TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நவம்பர் ஜிஎஸ்டி வருவாய் வசூல்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022

  • நவம்பர் 2022 மாத ஜிஎஸ்டி வருவாய் வசூல் = ரூ. 145867 கோடி
  • கடந்த நவம்பர் 2021 மாத வசூலை விட = 11% அதிகம்
  • தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.4 லட்சத்தை தாண்டி வசூலாகியுள்ளது.
  • இதுவரை அதிகமாக ஜிஎஸ்டி வசூலான மாதம் = ஏப்ரல் 2022 (ரூ. 167540 கோடி)
  • நவம்பர் 2022க்கான தமிழகத்தின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.8,551 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.209 கோடியாகவும் உள்ளது.

வாசெனார் ஒப்பந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்தியா

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022

  • வாசெனார் ஒப்பந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஜனவரி 1, 2023 முதல் ஏற்க உள்ளது.
  • 26வது ஆண்டு வாசெனார் ஒப்பந்த கூட்டம் நடைபெற்ற இடம் = வியன்னா நகரம்
  • இந்த அமைப்பில் இந்தியா 42 வது நாடாக 2017 ஆம் ஆண்டு சேர்ந்தது.
  • வாசெனார் ஒப்பந்த அமைப்பில் உள்ள மொத்த நாடுகள் = 42.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

“கானமயில் திட்டத்தை” துவக்க உச்சநீதிமன்றம் கோரிக்கை

  • இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புலிகளுக்கு ஒன்று போல ‘ப்ராஜெக்ட் கிரேட் இந்தியன் பஸ்டர்ட்’ (கானமயில் திட்டம்) (Project Great Indian Bustard (GIB))’ திட்டத்தை தொடங்குவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டது.
  • கானமயில், இந்தியாவின் முதன்மையான புல்வெளி பறவை இனமாகும்.
  • கானமயில் இந்தியாவின் கனமான பறக்கும் பறவை ஆகும்.

உலக பால் உற்பத்தியில் 23% கொண்டுள்ள இந்தியா

  • உலக உற்பத்தியில் 23 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது.
  • அடுத்து அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
  • முதல் 2 பால் உற்பத்தி மாநிலங்கள்: உத்தரப் பிரதேசம் (14.9%), ராஜஸ்தான் (14.6%)

ஜி20 தலைமையை ஏற்ற இந்தியா

  • ஜி20 மைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்ற தினம் = டிசம்பர் 1, 2022
  • ஜி-20 லோகோவைக் கொண்ட யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்கள் உட்பட 100 நினைவுச்சின்னங்கள் 1 டிசம்பர் 2022 முதல் 7 டிசம்பர் 2022 வரை ஏழு நாட்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளன.
  • இந்தியா தனது ஜி-20 தலைவர் காலத்தில் 32 வெவ்வேறு துறைகளில் நாடுகள் முழுவதும் 200 கூட்டங்களை நடத்தவுள்ளது.
  • தமிழகத்தில் “தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் ஐந்து ரதம், மாமல்லபுரம் வெண்ணை உருண்டை கல்” போன்ற இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றில் 3 வது முறையாக உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் அமர்வு

  • உச்ச நீதிமன்ற வரலாற்றில் 3 வது முறையாக முற்றிலும் பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமைதுலாளர்.
  • இதில் 2 பெண் நீதிபதிகள் உள்ளனர் = ஹிமா கோலி மற்றும் பேலா எம் திரிவேதி.
  • இதற்கு முன்னர் பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வு அமைக்கப்பட்டவை = 2013 ஆம் ஆண்டு முதல் முறையாகவும், 2018 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக
  • 2018 இல் அமைக்கப்பட்ட பெண் நீதிபதிகள் அமர்வில் தமிழகத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஆர். பானுமதி பணியாற்றினார்.
  • இந்த அமர்வு திருமண பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை விசாரிக்கும்.

