TOP TODAY CURRENT AFFAIRS 08/12/2022

Table of Contents

TOP TODAY CURRENT AFFAIRS 08/12/2022

TOP TODAY CURRENT AFFAIRS 08/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்

TOP TODAY CURRENT AFFAIRS 08/12/2022
2022 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் அதிகம் தேடபப்ட்ட வார்த்தைகளை வெளியிட்டுள்ளது.
  • முதல் இடம் = தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் “ஐ.பி.எல்” கிரிக்கெட் போட்டி உள்ளது
  • 2 வது இடம் = கோவின், கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான பதிவுகள்
  • 3 வது இடம் = கத்தார் FIFA கால்பந்து உலகக் கோப்பை
  • 2022 ஆம் ஆண்டில் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை = WORDLE

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஒரு வருடத்தில் 12.82 சதவீத அதிகரிப்பு

  • இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஒரு வருடத்தில் 12.82 சதவீத அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • நவம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 66% அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக (MT) அதிகரித்துள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

இந்தியாவின் முதல் உத்தரவாதப் பத்திர காப்பீட்டு

  • இந்தியாவின் முதல் உத்தரவாதப் பத்திர காப்பீட்டு (India’s first ever Surety Bond insurance product) வெளியிட உள்ள அமைச்சகம் = மத்திய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
  • உத்தரவாதப் பத்திரங்கள் என்பது காப்பீடு செய்யப்பட்ட திட்டத்தை நிறைவு செய்வதற்கான செயல்திறன் அல்லது விநியோகக் கடமையைக் குறிக்கிறது.

பெரு நாட்டின் முதல் பெண் அதிபர்

TOP TODAY CURRENT AFFAIRS 08/12/2022
பெரு நாட்டின் முதல் பெண் அதிபர்
  • பெரு நாட்டின் முதல் பெண் அதிபராக (Peru’s first female President) தேர்வு செய்யப்பட்டவர் = டினா பொலுவார்டே
  • அவர் ஐந்து ஆண்டுகளுக்குள் ஆறாவது பெருவியன் ஜனாதிபதி ஆவார்.

கத்தாரின் நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் கோப்பையை வெளியிடும் முதல் பாலிவுட் நடிகர்

  • கத்தாரின் நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் கோப்பையை வெளியிடும் முதல் பாலிவுட் நடிகர் என்ற சிறப்பை “தீபிகா படுகோன்” பெற்றுள்ளார் // Deepika Padukone to unveil the FIFA World Cup trophy during the finals
  • இறுதிப் போட்டி கத்தாரில் உள்ள லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது.

UPI இல் கிரெடிட் கார்டுகளை ஆதரிக்கும் இந்தியாவின் முதல் கட்டண நுழைவாயில்

  • யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக Razorpay அறிவித்தது // Razorpay becomes India’s First Payment Gateway to support Credit Cards on UPI
  • இந்த அறிமுகத்தின் மூலம், UPIயில் கிரெடிட் கார்டுகளை ஆதரிக்கும் இந்தியாவின் முதல் பேமெண்ட் கேட்வேயாக Razorpay ஆனது.

ஆயுத துப்பாக்கி சுடும் போட்டி

  • ஆயுத துப்பாக்கி சுடும் போட்டி (small arms firing competition) நடைபெற்ற இடம் = உதம்பூரில் உள்ள ஜுகானோவில்
  • இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினருக்கு இடையேயான 3 நாள் சிறிய ஆயுத துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்றது.

எழுத்தாளர் மான்சி குலாட்டியின் “Miracles of Face Yoga” புத்தகம்

  • மானஸ்வானியின் நிறுவனர் மான்சி குலாட்டி, தனது ‘மிராக்கிள்ஸ் ஆஃப் ஃபேஸ் யோகா’ (Miracles of Face Yoga) புத்தகத்தை வெளியிட்டார்.
  • இது முக யோகா பற்றிய விரிவான படைப்பாகும்

சோமாலியாவில் விழுந்த பெரிய விண்கல்லில் இரண்டு புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பு

TOP TODAY CURRENT AFFAIRS 08/12/2022
சோமாலியாவில் விழுந்த பெரிய விண்கல்லில் இரண்டு புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பு
  • சோமாலியாவில் விழுந்த ஒரு பெரிய விண்கல்லில் இரண்டு முற்றிலும் புதிய தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • புதிய தனிமங்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் = எலாலைட் மற்றும் எல்கிஸ்டன்டோனைட் (elaliite and elkinstantonite).

