TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 02/12/2022

Table of Contents

TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 02/12/2022

TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 02/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியை பாராட்டிய தேர்தல் ஆணையம்

  • இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியை இந்திய தேர்தல் ஆணையம் பாராட்டியது // ECI felicitates Indian Deaf Cricket team ‘T20 Champions Trophy winners’ to mark International Day of Persons with Disabilities
  • காரணம் = காது கேளாதோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டி20 சாம்பியன்ஸ் டிராபியை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தல் காரணமாக
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of Persons with Disabilities) = டிசம்பர் 3
  • தேர்தல் செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதை செயல்படுத்து செயலி = சக்ஷம் ஆப் (Saksham App)

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

இரண்டாவது முறையாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது

  • ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பது = இது இரண்டாவது முறை // India assumes the Presidency of UN Security Council for December 2022
  • 2022 டிசம்பர் மாதத்திற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.
  • டிசம்பர், ஒரு மாத காலம் இந்தியா இப்பதவியில் இருக்கும்.

சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் 19 நீதிபதிகளை நியமனம் செய்து சாதனை செய்ய உள்ளது

  • டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் உச்சநீதிமன்றத்திற்கு 19 நீதிபதிகளை நியமிக்க வாய்ப்புள்ளது. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரை உள்ளது. அதுவரை உச்சநீதிமன்றத்தில் இருந்து பணி ஓய்வு பெறுவோருக்கு ஏற்ப புதிதாக 19 நீதிபதிகளை கொலிஜியம் நியமனம் செய்ய உள்ளது.

தெலுங்கானாவில் அரசு மருத்துவர்களாக திருநங்கைகள் நியமனம்

  • தெலுங்கானா மாநிலத்தில் புகழ் பெற்ற உஸ்மானியா அரசு மருத்துவமனையில் 2 திருநங்கைகள் அரசு மருத்துவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் திருநங்கைகளை 3 ஆம் பாலினமாக அங்கீகரித்து வேலை வைப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா

TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 02/12/2022

  • தமிழகத்தில் “சர்வதேச பலூன் திருவிழா” (International Baloon Festival) நடைபெற உள்ள இடம் = கோவை மாவட்டம் பொள்ளாச்சி.
  • நோக்கம் = சுற்றுலாத்துறையை மேம்படுத்த.

வருமான் வரி வசூலில் தமிழகம் 4 வது இடம்

  • வருமான வரி வசூலில், இந்திய அளவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி 4 வது இடத்தில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் சேலம் மண்டலத்தில் இருந்து அதிகளவு வருமானம் கிடைக்கிறது என தெரிய வநதுள்ளது.

முதல் முறையாக, தலைநகருக்கு வெளியே கடற்படை தின கொண்டாட்டம்

TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 02/12/2022

  • இந்த ஆண்டு முதல் முறையாக, தலைநகருக்கு வெளியே கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ளது // This year, for the first time, Navy Day Celebrations are being conducted outside the National Capital.
  • நடைபெற உள்ள இடம் = விசாகப்பட்டினம்
  • கடற்படை தினம் (Navy Day) = டிசம்பர் 4
  • 1971 ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ (Operation Trident) போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதியை கடற்படை தினமாக (Indian National Navy Day) இந்தியா கொண்டாடுகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக “பாரத் யூரியா” விற்பனையை துவக்கிய ஸ்பிக் நிறுவனம்

  • “பிரதமர் மாராத்திய ஜன உர்வரக் பரியோஜனா” எனப்படும் “ஒரே நாடு, ஒரே உரம்” என்ற திட்டத்தின் படி, “பாரத் யூரியா” விற்பனையை துவக்கிய முதல் நிறுவனம் என்ற சிறப்பை தமிழகத்தின் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் பெற்றுள்ளது.
  • “ஒரே நாடு, ஒரே உரம்” என்ற திட்டத்தின் கீழ் அணைத்து வேதியியல் உணவு மருந்துகள் பெயரின் முன்னே “பாரத்” என்ற பெயர் சேர்க்க வேண்டும்.

பார்வையற்றோருக்கான 3வது டி20 உலகக் கோப்பை

  • பார்வையற்றோருக்கான 3வது டி20 உலகக் கோப்பை (The third T20 World Cup Cricket Tournament for the Blind) போட்டிகள் நடைபெற உள்ள இடம் = இந்தியா (டிசம்பர் 5 முதல் 17 வரை)
  • பங்கேற்கும் நாடுகள் = ஆஸ்திரேலியா, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா
  • இப்போட்டிகளின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டவர் = யுவராஜ்சிங்

உத்திரப்பிரதேச அரசின் “ஒரு மாவட்டம், ஒரு விளையாட்டு”

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டை (One District, One Sport scheme) ஊக்குவிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
  • இத் திட்டத்தின் கீழ், வீரர்கள் தங்கள் மாவட்டத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட குறிப்பிட்ட விளையாட்டில் பயிற்சி பெறுவார்கள்.

