TODAY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 22

Table of Contents

TODAY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 22

TODAY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 22 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22 டிசம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியா

ஐ.நா உலக உணவுத் திட்ட ஆராய்ச்சி – இந்தியா கையொப்பம்

TODAY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 22

  • ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் ஆராய்ச்சிக்கான உடன்பாட்டில் நிதி ஆயோக் கையொப்பம் இட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு = சர்வதேச சிறுதானிய ஆண்டு
  • 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக இருக்கும் நிலையில், அந்த வாய்ப்பை பயன்படுத்தி உலகளவில் அறிவு பரிமாற்றம் செய்வதில் தலைமையேற்க இந்தியாவிற்கு உதவ இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

ஊக்கமருந்து தடுப்பு விதிமீறல் – உலக அளவில் இந்தியா 3-வது இடம்

TODAY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 22

  • கடந்த 2019 ஆம் ஆண்டில் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியது தொடர்பான ஆண்டறிக்கையில் உலக நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில இருக்கிறது
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊக்கமருந்து பயன்பாடு தடுப்பு விதிகள் மீறியதாக 152 நிகழ்வுகள் பதிவாகி உள்ளது.
  • இதில் அதிகபட்சமாக உடற்கட்டமைப்பு (பாடி பில்டிங்) பிரிவில் 57 விதிமீறல்கள் பதிவாகி உள்ளது.
  • விதிமீறலில் முதல் 5 நாடுகள்,
    1. ரஷ்யா
    2. இத்தாலி
    3. இந்தியா
    4. பிரேசில்
    5. ஈரான்
  • விதிமீறலில் முதல் 5 விளையாட்டுக்கள்
    1. உடற்கட்டமைப்பு (பாடி பில்டிங்)
    2. தடகளம்
    3. சைக்கிளிங்
    4. பளு தூக்குதல்
    5. பவர் லிப்டிங்

2020-21 ஆம் ஆண்டில் 81.97 பில்லியன் டாலர்கள் என்ற அதிக வருடாந்திர அன்னிய நேரடி முதலீட்டை (FDI) இந்தியா பதிவு செய்துள்ளது

TODAY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 22

  • 2020-21 ஆம் ஆண்டில் 97 பில்லியன் டாலர்கள் என்ற அதிக வருடாந்திர அன்னிய நேரடி முதலீட்டை (FDI) இந்தியா பதிவு செய்துள்ளது // INDIA HAS RECORDED THE HIGHEST EVER ANNUAL FOREIGN DIRECT INVESTMENT (FDI) OF $81.97 BILLION IN 2020-21.
  • கடந்த 7 நிதியாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 440 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில அதிகளவில் முதலீடு செய்த நாடுகள்,
    1. சிங்கப்பூர் (28%)
    2. மொரீஷியஸ் (22%)
    3. அமெரிக்கா (10%)
    4. நெதர்லாந்து (8%)
    5. ஜப்பான் (6%).
  • கணினி மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் துறையானது 19% அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து சேவை (15%), வர்த்தகம் (8%) மற்றும் தொலைத்தொடர்பு & கட்டுமானம் (உள்கட்டமைப்பு) (தலா 7%) ஆகிய துறைகள் கடந்த இதே காலக்கட்டத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன

மிகவும் புதுமையான ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவில் ஐஐடி ரூர்க்கி முதல் இடத்தைப் பிடித்தது

  • இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT Roorkee) இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மூலம் மிகவும் புதுமையான ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரிவின் கீழ் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • IIT ரூர்க்கியை இந்திய தொழில்துறையின் மதிப்புமிக்க கூட்டமைப்பு (CII) தொழில்துறை கண்டுபிடிப்பு விருதுகளுக்கு தேர்வு செய்துள்ளது.
  • இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) பெற்றன.

தமிழகம்

முதல்வர் காப்பீட்டுத் திட்டப் பயனாளியின் குடும்ப வருமானம் 1.20 லட்சமாக உயர்வு

  • முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்தில் இருந்து, ரூ. 1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தின் இந்தி மொழி பெயர்ப்பு, செம்மொழி தமிழ் இலக்கியத்தின் 9 கன்னட மொழி பெயர்ப்பு புத்தகங்கள்

TODAY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 22

  • தொல்காப்பியத்தின் இந்தி மொழி பெயர்ப்பு மற்றும் செம்மொழி தமிழ் இலக்கியத்தின் 9 கன்னட மொழி பெயர்ப்பு புத்தகங்களை  மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஷ் சர்கார் வெளியிட்டார்.
  • தொல்காப்பியம் ஹிந்தி மொழிபெயர்ப்பில் வசனம் (உரை, ஒலிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புகள்) டாக்டர். எச்.பாலசுப்ரமணியம் மற்றும் பேராசிரியர் கே.நாச்சிமுத்து அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1214 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது.