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம்

  • சர்வதேச உலகளாவிய பாதுகாப்பு தினம் (International Universal Health Coverage Day) = டிசம்பர் 11
  • இதை முன்னிட்டு இரண்டு நாள் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் வாரணாசியில் நடைபெற உள்ளது.
  • இதன் கருப்பொருள் = Build the world we want: A healthy future for all

சார்க் சாசன தினம்

TOP TODAY CURRENT AFFAIRS 08/12/2022
சார்க் சாசன தினம்
  • சார்க் சாசன தினம் (SAARC CHARTER DAY) = டிசம்பர் 8
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் அமைப்பான “சார்க்” அமைப்பின் “சார்க் சாசன தினம்” (SAARC CHARTER DAY) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது // THE SOUTH ASIAN ASSOCIATION FOR REGIONAL COOPERATION (SAARC) CHARTER DAY IS OBSERVED EVERY YEAR ON 8TH DECEMBER.
  • 1985 இல் இந்த நாளில், குழுவின் முதல் உச்சிமாநாட்டின் போது, டாக்காவில் சார்க் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் தினம்

TOP TODAY CURRENT AFFAIRS 08/12/2022
இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் தினம்
  • இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் தினம் (Indian navy submarine day) = டிசம்பர் 8
  • இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலானது அதன் முதல் நீர்மூழ்கிக் கப்பலான முந்தைய “ஐஎன்எஸ் கல்வாரி”யை டிசம்பர் 8 ஆம் தேதி இயக்கியதைக் குறிக்கும் வகையில் நீர்மூழ்கிக் கப்பல் தினம் கொண்டாடப்படுகிறது

பிபிசியின் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியல்

  • உலக புகழ் பெற்ற பிபிசி நிறுவனம் உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலை (BBC’s ‘100 Women’ list of influential figures of 2022) வெளியிட்டுள்ளது. இதில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • 4 இந்தியர்கள் = இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஏரோநாட்டிகல் இன்ஜினியர் சிரிஷா பண்ட்லா, புக்கர் வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ மற்றும் சமூக சேவகி சினேகா ஜாவாலே

9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் மற்றும் ஆரோக்யா எக்ஸ்போ 2022

  • 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் மற்றும் ஆரோக்யா எக்ஸ்போ 2022 (9th World Ayurveda Congress & Arogya Expo 2022) நடைபெற்ற இடம் = கோவா
  • 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் & ஆரோக்யா எக்ஸ்போ 2022 டிசம்பர் 8 முதல் 11 வரை கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

17வது பிரவாசி பாரதிய திவாஸ்

  • 17வது பிரவாசி பாரதிய திவாஸ் (17th Pravasi Bhartiya Diwas in Indore) நடைபெற உள்ள இடம் = இந்தூர், மத்தியப்பிரதேசம்
  • 17வது பிரவாசி பாரதிய திவாஸில் (PBD) தலைமை விருந்தினர் = கயானா கூட்டுறவு குடியரசின் தலைவர் டாக்டர் முகமது இர்ஃபான் அலி
  • இளைஞர் பிரவாசி பாரதிய திவாஸ் (Youth Pravasi Bharatiya Divas) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் = ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் (MP) Zaneta Mascarenhas

2022 ஆம் ஆண்டின் உலக விளையாட்டு வீரர்கள்

  • 2022 ஆம் ஆண்டின் உலக விளையாட்டு வீரர் (World Athletes of the Year) = ஸ்வீடன் நாட்டின் மோண்டோ டுப்லாண்டிஸ்
  • 2022 ஆம் ஆண்டின் உலக விளையாட்டு வீராங்கனை (World Athletes of the Year) = உலக சாம்பியனான அமெரிக்க ஹர்ட்லர் சிட்னி மெக்லாலின்

ஆஸ்திரேலியாவில் பிரதமர் பரிசை வென்ற வீணா நாயர்

  • ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர் மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான 2022ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பரிசைப் (Prime Minister’s Prize for Excellence in Science Teaching in Secondary Schools) பெற்றுள்ளார்.
  • அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த “வீணா நாயர்”
  • இவரின் “STEAM PROJECT” (SCIENCE, TECHNOLOGY, ENGINEERING, ARTS AND MATHEMATICS) திட்டத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது

EAG லாரேட் விருது 2022 வென்ற பரோடா வங்கி

  • ரஷ்யாவின் சோச்சியில் நடைபெற்ற நிதிப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் EAG விருதை (EAG Laureate award 2022) வென்ற இந்திய வங்கி = பரோடா வங்கி
  • பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி இதுவாகும்

B20 இந்தியா அமைப்பின் தலைவராக சந்திரசேகரன் நியமனம்

  • B20 இந்தியா அமைப்பின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் = டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் // Tata Sons Chairman N Chandrasekaran Appointed Chair of B20 India
  • சந்திரசேகரன் 100க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களின் டாடா சன்ஸ் வாரியத்தின் தலைவராக உள்ளார்.

நபார்டு வங்கியின் புதிய தலைவர்

  • நபார்டு வங்கி = வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி
  • NABARD = National Bank for Agriculture and Rural Development
  • நபார்டு வங்கியின் புதிய தலைவர் = கே.வி. ஷாஜி.

 

 

 

  • TOP TODAY CURRENT AFFAIRS 07/12/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 06/12/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 05/12/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 04/12/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 03/12/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 02/12/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 01/12/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 30/11/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 29/11/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 28/11/2022
  • TOP TODAY CURRENT AFFAIRS 27/11/2022

 

 

Leave a Reply