“Bravehearts of Bharat: Vignettes from Indian History” புத்தகம் வெளியீடு

  • புத்தகத்தின் பெயர் = Bravehearts of Bharat: Vignettes from Indian History
  • ஆசிரியர் = விக்ரம் சம்பத்

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம்

TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 02/12/2022

  • தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் (National Pollution Control Day) = டிசம்பர் 2 ஆம் தேதி
  • போபால் விஷவாயு சோகத்தில் (டிசம்பர் 2, 1984) உயிரிழந்த விலைமதிப்பற்ற உயிர்களை நினைவுகூரும் நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • போபால் விஷவாயு காரணமான வேதியியல் பொருள் = மெத்தில் ஐசோசயனேட்

அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 02/12/2022

  • அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Abolition of Slavery) = டிசம்பர் 2 ஆம் தேதி
  • அடிமைப்படுத்தல், கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல் மற்றும் கடத்தல் ஆகியவற்றின் தீமைகளை நினைவூட்ட அனுசரிக்கப்படுகிறது

உலக கணினி எழுத்தறிவு தினம்

TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 02/12/2022

  • உலக கணினி எழுத்தறிவு தினம் (World Computer Literacy Day) = டிசம்பர் 2 ஆம் தேதி
  • நோக்கம்: உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய சமூகங்களில் விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை ஏற்படுத்துதல்
  • கருப்பொருள் = Literacy for human-centred recovery: Narrowing the digital divide
  • உலக கணினி எழுத்தறிவு தினம் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து அதிகளவு பணம் பெரும் நாடுகள்

  • உலக வங்கியின் இடம்பெயர்வு மற்றும் மேம்பாடு (World Bank’s Migration and Development) சுருக்கமான அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு பணம் அனுப்புதல் 12% அதிகரித்து 100 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • மெக்சிகோ இரண்டாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளன.

பிரைம் உலகளாவிய நகரங்களின் குறியீட்டு Q3

  • பிரைம் உலகளாவிய நகரங்களின் குறியீட்டு Q3 (Knight Frank report on ‘Prime Global Cities Index Q3 (JulySeptember) 2022) வெளியிடும் நிறுவனம் = நைட் ஃபிராங்க்
  • இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 இந்திய நகரங்கள் = மும்பை (22 வது இடம்), பெங்களூரு (27 வது இடம்) மற்றும் புது தில்லி (36 வது இடம்)
  • முதல் இடம் = துபாய்

ஸ்வர் தரோஹர் திருவிழா

  • ஸ்வர் தரோஹர் திருவிழா (Swar Dharohar Festival) நடைபெற்ற இடம் = புது தில்லி
  • இது ஒரு இசை, கலை மற்றும் இலக்கிய விழா ஆகும்.
  • நோக்கம் = இந்திய மாநிலங்களின் சின்னமான கலை மற்றும் கலாச்சாரம், வளமான இலக்கிய கலை மற்றும் பாரம்பரியத்தை காட்சிப்படுத்த.

“கடமை பாதையில்” முதல் முறையாக “திவ்ய கலா மேளா”

  • ‘திவ்ய கலா மேளா’ (Divya Kala Mela) முதல் முறையாக கர்தவ்ய பாதையில் (கடமை பாதை / ராஜபாதை / Kartavya Path) நடைபெற உள்ளது
  • 22 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

முதல் சில்ஹெட்-சில்சார் திருவிழா

  • முதல் சில்ஹெட்-சில்சார் திருவிழா (first Sylhet-Silchar Festival) நடைபெற்ற இடம் = அசாமின் பராக் பள்ளத்தாக்கில்
  • காரணம் = இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான கலாச்சார உறவுகளைக் கொண்டாட.

கிரித் பரிக் குழு

  • கிரித் பரிக் குழு (Kirit Parekh panel) தனது அறிக்கையை இந்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
  • குழுக்கான காரணம் = இந்தியாவில் எரிவாயு விலை சூத்திரத்தை மறுஆய்வு செய்ய (to review the gas pricing formula in India)
  • குழுவின் பரிந்துரை = ஜனவரி 1, 2026க்குள் இந்தியாவில் எரிவாயு விலைக் கட்டுப்பாட்டை நீக்க பரிந்துரை (It has recommended to deregulate gas prices in India by Jan 1, 2026)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு அமெரிக்காவின் “அமைதி தூதர்” (The Emissary Peace’ award) விருது

  • அமெரிக்காவின் “அமைதி தூதர்” (The Emissary Peace’ award) விருது வழங்கப்பட்டது = இந்திய ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
  • காரணம் = அவரின் உலகளாவிய ‘நான் அமைதிக்காக நிற்கிறேன்’ என்ற பிரச்சாரத்திற்காக

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவர்

  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவர் = ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் // Hansraj Gangaram Ahir assumed charge as Chairperson, National Commission for Backward Classes
  • மகாராஷ்டிராவின் சந்திராபூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
    • தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் துவக்கப்பட்ட தினம் = 14 ஆகஸ்ட் 1993
    • இது ஒரு அரசியலமைப்பு அமைப்பு ஆகும்.
    • 123 வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2017 மற்றும் 102 வது திருத்தச் சட்டம், 2018 இந்திய அரசியலமைப்பின் 338B பிரிவின் கீழ் அரசியலமைப்பு அமைப்பாக மாற்றப்பட்டது.

இந்திய விளம்பர முகவர் சங்கத்தின் புதிய தலைவர்

  • இந்திய விளம்பர முகவர் சங்கத்தின் (Advertising Agencies Association of India (AAAI)) புதிய தலைவர் = பிரசாந்த் குமார்.
  • அவர் 2020-22 வரை AAAI இன் துணைத் தலைவராக பணியாற்றினார்.

 

 

  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 01/12/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 30/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 29/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 28/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 27/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 26/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 25/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 24/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 23/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 22/11/2022
  • TOP TNPSC DAILY CURRENT AFFAIRS 21/11/2022

Leave a Reply