பரிசை வென்ற நிறுவனம் = கேரளாவின் பசுமை ஸ்டார்ட்அப் நிறுவனமான “ட்ரீ டேக்” // Green start-up of Kerala, “Tree Tag” has won Climathon2022 prize
  • கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) நிகழ்ச்சியில் இப்பரிசு வழங்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த வங்கியாளர் வங்கி விருது 2022

  • ஆண்டின் சிறந்த வங்கியாளர் வங்கி விருது 2022 (பேங்கர்ஸ் பேங்க் ஆஃப் தி இயர் விருது 2022 / Banker’s Bank of the Year Award 2022) = கனரா வங்கி
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது எனப்படும் “எர்த்ஷாட் பரிசு 2022”

  • சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது எனப்படும் “எர்த்ஷாட் பரிசு 2022” (Earthshot Prize 2022) ஐ தெலுங்கானா ஸ்டார்ட்அப் நிறுவனம் “கெய்தி” (Telangana startup “Kheyti”) வென்றுள்ளது.
  • இந்த ஆண்டு 5 வெற்றியாளர்களில், “இயற்கையைப் பாதுகாத்து மீட்டமை” (Protect and Restore Nature category) என்ற பிரிவில் வெற்றி பெற்றுள்ளது.
  • கெய்தி நிறுவனத்தின் தயாரிப்பு = கிரீன் ஹவுஸ் இன் எ பாக்ஸ்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் தம்பதிக்கு உயரிய சமத்துவ விருது

  • இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரி – மேகன் தம்பதிக்கு “உயரிய சமத்துவ விருது” வழங்கப்பட உள்ளது.
  • “ராபர்ட் எப் கென்னடி ரிப்பிள் ஆப் ஹோப்” விருது வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள்

  • மத்திய அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.
  • மொத்தம் 52 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர்

  • இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் (Institute of Cost Accountants of India (ICMAI)) புதிய தலைவர் = விஜேந்தர் ஷர்மா
  • இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் புதிய துணைத் தலைவர் = ராகேஷ் பல்லா.

தேசிய பல்லுயிர் ஆணையத்தின் புதிய தலைவர்

  • தேசிய பல்லுயிர் ஆணையத்தின் (National Biodiversity Commission (NBA)) புதிய தலைவர் = ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சி.அச்சலேந்தர் ரெட்டி
  • தேசிய பல்லுயிர் ஆணையம் அமைந்துள்ள இடம் = சென்னை தரமணி.

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர்

  • தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பகுதி நேர தலைவர் (Chairperson of the National Statistical Commission) = சென்னை கணித நிறுவனத்தில் (CMI) எமரிட்டஸ் பேராசிரியர் ராஜீவ லக்ஷ்மன் கரண்டிகர்.
  • 2005 இல் டாக்டர் சி ரங்கராஜன் கமிஷனின் பரிந்துரையின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு = தேசிய புள்ளியியல் ஆணையம்.

 

 

 

  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 02/12/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 30/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 29/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 28/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 27/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 26/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 25/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 24/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 23/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 22/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 21/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022
  • BEST CURRENT AFFAIRS IN TAMIL 19/11/2022

Leave a Reply