முதன் முதல்

நிதி ஆயோக்கின் “மாநில மொழியில் புதிய திட்டம்”

  • நாடுமுழுவதும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்தோடு மாநில மொழியில் புதிய திட்டம் (VERNACULAR INNOVATION PROGRAM) என்ற முதன்முறை முயற்சியை அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கமும், நித்தி ஆயோகும் தொடங்கியுள்ளன // ATAL INNOVATION MISSION, NITI AAYOG ON 22 DECEMBER 2021, LAUNCHED THE FIRST OF ITS KIND VERNACULAR INNOVATION PROGRAM.
  • இது 22 தாய்மொழி மொழிகளில் புதுமையான சூழலை அணுகுவதற்கு புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு உதவும்.

100% தடுப்பூசி போடும் முதல் யூனியன் பிரதேசம்

  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகம் டிசம்பர் 19 அன்று யூனியன் பிரதேசம் அதன் தகுதியான மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை முடித்துவிட்டதாக அறிவித்தது.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகம், கோவிஷீல்டை மட்டும் பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவே முதன்மையானது என்று கூறியது.

விளையாட்டு

சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வென்ற பஞ்சாப்

  • சீனியர் தேசிய ஹாக்கி தொட்டில் பஞ்சாப் அணி கோப்பையை வென்றது
  • மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற சீனியர் ஆண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்சிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணி, உத்திரப்பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டதை வென்ற பங்கஜ் அத்வானி

  • தேசிய பில்லியர்ட்ஸ் தொடரில் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டதை வென்றார்.
  • மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சீனியர் தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கஜ் அத்வானி, துருவ சித்வாளா எபாறை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்.

இராணுவம்

ஒடிசா கடற்கரையில் இந்தியா ‘பிரலே’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது

  • இந்தியா டிசம்பர் 22, 2021 அன்று ஒடிசா கடற்கரையில் குறுகிய தூர ஏவுகணையான ‘பிரலே’ என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது // INDIA SUCCESSFULLY TESTS ‘PRALAY’ MISSILE OFF ODISHA COAST
  • DRDO ஆல் உருவாக்கப்பட்ட திட எரிபொருள், போர்க்கள ஏவுகணையானது இந்திய பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் பிருத்வி பாதுகாப்பு வாகனத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • ‘பிராலே’ என்பது 350-500 கிமீ குறுகிய தூரம், 500-1,000 கிலோ எடை தாங்கும் திறன் கொண்ட, தரையிலிருந்து மேற்பரப்புக்கு தாக்கும் ஏவுகணையாகும்.

திட்டம்

தேசிய ஆக்ஸிஜன் மேற்பார்வை திட்டம்

  • உயிர்காக்கும் பொது சுகாதாரப் பொருள் என்ற நிலையில், மருத்துவ ஆக்ஸிஜனின் பங்களிப்பையும், மருத்துவ ஆக்ஸிஜனைக் கையாளுவதில் சுகாதாரப் பணியாளர்களின் திறனை அதிகரிப்பதன் அவசியத்தையும் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய ஆக்ஸிஜன் மேற்பார்வை திட்டத்தைப் (NATIONAL OXYGEN STEWARDSHIP PROGRAM) புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழா

இந்திய நாட்டிய விழா

  • தமிழகத்தின் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடைபெற உள்ளது. இது ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும்.
  • தமிழக சுற்றுலாத் துறை, மத்திய சுற்றுலாத் துறை பங்களிப்புடன் மாமல்லபுரத்தில் ஆண்டு தோறும் இந்திய நாட்டிய விழா நடைபெறுகிறது.