தமிழக முதன்மை கணக்காய்வுத் தலைவராக நெடுஞ்செழியன் நியமனம்

  • தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவராக சி.நெடுஞ்செழியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் ஐ.நா சபை, பல்வேறு நாடுகளில் தணிக்கை அமைப்பில் பணியாற்றியுள்ளார்.

உலகின் முதல் நீராவி மூலம் இயங்கும் விண்கலம்

  • உலகின் முதல் நீராவி மூலம் இயங்கும் விண்கலம் (World’s first steam powered spacecraft) உருவாக்கியுள்ள நாடு = ஜப்பான்
  • பயன்படுத்திய விண்கலம் = EQUULEUS விண்கலம்
  • நீர் உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்தி பூமியின் குறைந்த சுற்றுப்பாதையைத் தாண்டிய உலகின் முதல் வெற்றிகரமான சுற்றுப்பாதை என ஜப்பான் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி

  • தற்போது உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
  • ஹிமா கோலி, பேலா எம் திரிவேதி மற்றும் நாகரத்னா ஆவர்.
  • இவர்களில் நாகரத்னா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2027 ஆம் ஆண்டு பதவி ஏற்பார் என தெரியவந்துள்ளது.
  • அப்பொழுது அவர், உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்பை பெறுவார்.

கூட்டு போர் பயிற்சி “அக்னி வாரியர்”

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022

  • கூட்டுப் போர் பயிற்சியின் பெயர் = அக்னி வாரியர் (Joint Exercise Agni Warrior)
  • பயிற்சி மேற்கொண்ட நாடுகள் = இந்தியா, சிங்கப்பூர்
  • நடைபெற்ற இடம் = மகாராஸ்டிரா மாநிலம் தேவ்லாலி
  • பதிப்பு = 12 வது கூட்டுப் போர் பயிற்சி நிகழ்ச்சி.

ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய புதிய படைப்பிரிவு

  • இந்திய கடலோர காவல்படையின் சென்னை பிராந்தியத்தில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய புதிய படைப்பிரிவு = 840 Sqn // Indian Coast Guard Advanced Light Helicopter Mk-III squadron, 840 Sqn (CG), commissioned in Chennai
  • ஹெலிகாப்டர் = இலகு ரக ஏஎல்எச் எம்கே-III ஹெலிகாப்டர்கள் (ALH Mk-III helicopters)
  • தயாரித்த நிறுவனம் = இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்

“சுதர்சன் பிரஹார்” போர் பயிற்சி

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022

  • “சுதர்சன் பிரஹார்” போர் பயிற்சி (Exercise Sudarshan Prahar) நடைபெற்ற இடம் = ராஜஸ்தான் பாலைவனம்
  • பங்கேற்பாளர் = இந்திய ராணுவத்தின் சுதர்சன் சக்ரா கார்ப்ஸ் படையினர் (Indian Army’s Sudarshan Chakra Corps)
  • நோக்கம் = ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்து ஆயுத சூழலில் புதிய போர் நுட்பங்களைப் பயிற்சி செய்தல்

3 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா தொழில்நுட்பம் அறிமுகம்

  • டிஜி யாத்ரா (Digi Yatra) தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட மூன்று இந்திய விமான நிலையங்கள் = புதுதில்லி, வாரணாசி, பெங்களூரு.
  • பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் = முக அடையாள தொழில்நுட்பம் (Facial Recognition Technology (FRT).
  • நோக்கம் = நிலையத்திற்குள் பயணிகள் ஊழியர்களை நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்த்து விரைவாக செல்ல.

வறட்சி-எதிர்ப்பு அரை-குள்ள கோதுமை மரபணு – Rht13

  • வறட்சி-எதிர்ப்பு அரை-குள்ள கோதுமை மரபணு (drought-resistant semi-dwarf wheat gene) “Rht13” கண்டுபிடித்துள்ள நாடு = இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள ஜான் இன்ஸ் சென்டரில் உள்ள விஞ்ஞானிகள்
  • “Rht13” மரபணு = ‘குறைக்கப்பட்ட உயரம்’ அல்லது அரைக் குள்ள மரபணு
  • Rht13 என்பது ஒரு புதிய வறட்சி-எதிர்ப்பு அரை-குள்ள கோதுமை மரபணு ஆகும், இது உலர்ந்த மண்ணில் வளரும் தன்மை கொண்டது.