விருது

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை 7-வது முறையாக பெரும் சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனம்

  • மின்சாரத்தை சேமிப்பது, அதேசமயம் செயல்திறன் மிக்க வகையில் செயல்படும் பம்ப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான சி.ஆர்.ஐ பம்ப், மத்திய எரிசக்தி துறையின் “தேசிய எரிசக்தி பாதுகாப்பிற்கான 2021 ஆம் ஆண்டு விருதை” 7-வது முறையாக பெற்றுள்ளது
  • இந்நிறுவனம் இவ்விருதை தொடர்ந்து 5-வது ஆண்டாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் விமான நிலையம் தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை 2021 வென்றுள்ளது

  • ஜிஎம்ஆர் ஹைதராபாத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட், ‘தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2021’ (NECA 2021 – NATIONAL ENERGY CONSERVATION AWARDS 2021) இன் கீழ் ஆற்றல் திறன் பணியகத்தால் தகுதிச் சான்றிதழை வழங்கியுள்ளது.
  • ஆற்றல் சேமிப்புத் துறைகளில் சிறந்த முயற்சிகளுக்காக இது வழங்கப்பட்டுள்ளது.
  • விமான நிலையத் துறையில் இந்த தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே விமான நிலையம் GMR ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் ஆகும் // THE GMR HYDERABAD INTERNATIONAL AIRPORT WAS THE ONLY AIRPORT IN THE AIRPORT SECTOR THAT RECEIVED THIS DISTINCT RECOGNITION.

ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்திற்கு “ஆண்டின் டிஜிட்டல் கண்டுபிடிப்பு” விருது

  • P. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் (JGU) டைம்ஸ் உயர் கல்வி (THE) ஆசியா விருதுகள் 2021 இல் “ஆண்டின் டிஜிட்டல் கண்டுபிடிப்பு” விருதை வென்றுள்ளது // O.P. JINDAL GLOBAL UNIVERSITY (JGU) HAS WON THE “DIGITAL INNOVATION OF THE YEAR” AWARD AT THE TIMES HIGHER EDUCATION (THE) ASIA AWARDS 2021.
  • “ஆண்டின் டிஜிட்டல் கண்டுபிடிப்பு” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய பல்கலைக்கழகம் JGU ஆகும்.

திவ்யா ஹெக்டே தலைமைத்துவ அர்ப்பணிப்புக்கான ஐநா மகளிர் விருதை வென்றார்

  • திவ்யா ஹெக்டே, கடலோர கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்த இந்திய காலநிலை நடவடிக்கை தொழிலதிபர், 2021 பிராந்திய ஆசிய-பசிபிக் மகளிர் அதிகாரமளிக்கும் கோட்பாடுகள் (WEP) விருது வழங்கும் விழாவில், தலைமைத்துவ அர்ப்பணிப்புக்கான ஐக்கிய நாடுகளின் (UN) மகளிர் விருதை வென்றுள்ளார் // DIVYA HEGDE, HAS WON THE UNITED NATION (UN) WOMEN’S AWARD FOR LEADERSHIP COMMITMENT AT THE 2021 REGIONAL ASIA-PACIFIC WOMEN’S EMPOWERMENT PRINCIPLES (WEP) AWARDS CEREMONY.

நாட்கள்

சர்வதேச சேலை தின அணிவகுப்பு உலக சாதனையாக அறிவிப்பு

  • சர்வதேச சேலை தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் பெண்கள், விதவிதமான சேலைகள் அணிந்து, அணிவகுத்து புதிய உலக சாதனை படைத்தனர்
  • ஆண்டு தோறும் டிசம்பர் 21 ஆம் தேதி சர்வதேச சேலை தினம் (WORLD SAREE DAY) கொண்டாடப்படுகிறது.

தேசிய கணித தினம்

  • இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
  • அவரின் பிறந்த தினத்தை “தேசிய கணித தினமாக” இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

நியமனம்

அமெரிக்காவின் திபத் விவகார ஒருங்கினைப்பாளராக இந்திய வம்சாவளி அதிகாரி நியமனம்

  • திபத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த தூதரக அதிகாரி அஸ்ரா செயாவை அமெரிக்க அரசு நியமனம் செய்துள்ளது
  • தற்போது அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக பணியில் இருக்கிறார்.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவராக அதுல் தினகர் ரானே நியமனம்

  • பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட்டின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அதுல் தினகர் ரானே நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிரம்மோஸ் என்பது உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை அமைப்பு ஆகும்

பட்டியல், மாநாடு

உலகில் அதிக நேரம் வேலை செய்யும் பணியாளர்கள் கொண்ட நாடுகள்

  • ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது.
  • உலகத்திலேயே ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளை சேர்ந்த பணியாளர்களே அதிக நேரம் பணி புரிகின்றனர்
  • இந்தியாவில் தான் உலக அளவில் மிக அதிகபட்சமாக வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்யும் பணியாளர்கள் உள்ளனர்
  • அதற்கு அடுத்த படியாக கொலம்பியாவில் 47.6 மணி நேரமும், சீனாவில் 46 மணி நேரமும், துருக்கியில் 45.6 மணி நேரமும் ஒனு புரிகின்றனர்.

 

 

Leave a Reply