உலக எய்ட்ஸ் தினம் 2022

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022

  • உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) = டிசம்பர் 1 ஆம் தேதி
  • உலக எயிட்ஸ் தடுப்பூசி தினம் (World AIDS Vaccine Day) = மே 18.
  • 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் = EQUALIZE
  • குறியீடு = சிவப்பு ரிப்பன் (RED RIBBON)
  • காரணம் = எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த
  • எச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்தும் சிகிச்சை = ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (Antiretroviral Theraphy)
  • எச்.ஐ.வி நோய்க்கு பயன்படுத்தும் சோதனை = எலிசா சோதனை (ELISA Test)
  • AIDS = Acquired Immuno Deficiency Syndrome
  • HIV = Human Immuno deficiency Virus

எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம்

  • எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் (Raising Day of the Border Security Forces (BSF)) = டிசம்பர் 01
  • எல்லைப் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்ட தினம் = 1965, டிசம்பர் 1 ஆம் தேதி
  • தலைமையகம் = புதுதில்லி

சென்னையில் முதலாவது கடலோர பாதுகாப்பு உச்சி மாநாடு

  • முதல் கடலோர பாதுகாப்பு உச்சி மாநாடு (1st Coastal Security summit ) நடைபெற்ற இடம் = சென்னை.
  • கலந்துக் கொண்ட நாடுகள் = இந்தியா, மாலத்தீவு, இலங்கை, மொரீஷியஸ்
  • மாநாட்டின் கருப்பொருள் = கடலோர பாதுகாப்புக்கான கூட்டு முயற்சிகள் // Collaborative Efforts for Coastal Security

விலங்கு தனிமைப்படுத்தல் சோதனை மற்றும் சான்றிதழ் மையம்

  • விலங்கு தனிமைப்படுத்தல் சோதனை மற்றும் சான்றிதழ் (Animal Quarantine Certification Services (AQCS)) மையம்,பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ளது.
  • இதுவாரை நாட்டில் 6 (புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்) விலங்கு தனிமைப்படுத்தல் சோதனை மற்றும் சான்றிதழ் மையம் அமைக்கப்பட்டுள்ளன.

STEM 2022 இன் ஆஸ்திரேலியாவின் சூப்பர் ஸ்டார்கள்

  • STEM 2022 இன் ஆஸ்திரேலியாவின் சூப்பர் ஸ்டார்கள் (Australia’s Superstars of STEM 2022 விருதுக்கு உலகம் முழுவதும் 60 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இதில் இந்தியாவில் இருந்து 3 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் = நீலிமா கடியாலா, டாக்டர் அனா பாபுரமணி மற்றும் டாக்டர் இந்திராணி முகர்ஜி

புவி அழகி 2022

  • புவி அழகி 2022 (மிஸ் எர்த் 2022) பட்டம் வென்றவர் = தென் கொரியாவின் மினா சூ சோய் // South Korea’s Mina Sue Choi was crowned “Miss Earth 2022”
  • அழகிப் போட்டி நடைபெற்ற இடம் = பிலிப்பைன்ஸ்.
    • 2010ல் ‘மிஸ் எர்த்’ பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நிக்கோல் ஃபரியா பெற்றார்

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை செயலாளர் நியமனம்

  • மத்திய அரசின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் = சஞ்சய் குமார்
  • தேசிய கல்வி கொள்கை 2020 நடைமுறை படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் விவாதித்தார்.

 

 

 

  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 30/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 29/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 28/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 27/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 26/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 25/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 24/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 23/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 22/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 21/11/2022
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022

Leave a Reply